அப்பட்டமா இருக்கே.. EVM என்கிற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்யலாமா? தேர்தல் ஆணையம் விளக்கம்!
தேர்தல் வந்துவிட்டால் போதும்.. 2 வகையான மக்களை கையில் பிடிக்கவே முடியாது. ஒன்று - தேர்தலை எப்படியாவது சரியாக நடத்திவிட வேண்டும் என்று எண்ணும் தேர்தல் ஆணைய அதிகாரிகள். இன்னொன்று - தேர்தல் சமயத்தில் ஏதாவதொரு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென்று போராடும் ஆசாமிகள்!
அப்படியான ஆசாமிகள், ஒவ்வொரு தேர்தலின் போதும் தவறாமல் தங்கள் கையில் எடுக்கும் ஒரு ஆயுதம் இருக்கிறது என்றால்.. அது இவிஎம் (EVM) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களாகத்தான் (Electronic Voting Machines) இருக்கும். எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ.. அப்போதெல்லாம் இவிஎம்-களை ஹேக் (Hack) செய்ய முடியும் என்கிற பகீர் தகவலும் தீயாக பரவும்.

தேர்தல் நாள் மிகவும் நெருக்கமாக இருக்கும் போதெல்லாம்.. வாட்ஸ்அப் (WhatsApp) வழியாக.. அல்லது பேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற சமூக ஊடகத்தளங்களின் வழியாக.. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்கிற "போலியான" வீடியோ, போட்டோ அல்லது மெசேஜ் காட்டுத்தீ போல பரவும். இந்த 2024 மக்களவை தேர்தலும் அதற்கு விதிவிலக்கல்ல!
ஒருவேளை.. இவிஎம்-ஐ ஹேக் செய்ய முடியும் என்கிற குற்றசாட்டை முன்வைக்கும் வீடியோக்கள், புகைப்படங்கள் அல்லது தகவல்கள் உங்களை வந்து சேர்ந்தால்.. இதற்கு முன்னர் இதேபோன்ற குற்றச்சாட்டிற்கு இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission Of India - ECI) கொடுத்த விளக்கத்தை நினைவுகூர்ந்து கொள்ளவும்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி இவிஎம்-ஐ ஹேக் செய்ய முடியும் என்கிற வீடியோக்கள், புகைப்பங்கள், தகவல்கள் மற்றும் கூற்றுகள் எல்லாமே - பொய்யான கூற்றுகள் தான். இதுபோன்ற கூற்றுகள் மிகவும் அப்பட்டமாக தவறாகும். இதுபோன்ற வீடியோக்களில் காட்டப்படுவது இஐசி இவிஎம்-களே அல்ல. அவைகள் போலியான இவிஎம்-கள் ஆகும். இஐசி இவிஎம்-ஐ ஹேக் ஹேக் செய்யவோ அல்லது அதில் மாற்றங்கள் செய்யவோ முடியாது.
இவிஎம்-ல் உள்ள 2 யூனிட்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் தான் இவிஎம் என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்றன. இது மின்னணு வழிமுறைகளை () பயன்படுத்தி வாக்களிப்பது மற்றும் வாக்குகளை எண்ணுவது (Casting and counting votes) போன்ற வேலைகளை செய்ய உதவும் ஒரு இயந்திரமாகும்.

இவிஎம் ஆனது இரண்டு யூனிட்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது: ஒன்று கண்ட்ரோல் யூனிட் (Control unit); இன்னொன்று - பல்லோடிங் யூனிட் (Balloting unit). இந்த யூனிட்கள் ஒரு கேபிள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இவிஎம்-ன் கண்ட்ரோல் யூனிட் ஆனது தலைமை அதிகாரி அல்லது வாக்குச்சாவடி அதிகாரியிடம் இருக்கும். மறுகையில் உள்ள பல்லோடிங் யூனிட் ஆனது வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்கிற நோக்கத்தின் கீழ் வாக்குப்பெட்டிக்குள் வைக்கப்பட்டு இருக்கும்.
இவிஎம்-ல் வாக்களிக்க வாக்குச்சீட்டு தேவைப்படாது. அதற்கு பதிலாக இவிஎம்-ல் உள்ள பட்டனை அழுத்தி வாக்களிக்க முடியும். இதற்காக தேர்தலில் நிற்கும் கட்சியின் பெயர்கள் மற்றும் / அல்லது அவர்களுடைய சின்னங்களின் பட்டியல் இவிஎம்-ல் பொருத்தப்பட்டு இருக்கும், அதற்கு நேராகா இருக்கும் பட்டனை அழுத்துவதன் மூலம், குறிப்பிட்ட நபருக்கு அல்லது கட்சிக்கு உங்களால் வாக்களிக்க முடியும்.


Click it and Unblock the Notifications








