Just In
- 8 hrs ago
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- 12 hrs ago
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- 1 day ago
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
- 1 day ago
சர்ப்ரைஸ்.. பிப்.7 அன்று OnePlus 11 உடன் சேர்ந்து "ரகசியமாக" அறிமுகமாகும் இன்னொரு போன்!
Don't Miss
- Movies
சர்வானந்த் நிச்சயதார்த்தத்தில் ஜோடியாக பங்கேற்ற சித்தார்த் - அதிதி ராவ்!
- News
பறவையா பறக்குறோம்.. 4,500 கி.மீ தூரம் பறந்து.. எகிப்திலிருந்து இங்கிலாந்து வந்த பல்லி! வால் மிஸ்ஸிங்
- Sports
நியூசிக்கு எதிரான டி20 தொடர்.. அக்சர் பட்டேல் இடத்தில் யார்? 3 வீரர்களுக்கு இடையே போட்டி
- Finance
மதுரை IT நிறுவனத்தை வாங்கிய ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ்.. இனி வளர்ச்சி எப்படியிருக்கும்?
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ஓஹோ! இப்படி செஞ்சா 12 மாதத்திற்கு YouTube Premium இலவசமா? இது தெரியாம போச்சே!
சாதாரணமாக நாம் YouTube இல் நமக்கு பிடித்த வீடியோக்களை பார்க்க நினைக்கும் போது, வீடியோவின் தொடக்கத்திலும், இடையிலும் விளம்பரங்கள் தொடர்ந்து வந்து நமக்குத் தொல்லை கொடுக்கும். இது பல பயனர்களுக்கு எரிச்சலூட்டும். இதில் சில விளம்பரங்கள் 5 நொடிக்கு பின் ஸ்கிப் செய்யும் அனுமதியை வழங்குகிறது. ஆனால், இன்னும் சில விளம்பரங்களை நாம் முழுமையா பார்த்து முடித்தால் வீடியோவே பிளே செய்யப்படும். இது தான் வேதனை.

யூடியூப் பிரீமியம் (YouTube Premium) சந்தா
இந்த விளம்பரத் தொல்லைகளில் இருந்து தப்பிக்க உங்களுக்கு ஒரு வழி கிடைத்தால் எப்படி இருக்கும்? உண்மையைச் சொல்லப் போனால், யூடியூப் அதன் பயனர்களுக்கு விளம்பரமே இல்லாத ஒரு பயன்முறையைக் கொண்டுள்ளது. ஆனால், இந்த அம்சம் கூடுதலாகப் பணம் செலுத்தி, யூடியூப் பிரீமியம் (YouTube Premium) என்ற சந்தாவை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இலவசமாக யூடியூப் பயன்படுத்த விரும்புபவர்கள் கட்டாயம் விளம்பரங்களைப் பார்வையிட்டாக வேண்டும்.

தவிர்க்க முடியாத விளம்பரங்களால் தலைவலி
உலகின் மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளத்தில் இது மிகப் பெரிய சிக்கலாகப் பார்க்கப்படுகிறது. முன்பைவிட இப்போது தான் ஏராளமான விளம்பரங்கள் யூடியூப் இல் ஒளிபரப்பப்படுகிறது. உண்மையைச் சொன்னால், நம்முடைய நேரத்தை விளம்பரங்களே அதிகமாக எடுத்துக்கொள்கிறது. இதில் தவிர்க்க முடியாத விளம்பரங்களால் ஏற்படும் தொல்லை தான் நமக்குத் தலைவலியைக் கொடுக்கிறது. எந்த கட்டணமும் இன்றி இலவசமாக யூடியூப் பயன்படுத்த விரும்பினால்,

YouTube பிரீமியம் 12 மாத சந்தாவின் விலை என்ன தெரியுமா?
கட்டாயம் நீங்கள் விளம்பரங்களைப் பார்வையிட்டாக வேண்டும் என்பதே நிறுவனத்தின் கொள்கையாக இருக்கிறது. இது யூடியூப் பயனர் அனுபவத்தைப் பாதிக்கிறது என்று தெரிந்ததைத் தொடர்ந்து, நிறுவனம் பிரீமியம் சந்தாவைப் பெறுமாறு யூடியூப் பயனர்களை வலியுறுத்தியது. YouTube பக்கத்தின் தகவலின் படி, YouTube Premium சந்தா மூன்று திட்டங்களில் கிடைக்கிறது. இதில், YouTube பிரீமியமின் 12 மாத கால சந்தாவைப் பெற நீங்கள் ரூ.1,299 செலவிட வேண்டியதுள்ளது.

3 மாத சந்தா மற்றும் 1 மாத சந்தாவின் விலை
அதேபோல், YouTube Premium இன் 3 மாத சந்தா திட்டத்தை நீங்கள் வாங்க விரும்பினால் ரூ. 399 செலுத்த வேண்டியதுள்ளது. அதேபோல், நீங்கள் 1 மாத YouTube Premium சந்தாவைப் பெற விரும்பினால் நீங்கள் வெறும் ரூ. 139 மட்டும் செலுத்தினால் போதும். இந்த YouTube Premium சந்தாவைப் பெறுவதன் மூலம், நீங்கள் YouTube Premium வீடியோக்களை விளம்பரங்களின் தொல்லை இன்றி பார்த்து ரசிக்கலாம்.

