எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 200MP கேமரா.. 66W சார்ஜிங்.. ஹானர் போனுக்கு ரூ.5000 விலைகுறைப்பு.. எந்த மாடல்?
ஹானர் 90 ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த போனுக்கு இப்போதும் கூட நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் அமேசான் தளத்தில் ஹானர் 90 ஸ்மார்ட்போன் மாடலுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அதாவது 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஹானர் 90 ஸ்மார்ட்போன் மாடல் ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் HSBC கிரெடிட் கார்டு பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.5000 தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது ஹானர் 90 ஸ்மார்ட்போனை ரூ.17,999 விலையில் வாங்கிவிட முடியும்.

அதேபோல் 12ஜிபி ரேம் கொண்ட ஹானர் 90 (Honor 90) ஸ்மார்ட்போன் மாடலை சலுகையுடன் சேர்த்து ரூ.19,999 விலையில் வாங்கிவிட முடியும். இப்போது இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஹானர் 90 அம்சங்கள் (Honor 90 specifications): ஹானர் போன் 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ஓஎல்இடி (OLED) குவாட் கர்வ்ட் (Quad Curved) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் டிசிஐ-பி3 (DCI-P3) கலர் காமட், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 360Hz டச் சாம்பிளிங் ரேட், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3840Hz பிடபுள்யூஎம் டிம்மிங் ஃபிரிகொன்சி (PWM Dimming Frequency) போன்ற பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

200 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி (மேக்ரோ ஆப்சன்) டெப்த் லென்ஸ் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இதில் 50 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்களில் 4K வீடியோ ரெக்கார்ட்டிங் சப்போர்ட் வருகிறது. எனவே இந்த போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும்.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 4என்எம் (2.5GHz Qualcomm Snapdragon 7 Gen 1 4nm) சிப்செட் வசதியுடன் இந்த போன் வெளிவந்தது. குறிப்பாக மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த சிப்செட். அதேபோல கேமிங் பிரியர்களுக்காக அட்டகாசமான அட்ரினோ 644 ஜிபியு (Adreno 644 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
மேஜிக்ஓஎஸ் 7.1 (MagicOS 7.1) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) உடன் ஹானர் 90 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மிட்நைட் பிளாக் (Midnight Black), டயமண்ட் சில்வர் (Diamond Silver) மற்றும் எம்ரால்டு கிரீன் (Emerald Green) ஆகிய நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது இந்த அசத்தலான ஹானர் 90 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.

5000mAh பேட்டரி வசதியுடன் இந்த அசத்தலான ஹானர் 90 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்குகிறது. அதேபோல் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 66 வாட்ஸ் சூப்பர்சார்ஜ் (SuperCharge) கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
குறிப்பாக 200எம்பி கேமரா, 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஹானர் 90 போன் ஆனது பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். மேலும் விரைவில் ஹானர் நிறுவனம் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.


Click it and Unblock the Notifications