மீனவர் வலையில் சிக்கிய மர்மமான ஆழ்கடல் உயிரினம்.. இது அதிசய மீனா இல்ல அசிங்கமான மீனா?

|

Mysterious Deep Sea Fish : உங்களுக்குத் தெரிந்த ஒரு விசித்திரமான விலங்கின் பெயரைக் குறிப்பிடுங்கள் என்று சொன்னால், நீங்கள் எந்த விலங்கின் பெயரைக் குறிப்பிடுவீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள எங்களுக்கு ஆர்வமாக இருக்கிறது. பெரும்பாலானோர் மனதில், ஆக்டோபஸ் தோன்றியிருக்கலாம், இன்னும் சில விசித்திரமான கற்பனை கொண்ட நபர்களுக்கு டைனோசர் கூட தோன்றியிருக்கலாம். எது எப்படியாக இருந்தாலும்,

மர்மமான ஆழ்கடல் உயிரினம்

மர்மமான ஆழ்கடல் உயிரினம்

உங்கள் எண்ணத்தில் தோன்றிய விலங்குகள் எல்லாம் அவ்வளவு விசித்திரமானவை இல்லை என்று நீங்களே உணரும் அளவிற்கு, மிகவும் விசித்திரமான பார்ப்பதற்கே ஒருவித அருவருப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு விசித்திரமான உயிரினத்தின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த உயிரினம் ஆழ்கடல் வேட்டையன் என்று கூறப்படுகிறது. ஆம், ஆழ்கடலில் இருளில் ராஜ்ஜியம் செய்யும் கொடூரமான விசித்திர விலங்கு இது என்று கடல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மனிதனால் இன்னும் முழுமையாக ஆழ்கடலை ஆராய முடியவில்லை

மனிதனால் இன்னும் முழுமையாக ஆழ்கடலை ஆராய முடியவில்லை

உண்மையைச் சொல்லப் போனால், மனிதனுக்குத் தெரியாத பல புதிரான விஷயங்கள் இன்னும் ஏராளமாக ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்படாமல் மர்மமாகவே இருக்கிறது. மனிதனுக்குத் தெரியாத எண்ணில் அடங்காத பல அறியப்படாத உயிரினங்கள் ஆழ்கடலில் மறைந்து வாழ்ந்துகொண்டிருக்கிறது என்று கடல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். விண்வெளிக்குச் செல்ல முடிந்த மனிதனால், இன்னும் கடலின் முழுமையான ஆழத்தை அளக்க முடியவில்லை.

செவ்வாயில் சிக்கிய பாம்பு தலை போன்ற உருவம்.. வியப்பில் விஞ்ஞானிகள்.. இது என்ன தெரியுமா?செவ்வாயில் சிக்கிய பாம்பு தலை போன்ற உருவம்.. வியப்பில் விஞ்ஞானிகள்.. இது என்ன தெரியுமா?

ஆழ்கடல் கருமை நிற நீர் காடு

ஆழ்கடல் கருமை நிற நீர் காடு

ஆம், பூமியில் உள்ள கடல் வளம் இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை, காரணம் ஆழ்கடல் ஆழத்தின் 80% கூட நம்மால் நெருங்க முடியவில்லை. ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்குப் பிறகு, கடல் நீரின் அழுத்தம் வலுவடைகிறது. சூரியனின் வெளிச்சம் இல்லாத இருள் சூழ்ந்த கருமை நிற நீர் காடாகத் திகழ்கிறது. இந்த இருளில் தான் ஏராளமான மர்மங்களும், கடல் இராட்சசர்களான அரிய வகை உயிரினங்களும் வாழ்கின்றன. இப்படி ஆழ்கடலில் வாழக்கூடிய ஒரு அரிய வகை உயிரினம் தான் இது.

விசித்திரமான கோரமான தோற்றத்துடன் பிடிபட்ட மீன்

விசித்திரமான கோரமான தோற்றத்துடன் பிடிபட்ட மீன்

இந்த புகைப்படத்தில் நீங்கள் பார்க்கும் இந்த விசித்திரமான கோரமான தோற்றத்தை உடைய உயிரினம் ஒரு கடல் விலங்காகும். பெயர் அறியப்படாத இந்த ஆழ்கடல் உயிரினம், ஜேசன் மொய்ஸ் என்ற மீனவரின் வலையில் சிக்கியுள்ளது. ஆஸ்திரேலியாவின் ஆழ்கடல் பகுதிக்கு அருகில் மீன்பிடிக்க சென்ற போது, இந்த விசித்திரமான மீன் சிக்கியதாக அவர் கூறியுள்ளார். அவருடைய வாழ்நாளில் அவர் பார்த்த அசிங்கமான தோற்றத்தை உடைய மீன் இதுவென்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஓ மை காட்! உங்க போன் எவ்வளவு கதிர்வீச்சை வெளியிடுகிறது? உடனே SAR அளவை செக் செய்ங்க!ஓ மை காட்! உங்க போன் எவ்வளவு கதிர்வீச்சை வெளியிடுகிறது? உடனே SAR அளவை செக் செய்ங்க!

