Amazon-ல் இப்படி ஒரு ரோபோ வேலை செய்கிறதா? உங்கள் பார்சல் சரியாக வர ரோபோ தான் காரணமா?

|

Amazon என்று சொன்னதும் உங்கள் நினைவிற்கு என்ன வருகிறது? பெரும்பாலானோருக்கு ஆன்லைன் ஷாப்பிங் செய்வது நினைவிற்கு வரும். இன்னும் சிலருக்கு உங்களுடைய விஷ் லிஸ்ட்டில் ஆட் செய்யப்பட்ட பொருளை எப்போது ஆர்டர் செய்வது என்பது போன்ற எண்ணங்கள் நிச்சயமாக வந்து மறைந்திருக்கும். பல மில்லியன் தயாரிப்புகளை ஒரே இடத்தில் ரீடெயில் செய்யும் அமேசான் நிறுவனம், எப்படி உங்களுடைய ஆர்டரை சரியாகத் தேர்ந்தெடுத்து, டெலிவரி செய்கிறது?

Amazon தளங்களில் பணிபுரியும் AI ரோபோட்கள் மற்றும்  மனிதர்கள்

Amazon தளங்களில் பணிபுரியும் AI ரோபோட்கள் மற்றும் மனிதர்கள்

இதைப் பற்றி என்றாவது யோசித்துள்ளீர்களா? பல மில்லியன் கணக்கான தயாரிப்புகளில் இருந்து இது எப்படி நடைமுறையில் சாத்தியமாகிறது? எப்படி அமேசான் நிறுவனம் இவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறது என்று இப்போது நீங்கள் யோசிக்க துவங்கியிருப்பீர்கள் தானே. Amazon நிறுவனத்தின் இந்த அசாதாரணமான செயல்பாட்டிற்குப் பின்னணியில் AI ரோபோட்கள் மற்றும் அறிவார்த்த சில மனிதர்களின் உதவி மறைந்திருக்கிறது.

நீங்கள் தேர்வு செய்யும் பொருட்களை ரோபோக்கள் தான் பிரிக்கிறது

நீங்கள் தேர்வு செய்யும் பொருட்களை ரோபோக்கள் தான் பிரிக்கிறது

ஆம், நீங்கள் நினைத்துப் பார்த்திட முடியாத அளவிற்கு அமேசானிடம் ரோபோட்கள் வேலை செய்கிறது. உண்மையைச் சொல்லப் போனால், அமேசானில் தான் அதிகமான ரோபோட்கள் இப்போது இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ரோபோட்கள் தான், நீங்கள் தேர்வு செய்யும் பொருட்களின் ஆர்டர்களை சரியாகத் தடம் பிரித்து, உங்கள் வீட்டின் வாசலுக்கே டெலிவரி செய்ய உதவுகிறது. மனிதர்களை விட நீண்ட நேர பணியில் அமேசான் ரோபோட்கள் வேலை பார்க்கிறது.

அமேசான் உடன் இப்போது எவ்வளவு ரோபோக்கள் வேலை செய்கிறது தெரியுமா?

அமேசான் உடன் இப்போது எவ்வளவு ரோபோக்கள் வேலை செய்கிறது தெரியுமா?

அமேசான் நிறுவனத்திடம் இப்போது எத்தனை ரோபோக்கள் செயல்பாட்டில் இருக்கிறது தெரியுமா? டிஜிட்டல் சில்லறை வர்த்தக நிறுவனமான Amazon நிறுவனத்திடம் கிட்டதட்ட 2,00,௦௦௦-திற்கும் மேற்பட்ட ரோபோக்களைக் கொண்டுள்ளது. இந்த ரோபோட்களின் உதவியுடன் தான் அமேசான் நிறுவனம் சுமார் 350 மில்லியனுக்கும் அதிகமான வெவ்வேறு தயாரிப்புகளைச் சரியான நேரத்தில், சரியான இடத்திற்கு டெலிவரி செய்கிறது.

