கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
ஏப்ரல் 19 முதல், 20க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல்கட்ட மக்களை தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்காளர்கள் தத்தம் தொகுதிகளில் வாக்களிக்க தங்களுடைய ஒரிஜினல் அல்லது டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும்.
ஒருவேளை கடைசி நேரத்தில் உங்களுடைய அசல் வாக்காளர் அடையாள அட்டையை (Original Voter ID Card) காணவில்லை என்றால் மற்றும் டிஜிட்டல் வோட்டர் ஐடி கார்டையும் (Digital Voter ID Card) கூட உங்களால் டவுன்லோட் செய்ய முடியவில்லை என்றால்.. பயப்பட வேண்டாம்; பதட்டம் அடைய வேண்டாம்.

வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிலாக, வேறு எந்தெந்த ஆவணங்களை காட்டினால் இந்த மக்களை தேர்தலில் உங்களால் வாக்களிக்க முடியும் என்கிற மாற்று அடையாள அட்டைகளின் பட்டியலை (Alternative Documents For Voter ID Card) இந்திய தேர்தல் ஆணையம் (Indian Election Commission) அறிவித்துள்ளது.
வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிலாக 11 மாற்று அடையாள அட்டைகளை பயன்படுத்தி வாக்களிக்க முடியும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கீழ்வரும் 11 ஆவணங்களின் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொண்டு.. வாக்குச் சாவடி மையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அவ்வளவுதான். அந்த 11 மாற்று ஆவணங்களின் பட்டியல் இதோ:

1. ஆதார் அட்டை (Aadhaar Card)
2. வங்கி அல்லது தபால் துறை பாஸ்புக் (Bank or Postal Office Passbook)
3.எம்என்ஆர்இஜிஏ வேலை அட்டை (MNREGA Job Card)
4. தொழிலாளர் அமைச்சகத்தின் திட்டத்தின் (Ministry of Labour) கீழ் வழங்கப்படும் சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு (Health insurance smart card)
5. ஓட்டுநர் உரிமம் (Driving License)
6. இந்திய பாஸ்போர்ட் (IndianPassport)
7. பான் கார்டு (PAN Card)
8. என்பிஆர் (NPR) இன் கீழ் ஆர்ஜிஐ (RGI) வழங்கிய ஸ்மார்ட் கார்டு

9. மத்திய / மாநில அரசு / பொதுத்துறை நிறுவனங்கள் / பப்ளிக் லிமிடெட் நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய சேவை அடையாள அட்டைகள் (Service Identity Cards)
10. எம்.பி.க்கள் / எம்எல்ஏக்கள் / எம்எல்சிகளுக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள்
11. தனித்துவ ஊனமுற்றோர் அடையாள அட்டை (Unique Disability ID Card)
முடிந்தால் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை டவுன்லோட் செய்யவும்? செல்லுபடியாகும் இபிஐசி எண்களை (Valid EPIC numbers) கொண்ட.. அதாவது வாக்காளர் அடையாள அட்டை எண் கொண்ட அனைத்து தகுதியான வாக்காளர்களுமே டிஜிட்டல் வோட்டர் ஐடி கார்ட்டை டவுன்லோட் செய்யலாம். அதன் மூலம் கிடைக்கும் வாக்காளர் அடையாள அட்டையின் பிடிஎஃப் பதிப்பை மொபைல் போன்களில் சேமித்து தனிப்பட்ட க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் அதை அணுகலாம்.
டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை டவுன்லோட் செய்வது எப்படி? ஆன்லைன் வழியாக டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கவும், அதை பதிவிறக்கம் செய்யவும்.. முதலில் நீங்கள் தேசிய வாக்காளர் சேவைகள் போர்ட்டலில் (National Voters Services Portal - NVSP) பதிவு செய்ய வேண்டும்.
என்விஎஸ்பி இணையதளத்தில் பதிவு செய்தல், தேவையான விவரங்களை வழங்குதல் மற்றும் புதிய வாக்காளர்களுக்கான விண்ணப்ப படிவமாக செயல்படும் படிவம் 6-ஐ பூர்த்தி செய்தல் போன்ற வேலைகளை செய்த பின்னர்.. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப நிலையை என்விஎஸ்பி இணையதளத்தில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
உங்களுக்கான டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை தயார் ஆனதும் என்விஎஸ்பி இணையதளம் வழியாக அதை பதிவிறக்கம் செய்வதற்கான விருப்பம் உங்களுக்கு கிடைக்கும். அதை பதிவிறக்கம் செய்வதற்கு முன்னர், லாக்-இன் செய்வது, தொடர்புடைய விவரங்களை உள்ளிடுவது மற்றும் ஒடிபி மூலம் சரிபார்ப்பது போன்ற செயல்முறைகளை நீங்கள் கடக்க வேண்டியிருக்கும்.
ஆப்லைன் செயல்முறை வழியாக டூப்ளிகேட் வோட்டர் ஐடி கார்டை பெறுவது எப்படி?
1. தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு நேரில் சென்று, டூப்ளிகேட் வாக்காளர் அடையாள அட்டைக்கு தேவையான படிவத்தை கோரவும்.
2. பின்னர் உங்கள் பெயர், முகவரி மற்றும் பழைய வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட விவரங்களை கொடுத்து குறிப்பிட்ட படிவத்தை நிரப்பவும்.
3. பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன், கோரப்பட்ட ஆவணங்களின் நகல்களையும் சமர்ப்பிக்கவும்.
4. நீங்கள் கொடுத்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதும், தேர்தல் அதிகாரி உங்களுக்கான டூப்ளிகேட் வாக்காளர் அடையாள அட்டையை வழங்குவார்.
இந்த ஆப்லைன் செயல்முறையின் வழியாக சில நாட்களுக்குள் கூட உங்களுக்கான டூப்ளிகேட் வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கலாம்.


Click it and Unblock the Notifications