அசிங்கமான மீன் என்று பதிவிடப்பட்ட பதிவு

அசிங்கமான மீன் என்று பதிவிடப்பட்ட பதிவு

இந்த அடையாளம் தெரியாத மர்மான உயிரினத்தை அடையாளம் காண விரும்பிய ஜேசன், தனது Trapman Bermagui என்ற பேஸ்புக் பக்கத்தில் இந்த புகைப்படத்தைப் பதிவிட்டு, பயனர்களை இந்த அடையாளம் தெரியாத மீனின் அடையாளத்தைக் கண்டுபிடிக்க உதவுமாறு ஒரு பதிவைப் பதிவிட்டிருக்கிறார். ஜேசன், தனது வாழ்க்கையில் இதுவரை கண்டிராத "அசிங்கமான மீன்" இது என்று குறிப்பிட்டு அந்த பதிவைப் பதிவு செய்துள்ளார்.

உண்மையில் இது ஒரு ப்லோப் பிஷ்-ஆ?

உண்மையில் இது ஒரு ப்லோப் பிஷ்-ஆ?

இவர் பதிவைப் பார்வையிட்ட பல பயனர்கள் இந்த மீன் ஒரு ப்லோப் பிஷ் ஆக இருக்கக் கூடும் என்று கூறியுள்ளனர். ப்லோப் பிஷ் சில நட்சத்திர விடுதிகளில் ஸ்டார் ரேட் உணவாக வழங்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர். பார்ப்பதற்கு அசிங்கமான தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், இதன் சுவை மிகவும் சூப்பராக இருக்குமென்று கேள்விப்பட்டதாகக் கூட ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். இன்னும் சிலர், இது ஒரு மோங்க் பிஷ் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவில் டைனோசர் முட்டை! 2050 இல் டைனோசர் மீண்டும் உயிர் பெறுமா? என்னப்பா சொல்றீங்க?இந்தியாவில் டைனோசர் முட்டை! 2050 இல் டைனோசர் மீண்டும் உயிர் பெறுமா? என்னப்பா சொல்றீங்க?

ஆழ்கடல் சிறந்த வேட்டையர் மோங்க் பிஷ்

ஆழ்கடல் சிறந்த வேட்டையர் மோங்க் பிஷ்

ப்லோப் பிஷ் மற்றும் மோங்க் பிஷ் ஆகிய இந்த இரண்டு வகை மீன்களும் ஆழ்கடலில் இருளில் வாழக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றிற்கு இருளில் பார்க்கக்கூடிய பெரிய கண்கள் மற்றும் வேட்டையாடத் தேவைப்படும் கூர்மையான பற்களுடன் இந்த மீன்கள் ஆழ்கடலில் சிறந்த வேட்டையர்களாக வாழ்கின்றன. கடந்த சில ஆண்டுகளில், ஏராளமான ஆழ்கடல் உயிரினங்கள் கடலின் மேல் பகுதிக்கு வேட்டையாட வருவது வினோதமாக இருக்கிறது.

ஆழ்கடல் மீன்களுக்கு கடலின் மேற் பகுதியில் என்ன வேலை?

ஆழ்கடல் மீன்களுக்கு கடலின் மேற் பகுதியில் என்ன வேலை?

இன்னும் சில ஆழ்கடல் மீன்கள் இறந்த நிலையில் கடற்கரை ஒதுக்கும் நிகழ்வுகளும் அதிகரித்துள்ளது. மீன்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர்களின் கூற்று படி, கடலில் நம்ப முடியாத அளவிற்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மனிதர்களால் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கடலில் கலக்கப்பட்டதைத் தொடர்ந்து மீன் வளம் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் வெளிப்படையாகச் சொல்லப் போனால், மீன்களே இப்போது கழிவுகளை உண்ணத் துவங்கிவிட்டன.

பூமியின் அல்ட்ரா பிளாக் நிற மீன் ஆழ்கடலில் கண்டுபிடிப்பு! ரகசியத்தையும் அவிழ்த்துவிட்ட விஞ்ஞானி!பூமியின் அல்ட்ரா பிளாக் நிற மீன் ஆழ்கடலில் கண்டுபிடிப்பு! ரகசியத்தையும் அவிழ்த்துவிட்ட விஞ்ஞானி!

கடலின் இயல்புநிலை மாறுகிறதா?

கடலின் இயல்புநிலை மாறுகிறதா?

ஆழ்கடலில் வாழும் உயிரினங்களுக்கு வேட்டையாடவும், உணவாகவும் அங்கு போதிய வாழ்வாதாரம் இல்லாத காரணத்தினாலும், ஆழ்கடல் உயிரினங்கள் இப்போது அதன் வேட்டையாடும் அளவிலிருந்து வெளி வந்து, இப்படி மீன் பிடி வலை அல்லது கடற்கரையில் சிக்கிக்கொள்கின்றன என்று கூறியுள்ளனர். இந்த விசித்திரமான மீன் 4கிலோ எடை உடன் பிடிபட்டதாகக் கூறப்படுகிறது. இதுபோல், இன்னும் ஏராளமான விசித்திரமான ஆழ்கடல் உயிரினங்கள் பூமியில் வாழ்கிறது. அது பற்றி அறிய எங்கள் பக்கத்தில் உள்ள மற்ற பதிவுகளைப் பார்வையிடுங்கள்.

Best Mobiles in India

English summary
Mysterious Deep Sea Fish Caught In Australia : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X