Home
News

மானிக் டர்போஃபேன் எஞ்சின்.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!

ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிக்குறது எல்லாம் அந்த காலம்.. ஒரே கல்லுல ரெண்டு புலிகளை அடித்துள்ளது - டிஆர்டிஓ (DRDO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (Defence Research and Development Organisation).

டிஆர்டிஓ உருவாக்கியுள்ள ஒரு புதிய ஏவுகணையானது சீனாவின் வயிற்றில் புளியை கரைக்கும் அதே வேளையில்.. ரஷ்யாவை சார்ந்து இருந்த நிலைப்பாட்டையும் சுக்கு நூறாக உடைத்துள்ளது. இதற்கெல்லாம் காரணம் - முழுக்க முழுக்க இந்தியாவால் தயாரிக்கப்பட்ட மானிக் டர்போஃபேன் என்கிற எஞ்சின் (Made in India Manik Turbofan Engine) தான்!

மானிக் டர்போஃபேன் எஞ்சின்.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!

மானிக் டர்போஃபேன் எஞ்சின் உடனான டிஆர்டிஓ-வின் புதிய ஐடிசிஎம் (ITCM) ஆனது.. அதாவது இன்டிஜினியஸ் டெக்னாலஜி க்ரூஸ் மிஸைல் (Indigenous technology cruise missile) ஆனது ஒடிசா கடற்கரையில் உள்ள சந்திப்பூர் டெஸ்ட் ரேஞ்சில் (Chandipur Test Range) இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது

இதெப்படி சீனாவில் வயிற்றில் புளியை கரைக்கும்? ஏன் புளியை கரைக்காது! டிஆர்டிஓ-வின் இந்த புதிய ஐடிசிஎம் ஆனது 1,000 கிமீ தூரம் அளவிற்கு பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்ட ஒரு சப்சோனிக் லாங்-ரேன்ஜ் லேண்ட்-அட்டாக் க்ரூஸ் மிஸைல் (Subsonic long-range land-attack cruise missile) ஆகும்.

மானிக் டர்போஃபேன் எஞ்சின்.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!

கூடவே டிஆர்டிஓ-வின் இந்த புதிய ஏவுகணை ஆனது கேனிஸ்டர் லான்ச் சிஸ்டத்தையும் (Canister launch system) கொண்டுள்ளது. இரத்தின சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் கேனிஸ்டர் லான்ச் சிஸ்டம் என்பது ஏவுகணைகளை எடுத்து செல்ல உதவும் ஒரு வகையான கொள்கலன் ஆகும்.

இது - முப்படைகளின் ஒருங்கிணைந்த ராக்கெட் படையின் (Tri-service Integrated Rocket Force) முக்கிய தளங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. நடந்துகொண்டிருக்கும் ரஷ்யா - உக்ரைன் போர்களானது, நீண்ட தூரத்திற்கு பாய்ந்து இலக்குகளை மிகவும் துல்லியமாக தாக்கும் ஏவுகணைகளின் அவசியத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.

இதன்மூலம் சீனா அச்சம் கொள்ளும் என்பதெல்லாம் சரி.. ரஷ்யாவிற்கு என்ன சிக்கல்? முன்னரே குறிப்பிட்டபடி, டிஆர்டிஓ-வின் இந்த புதிய ஏவுகணையானது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மானிக் டர்போஃபான் எஞ்சினால் இயக்கப்படுகிறது. அதாவது இதற்கு முன்னர் ரஷ்யாவை சேர்ந்த எஞ்சின் பயன்படுத்தப்பட்டது. தற்போது அந்த இடத்தை இந்திய எஞ்சின் பிடித்துள்ளது!

இதற்கு முன்பாக நவீன கவசத்தால் பாதுகாக்கப்பட்ட போர் டாங்கிகளுக்கு எதிராக இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு திறன்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்தின் கீழ்.. டிஆர்டிஓ ஆனது, ஒரு புதிய ஆயுத அமைப்பை (Weapon System) உருவாக்கி, அதை வெற்றிகரமாக சோதனையும் செய்திருந்தது.

இந்த புதிய வெப்பன் சிஸ்டமானது மேன்-போர்ட்டபிள் ஆன்ட்டி-டேங்க் கைடட் மிஸைல் (Man-Portable Anti-Tank Guided Missile) என்று அழைக்கப்படுகிறது. டிஆர்டிஓ இதை எம்பிஏடிஜிஎம் (MPATGM) என்றுசுருக்கமாக அழைக்கிறது. நவீன கவசத்தால் பாதுகாக்கப்பட்ட பிரதான போர் டாங்கிகளை (Modern armor-protected Main Battle Tanks - MBTs) கொண்ட நாடுகளுக்கு.. இந்தியாவின் இந்த ஆன்ட்டி-டேங்க் கைடட் மிஸைல் ஆனது ஒரு மிகப்பெரிய அச்சறுத்தலாக இருக்கும்.

பகல் மற்றும் இரவு நேரங்களில் தாக்கும் திறன் கொண்ட இந்த ஆன்ட்டி-டேங்க் கைடட் மிஸைலில் டாப் அட்டாக் (Top attack) திறன்களும் உள்ளன. எல்லாவற்றை விட முக்கியமாக, இந்த ஆயுத அமைப்பில் டூயல்-மோட் சீக்கர் செயல்பாடும் (Dual-mode seeker functionality) உள்ளது, இது டேங்க்குகளுக்கு இடையேயான போர் சூழ்நிலைகளில் "தாறுமாறாக" செயல்படும்.

மானிக் டர்போஃபேன் எஞ்சின்.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!

சமீபத்தில் அக்னி ப்ரைம் பாலிஸ்டிக் ஏவுகணை (Agni Prime Ballistic Missile) சோதனையும் கூட வெற்றிகரமாகநடந்து முடிந்தது. அக்னி ப்ரைம் என்பது அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கக்கூடிய வல்லமை கொண்ட இந்தியாவின் புதிய தலைமுறை ஏவுகணை ஆகும். இந்த சோதனையின் போது, அக்னி ப்ரைம் பாலிஸ்டிக் ஏவுகணை ஆனது நம்பகமான செயல்திறனை உறுதிப்படுத்தும் அனைத்து வகையான சோதனை நோக்கங்களையும் பூர்த்தி செய்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Indian Engine Manik Turbofan Replaced Russian Engine DRDO New Milestone in Cruise Missile Technology
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X