அமேசான் நிறுவனத்தின் புதிய Proteus ரோபோ

அமேசான் நிறுவனத்தின் புதிய Proteus ரோபோ

இப்போது அமேசானுடன் புதிதாக சேர்ந்துள்ள மிக முக்கியமான ரோபோவை பற்றி தான் நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம். அது தான் Proteus. ப்ரொடியஸ் எனப் பெயரிடப்பட்ட இந்த ரோபோ தான் நிறுவனத்தின் முதல் முழு தன்னாட்சி செயல்பாட்டில் தானாக இயங்கக் கூடிய ரோபோ என்று அமேசான் அறிமுகப்படுத்தியுள்ளது. இது அமேசானின் தொழில்நுட்பத்தை நம்பி அதன் கிடங்கைச் சுற்றி துல்லியமாகவும் பாதுகாப்புடனும் செல்லும் படி உருவாக்கப்பட்டுள்ளது.

எதற்காக இந்த ப்ரொடியஸ் ரோபோ பயன்படுத்தப்படுகிறது??

எதற்காக இந்த ப்ரொடியஸ் ரோபோ பயன்படுத்தப்படுகிறது??

எந்தவொரு மேனுவல் உதவியும் இல்லாமல் ப்ரொடியஸ் தன்னந்தனியாக செயல்பட முடியும் என்று Amazon கூறுகிறது. அதாவது, இந்த ப்ரொடியஸ் ரோபோ அதன் கிடங்கின் குறிப்பிட்ட பகுதிகளுக்குள் மட்டும் இயங்கும் என்ற கட்டுப்பாடின்றி, ஒட்டுமொத்த கிடங்கின் இடத்தைச் சுற்றியுள்ள இடங்களில் தன்னிச்சையாகச் செயல்படக்கூடியது. இது ஊழியர்களுடன் சேர்த்து தனது பணியைச் செய்யும் படி உருவாக்கப்பட்டுள்ளது என்று அமேசான் கூறியுள்ளது.

மனிதர்களுடன் இடையூறு இல்லாமல் எப்படி இது செயல்படுகிறது?

மனிதர்களுடன் இடையூறு இல்லாமல் எப்படி இது செயல்படுகிறது?

அமேசான் நிறுவனம் ஒரு உள்ளமைக்கப்பட்ட பச்சை விளக்கை வடிவமைத்துள்ளது. இது ரோபோவுக்கு அருகில் யாராவது இருந்தால் கண்டறியும் சென்சாராக செயல்படும் படி அமைக்கப்பட்டுள்ளது. ப்ரொடியஸ் ரோபோ செல்லும் பாதையில் அல்லது வழியில் ஒரு மனிதன் இந்த ஒளியின் அருகில் வரும்போது, ப்ரொடியஸ் அவர்களை உடனே உணர்கிறது. அவர்கள் விலகிச் செல்வதற்காக ப்ரொடியஸ் காத்திருக்கிறது, அதற்குப் பின் அதன் இயக்கத்தை மீண்டும் தொடங்குகிறது.

தொழில்நுட்பத்திற்கும் மனிதனுக்கும் இடையேயான தொடர்பா இது

தொழில்நுட்பத்திற்கும் மனிதனுக்கும் இடையேயான தொடர்பா இது

இப்போது அனைவரும் இந்த ரோபோட் பற்றி பெருமிதமாகப் பேசக் காரணம், இந்த ரோபோட் தன்னிச்சையாக மனிதர்களுடன் சேர்த்து வேலை செய்கிறது என்பதனால் தான். "தொழில்நுட்பத்திற்கும் மக்களுக்கும் இடையே எளிமையான, பாதுகாப்பான தொடர்புகளை அதிகரிக்கும் வகையில் இது செயல்படக்கூடியது", என்று அமேசான் தெரிவித்துள்ளது. அமேசான் தளத்தில் உள்ள மிகவும் கனமான பேக்கேஜ்களை தூக்கி, இடமாற்றம் செய்ய இவை சிறப்பாக செயல்படுகிறது.

அமேசானில் GoCart-களை கையாளும் Proteus ரோபோ

அமேசானில் GoCart-களை கையாளும் Proteus ரோபோ

Proteus ரோபோ, அமேசானால் பூர்த்தி செய்யும் மையங்கள் மற்றும் வரிசை மையங்களில் வெளிச்செல்லும் GoCart-களை கையாளும் பகுதிகளில் பயன்படுத்தப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. அமேசான் கனமான பொருட்களை எடுத்துச் செல்வதில் ப்ரொடியஸை பயன்படுத்த விரும்புகிறது. இது அதன் மையங்களில் அதிக மனித சக்தியைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தையும் அழுத்தத்தையும் குறைக்கிறது என்றும் அமேசான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமேசான் 5,20,000 மேற்பட்ட ரோபோ யூனிட்களை கொண்டுள்ளதா?