யூடியூப் ரெபரல் ப்ரோகிராம் திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
இந்த ஆண்டின் தொடக்கத்தில் யூடியூப் டிவியைப் போலவே, யூடியூப் பயனர்களுக்காக ஒரு ரெபரல் ப்ரோகிராம் திட்டத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் படி, ஏற்கனவே உள்ள சந்தாதாரர்கள் ஒரு வருடம் வரை இலவச பிரீமியம் சந்தாவைப் பெற முடியும். இதற்கான பிரத்தியேக கோட்-ஐ யூடியூப் இப்போது வழங்குகிறது. இந்த பரிந்துரை திட்டம் வழக்கம் போல ரெபரல் செய்து வெகுமதியைப் பெறுவது போன்று செயல்படுகிறது.

ஒரு வருட இலவச சந்தாவைப் பெறும் வாய்ப்பு
யூடியூப் பிரீமியம் சேவையைப் பற்றிய நல்ல செய்தியைப் பரப்புவதற்கும், புதிய பயனர்களைப் பெறுவதற்கும் இந்த ரெபரல் ப்ரோகிராம் அனுமதிக்கிறது. இதைச் சரியாகச் செய்தால், YouTube உங்களுக்கு வெகுமதி அளிக்கும். இதன் மூலம், நீங்கள் ஒரு வருட இலவச சந்தாவைப் பெறும் வாய்ப்பும் கிடைக்கிறது. நீங்கள் பரிந்துரைக்கப்பட்ட ஒருவராக இருந்தால், YouTube Premium சந்தா உங்களுக்கு இலவசமாக இருக்காது. இருப்பினும், இது மிகக் குறைந்த விலையில் பரிந்துரைக்கப்பட்ட நபருக்கு கிடைக்கும்.

12 மாதத்திற்கு இலவசமாக YouTube Premium வேண்டுமா? அப்போ இதை செய்யணும்
YouTube பிரீமியம் சந்தாவிற்கு ஒரு நண்பரைப் பரிந்துரைத்த பிறகு, அந்த நண்பர் யூடியூப் பிரீமியம் சந்தாவை வெறும் 10 ரூபாய்க்கு மூன்று மாத சந்தாவைப் பெற முடியும் என்பது கவனிக்கத்தக்கது. அதேசமயம், பரிந்துரைத்த நபருக்கு எந்தச் செலவும் இல்லாமல் ஒரு மாதச் சந்தா இலவசமாகக் கிடைக்கும். ஆனால், முழு ஆண்டுக்கான இலவச சந்தாவை நீங்கள் இலவசமாகப் பெற விரும்பினால், இந்த முறைப்படி குறைந்தது 12 நண்பர்களையாவது நீங்கள் ரெபரல் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு புதிய பயனருக்கும் ஒரு மாத யூடியூப் பிரீமியம் இலவசம்
பதிவு செய்யும் ஒவ்வொரு புதிய பயனருக்கும் ஒரு மாத யூடியூப் பிரீமியம் சாந்த உங்களுக்கு இலவசமாகக் கிடைக்கும். யூடியூப் பிரீமியத்தில் பதிவு செய்ய நண்பரை எவ்வாறு பரிந்துரைப்பது என்பதை இப்போது பார்க்கலாம். உங்கள் ஆண்ட்ராய்டு YouTube பயன்பாட்டில் இருக்கும், மேல் வலது மூலையில் உள்ள ப்ரொபைல் படத்தை கிளிக் செய்யவும். இப்போது, "Your Premium benefits" என்ற அமைப்பைத் திறக்கவும்.

iOS பயனர்களுக்கு இந்த சலுகை கிடைக்காதா?
உங்கள் தொடர்புகளுடன் நீங்கள் பகிரும் URL உடன் "Get up to 12 bonus months" கார்டை இப்போது பார்ப்பீர்கள். இந்தப் பக்கத்தில் உங்கள் "Rewards activity" கண்காணிப்பதற்கான வழியும் உள்ளது. இப்படி உங்கள் கணக்கில் இருந்து உருவாக்கப்படும் ரெபரல் கோட்களை நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம், இந்த அம்சம் YouTube இன் iOS பயனர்களுக்குக் கிடைக்காது.

12 மாததிற்கு விளம்பரம் இல்லாமல் YouTube பார்க்கலாம்
iOS பயன்பாட்டில் உள்ள சந்தா சிக்கலின் காரணமாக, பரிந்துரை திட்டத்தை வழங்காது என்பதை நினைவில் கொள்ளவும். YouTube பிரீமியம் ரெபரல் ப்ரோகிராம் திட்டம் அடுத்த ஆண்டு மே வரை செயல்பாட்டிலிருக்கும் என்பதனால் தாராளமாக நீங்கள் 12 நபர்களை இந்த திட்டத்தின் கீழ் சேர்க்க அதிக நேரமிருக்கிறது. 12 நபர்களுக்குப் பரிந்துரை செய்து 12 மாத யூடியூப் பிரீமியம் சந்தாவை இலவசமாகப் பெற்று மகிழ்ந்திருங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470