GAS CYLINDER KYC: கைரேகை வைக்காவிட்டால் கேஸ் சிலிண்டர் கிடைக்காதா? ஆன்லைனில் ஈஸியா KYC அப்டேட் செய்வது எப்படி?
கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் அவர்களுடைய கைரேகையை உரிய கேஸ் சிலிண்டர் நிறுவனத்திடம் வைத்து பதிவு செய்யாவிட்டால் இனி கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யப்படமாட்டாது என்ற வதந்தி வேகமாக பரவி வருகிறது. உண்மையில், இது உங்கள் KYC அப்டேட்டிற்கான ஒரு செயல்பாடாகும்.
ஆதார் அட்டை (Aadhaar card) KYC, பான் கார்டு (PAN card) KYC, ஃபாஸ்ட்டேக் (FASTag) KYC என்று பல கட்டங்களாக இந்திய மக்கள் அவர்களுடைய KYC தகவல்களை அப்டேட்டை செய்யும்படி இந்திய அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில், இப்போது கேஸ் சிலிண்டர் (Gas cylinder) வடிக்கவையாளர்களும் அவர்களுடைய KYC தகவலை அப்டேட் செய்யும்படி வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

எல்பிஜி கேஸ் சிலிண்டர் KYC அப்டேட் (LPG Gas Cylinder KYC update):
கேஸ் சிலிண்டர் KYC அப்டேட் (Gas KYC update) செய்யப்படவில்லை என்றால் இனி கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யப்படாது என்பது வதந்தியே. ஆனால், உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் மானியம் தடைபெற அதிக வாய்ப்புள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். KYC அப்டேட் செய்யாத நபர்களுக்கு கிடைக்கும் மாதாந்திர மானியம் இனி கிடைக்காமல் போக அதிக வாய்ப்புள்ளது. ஆகையால், உடனே உங்கள் கேஸ் சிலிண்டர் KYC தகவலை அப்டேட் செய்யுங்கள்.
உங்கள் KYC தகவலை அப்டேட் செய்ய, கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் அவர்களுடைய ஆதார் அட்டை, ரேஷன் அட்டை (Ration card), வங்கி பாஸ்புக் (Bank passbook) மற்றும் கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்யப்பட்ட கேஸ் கனெக்ஷன் புக் (Gas connection book) போன்ற முக்கியமான ஆவணங்களை ஜெராக்ஸ் (Xerox) எடுத்துக்கொண்டு, அருகில் உள்ள உங்கள் சிலிண்டர் நிறுவனத்தின் சேவை மையத்தை அணுகி ஆவணங்களை சமர்ப்பித்து KYC தகவலை அப்டேட் செய்யலாம்.
அடிக்கிற வெயிலில் யாரப்பா அலைவது? ஈசியாக வீட்டில் இருந்தபடியே KYC அப்டேட் செய்ய வழி எதுவும் இல்லையா என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு இங்கே கேட்கிறது. கேஸ் சிலிண்டர்களுக்கான KYC அப்டேட்டை மக்கள் இப்போது ஆன்லைன் (Gas cylinder KYC update online) வழியாகவும் செய்து முடிக்காமல். இதற்கு உங்கள் கையில் இணைய வசதியுடன் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதுமானது.

சரி, இப்போது ஆன்லைன் மூலம் எப்படி கேஸ் சிலிண்டர் KYC தகவலை அப்டேட் செய்வதென்று பார்க்கலாம்.
- உங்கள் ஸ்மார்ட்போனில் Google பிரௌசர் பக்கத்திற்கு செலவும்.
- mylpg.in என்று டைப் செய்யவும்.
- முதலில் வரும் தேடுதல் விபரத்தை தேர்வு செய்யவும்.
- இப்போது LPG இணைப்பு பக்கத்திற்கு கொண்டு செல்லப்படுவீர்கள்.
- பக்கத்தின் வலதுபுறத்தில் 3 சிலிண்டர் படம் காண்பிக்கப்படும்.
- அதில் உங்கள் கேஸ் சிலிண்டர் நிறுவனம் எது என்பதை பார்த்து கிளிக் செய்யவும்.
- அடுத்த பக்கத்தில் மேலே KYC என்ற விருப்பம் காண்பிக்கப்படும்.
- அதை கிளிக் செய்து உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடவும்.
- இப்போது ஆதார் வெரிஃபிகேஷன் என்ற பக்கம் காண்பிக்கப்படும்.
- உங்கள் ஆதார் விபரங்களை உள்ளிட்டு கேப்சா கோடு விபரங்களை டைப் செய்யவும்.
- Generate OTP என்பதை கிளிக் செய்யவும்.
- உங்கள் போனிற்கு வாங்க OTP விபரங்களை உள்ளிட்டால் KYC அப்டேட் செய்யப்படும்.
இந்த எளிமையான முறையை சரியாக பின்பற்றி வெறும் 2 முதல் 3 நிமிடங்களில் உங்கள் KYC தகவலை நீங்கள் அப்டேட் செய்து முடிக்கலாம். KYC அப்டேட் செய்யாவிட்டால், கேஸ் சிலிண்டர் மானியம் துண்டிக்கப்பட்ட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்போதைக்கு வெறும் ரூ.50 தான் மானியமாக வழங்கப்படுகிறது என்றாலும், எதிர்காலத்தில் பெரிய தொகை வழங்கப்பட்டால் KYC அப்டேட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் நிலை உருவாகலாம்.


Click it and Unblock the Notifications