Home
News

ஆஹா.. இது தெரியாம போச்சே.. Voter ID இல்லாமல் ஒட்டு போடுவது எப்படி?

2024 ஆம் ஆண்டிற்கான மக்களவை தேர்தலில் (Lok Sabha Elections 2024), வாக்காளர்கள் யாரும் வாக்களிக்கும் உரிமையை இழக்காமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், தேர்தல் ஆணையமானது (Election Commission) மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு சில முக்கிய பரிந்துரைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கி உள்ளது.

வாக்களிக்க வருபவர்கள் கொண்டுவரும் வாக்காளர் அடையாள அட்டையில் (Voter ID Card) ஏதேனும் அச்சுப்பிழை (Typographical Mistake) இருந்தால் அல்லது எழுத்து பிழை (Spelling errors) இருந்தால் அல்லது தற்செயலாக விடுபட்ட விவரங்கள் (Unintentional Omission) ஏதேனும் இருந்தால் அவைகளை புறக்கணிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.

ஆஹா.. இது தெரியாம போச்சே.. Voter ID இல்லாமல் ஒட்டு போடுவது எப்படி?

மேலும் மற்றொரு சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை ஒருவர் கொண்டிருந்தால்..அவர் வந்துள்ள வாக்குச்சாவடியின் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இருந்தால்.. அவர் கொண்டுவந்த வாக்காளர் அடையாள அட்டையானது ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

ஒருவேளை வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள புகைப்படம் பொருந்தாத பட்சத்தில் (discrepancy in the photograph), தேர்தல் ஆணையத்தால் பட்டியலிடப்பட்டுள்ள மாற்று புகைப்பட ஆவணங்களில் (Alternative Photo Identity Documents) ஏதேனும் ஒன்றை சமர்பிப்பதன் மூலம் வாக்களிக்க முடியும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆஹா.. இது தெரியாம போச்சே.. Voter ID இல்லாமல் ஒட்டு போடுவது எப்படி?

அதாவது வாக்காளர் அடையாள அட்டையை தாக்கல் செய்ய முடியாத வாக்காளர்கள் தங்கள் அடையாளத்தை நிரூபிக்க, தங்களிடம் உள்ள மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வழங்கி வாக்களிக்க முடியும் என்று அர்த்தம். அப்படியாக என்னென்ன ஆவணங்களை வோட்டர் ஐடி கார்டுக்கு பதிலாக காட்டலாம் என்க்ரியா பட்டியல் இதோ:

1. ஆதார் அட்டை (Aadhaar Card)
2, பான் அட்டை (PAN Card)
3. ஓட்டுநர் உரிமம் / டிரைவிங் லைசன்ஸ் (Driving license)
4. வங்கி அல்லது தபால் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக்குகள் (Bank or Post Office Passbooks)

ஆஹா.. இது தெரியாம போச்சே.. Voter ID இல்லாமல் ஒட்டு போடுவது எப்படி?

5. தொழிலாளர் அமைச்சகத்தால் (Labour Ministry) வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு (Health insurance smart card)
6. மக்கள் தொகைப் பதிவேட்டின் (National Population Register - NPR) கீழ் தேசிய பதிவாளர் ஜெனரல் வழங்கிய ஸ்மார்ட் கார்டு
7. எம்என்ஆர்இஜிஏ ஜாப் கார்டு (MNREGA Job card)

மேற்கண்ட ஆவணங்கள் எதுவுமே இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்திய பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய அல்லது மாநில அரசுகள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய சேவை ஐ-கார்டுகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்களுக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள் மற்றும் சமூக நீதி அமைச்சகத்தால் வழங்கப்படும் தனிப்பட்ட ஊனமுற்றோர் ஐ-கார்டு போன்றவைகள் போட்டோ ஐடியாக ஏற்கப்படும்.

ஆஹா.. இது தெரியாம போச்சே.. Voter ID இல்லாமல் ஒட்டு போடுவது எப்படி?

நீங்கள் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டைக்கும் விண்ணப்பிக்கலாம். அது எப்படி? ஆன்லைன் வழியாக டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கவும், அதை பதிவிறக்கம் செய்யவும்.. முதலில் நீங்கள் தேசிய வாக்காளர் சேவைகள் போர்ட்டலில் (National Voters Services Portal - NVSP) பதிவு செய்ய வேண்டும்.

என்விஎஸ்பி இணையதளத்தில் பதிவு செய்தல், தேவையான விவரங்களை வழங்குதல் மற்றும் புதிய வாக்காளர்களுக்கான விண்ணப்ப படிவமாக செயல்படும் படிவம் 6-ஐ பூர்த்தி செய்தல் போன்ற வேலைகளை செய்த பின்னர்.. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப நிலையை என்விஎஸ்பி இணையதளத்தில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

ஆஹா.. இது தெரியாம போச்சே.. Voter ID இல்லாமல் ஒட்டு போடுவது எப்படி?

உங்களுக்கான டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை தயார் ஆனதும் என்விஎஸ்பி இணையதளம் வழியாக அதை பதிவிறக்கம் செய்வதற்கான விருப்பம் உங்களுக்கு கிடைக்கும். அதை பதிவிறக்கம் செய்வதற்கு முன்னர், லாக்-இன் செய்வது, தொடர்புடைய விவரங்களை உள்ளிடுவது மற்றும் ஒடிபி மூலம் சரிபார்ப்பது போன்ற செயல்முறைகளை நீங்கள் கடக்க வேண்டியிருக்கும்.

ஒருவேளை உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை கிழிந்தோ அல்லது தொலைந்தோ போய் விட்டால் என்ன செய்வது? உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையானது, சரியான நிலையில் இல்லாதபடி கிழிந்து போய் இருந்தாலோ அல்லது தொலைந்து போய் விட்டாலோ அல்லது திருடப்பட்டு இருந்தாலோ.. அதனுடைய டூப்ளிகேட் காப்பியை (Duplicate Copy) ஆப்லைன் அல்லது ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வாங்கி வைத்து கொள்ளவும்.

நேரடியாக சென்று டூப்ளிகேட் வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது எப்படி?
1. தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு நேரில் சென்று, டூப்ளிகேட் வாக்காளர் அடையாள அட்டைக்கு தேவையான படிவத்தை கோரவும்.
2. பின்னர் உங்கள் பெயர், முகவரி மற்றும் பழைய வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட விவரங்களை கொடுத்து குறிப்பிட்ட படிவத்தை நிரப்பவும்.

3. பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன், கோரப்பட்ட ஆவணங்களின் நகல்களையும் சமர்ப்பிக்கவும்.
4. நீங்கள் கொடுத்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதும், தேர்தல் அதிகாரி உங்களுக்கான டூப்ளிகேட் வாக்காளர் அடையாள அட்டையை வழங்குவார்.
இந்த ஆப்லைன் செயல்முறையின் வழியாக சில நாட்களுக்குள் கூட உங்களுக்கான டூப்ளிகேட் வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கலாம்!

Best Mobiles in India

English summary
New Election Commision Guidelines 2024 Vote Without Voter ID Using Alternative Photo ID Documents
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X