அமேசான் 5,20,000 மேற்பட்ட ரோபோ யூனிட்களை கொண்டுள்ளதா?

அமேசான் நிறுவனம், மனித தொழிலாளர்களை மாற்றியமைத்து, அவர்களுக்குப் பதிலாக ரோபோக்களைக் கொண்டு வருவதாக மீண்டும்-மீண்டும் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், அத்தகைய கூற்றுக்களை நிறுவனம் முற்றிலுமாக மறுக்கிறது. அமேசானின் கூற்றுப்படி, 5,20,000-க்கும் மேற்பட்ட ரோபோ டிரைவ் யூனிட்களைக் கொண்டிருப்பதாக நிறுவனம் கூறுகிறது. அதேபோல், உலகளவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மனிதர்களை வேலைக்குச் சேர்த்துள்ளதாகவும் கூறுகிறது.

Amazon இல் இயங்கும் Cardinal ரோபோட் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Amazon இல் இயங்கும் Cardinal ரோபோட் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ப்ரொடியஸை தவிர, அமேசான் கார்டினல் (Cardinal) எனப்படும் மற்றொரு ரோபோவை தன் வசம் வைத்துள்ளது. கார்டினல் என்ற பெயரே இதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. கார்டினல் என்பது மிகவும் முக்கியமான அல்லது முதன்மையான என்ற அர்த்தத்தைப் பிரதிபலிக்கிறது. இந்த கார்டினல் ரோபோ 50 பவுண்டுகள் வரை எடையைத் தூக்கும் திறன் கொண்ட ஒரு ரோபோடிக் கரங்களாகும். ஆம், இது ரோபோ ஆர்ம்ஸ் வகையைச் சேர்ந்த ஒரு ரோபோவாகும்.

வேகமான டெலிவரிக்கு ரோபோக்கள் தான் காரணமா?

வேகமான டெலிவரிக்கு ரோபோக்கள் தான் காரணமா?

அமேசான் உங்கள் பார்சல்களை முடிந்த வரை வேகமாக டெலிவரி செய்ய இந்த கார்டினல் ரோபோட்கள் பெரிதும் உதவுகின்றன. காரணம், இவை பேக்கேஜ் வரிசையாத்தை ஷிப்பிங் செயல்பாட்டில் முன்னதாக நடத்துகிறது. இதன் விளைவாக விரைவான செயல்முறை நேரம் கிடைக்கிறது மற்றும் அமேசான் ஷிப்பிங் செயல்பாடுகள் மிகவும் சீராக இயங்குகின்றது என்று நிறுவனம் கூறுகிறது. ஏனெனில் கார்டினல் தொகுதி அடிப்படையிலான கையேடு வேலையைத் தொடர்ச்சியான, தானியங்கி வேலையாக மாற்றுகிறது.

விரைவில் டோர் ஸ்டெப் டெலிவரிக்கும் கூட ரோபோட்களா?

விரைவில் டோர் ஸ்டெப் டெலிவரிக்கும் கூட ரோபோட்களா?

இப்படி, ரோபோட்களின் உதவியுடன் தான் அமேசான் நிறுவனம் உங்களின் ஆர்டர்களை பிரித்தெடுத்து, சரியான நேரத்தில் அவற்றைச் சரியான இடத்திற்கு டெலிவரி செய்யும் படி செயல்படுகிறது. நீங்கள் ஆர்டர் செய்யும் ஒரு சிறிய பொருளாக இருந்தாலும், அதை உங்களிடம் சரியாகக் கொண்டு சேர்ப்பதில் நிறுவனம் அதிக கவனம் செலுத்துகிறது. இப்போது, நிறுவனம் அடுத்தகட்டமாக டோர் ஸ்டெப் டெலிவரிக்கும் ரோபோட்களை பயன்படுத்தத் திட்டமிட்டு, சில சோதனையோடங்களை சோதனை செய்து வருகிறது.

Best Mobiles in India

English summary
Amazon Proteus Is The First Fully Automatic Robot From The Company To Work Under With Human Space : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X