நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
நிலவில் முரட்டுத்தனமாக தரையிறங்கிய ஜப்பானின் ஸ்லிம் லேண்டர் (Japan SLIM Lander) நிலவில் எங்கிருக்கிறது என்பதை சந்திராயன்-2 ஆர்பிட்டர் படம்பிடித்து பூமிக்கு அனுப்பியுள்ளது. ஜப்பான் ஸ்லிம் லேண்டர் நிலை என்ன? அது எப்படி இருக்கிறதென்ற கூடுதல் விபரங்கள் இதோ.
இஸ்ரோவின் (ISRO) சந்திரயான்-2 ஆர்பிட்டர் (Chandrayaan-2 Orbiter), நிலவின் மேற்பரப்பில் தினமும் சுற்றி வந்து, நிலவு தொடர்பான தகவல்களை சேகரித்து வருகிறது. நிலவை சுற்றி வரும் சந்திராயன்-2 ஆர்பிட்டர் அதன் உயர் தெளிவுத்திறன் கொண்ட ஹை-டெபினிஷன் கேமராவைப் பயன்படுத்தி, மார்ச் 16, 2024 ஆம் தேதி அன்று சில புகைப்படங்களை எடுத்துள்ளது. இந்த கேமரா அதிக தெளிவு திறன் கொண்ட கேமரா என்பது குறிப்பிடத்தக்கது.

நிலவில் தெரிந்த பெரிய நிழல்.. வினோத உருவம்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கியது எது?
இதன் திறன் எவ்வளவு என்று தெரியுமா? சந்திராயன்-2 ஆர்பிட்டரில் உள்ள ஹை-டெபினிஷன் கேமரா (high-defenition camera) சாதனம் ஒரு பிக்சலுக்கு 16 செமீ பிக்சல் தெளிவுத்திறனை வழங்கும் தரத்தை கொண்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இந்த ஹை-டெபினிஷன் புகைப்படத்தில் சந்திராயன்-2 ஆர்பிட்டர், சந்திர பூமத்திய ரேகைக்கு தெற்கே அமைந்துள்ள ஷியோலி பள்ளத்திற்கு (Shioli crater) அருகில் ஒரு வினோத பொருளை பெரிய நிழலுடன் கண்டுள்ளது.
நிலவின் பூமத்திய ரேகைக்கு தெற்கே (south of the lunar equator) அமைந்துள்ள ஷியோலி பள்ளத்திற்கு அருகே பெரிய நிழல் (shadow) உடன் காணப்பட்ட வினோத பொருள், ஸ்லிம் (SLIM) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஜப்பானின் ஸ்மார்ட் லேண்டர் ஃபார் இன்வெஸ்டிகேட்டிங் மூன் (Japan's Smart Lander for Investigating Moon) லேண்டர் என்பது தெரியவந்துள்ளது.
சந்திரா துங்கதுர்த்தி (Chandra Tungathurthi) எனப்படும் சுயாதீன ஆராய்ச்சியாளர் சந்திராயன்-2 அனுப்பிய தரவுகளை ஆராய்ச்சி செய்யும் பொழுது ஜப்பானின் ஸ்லிம் லேண்டர் நிலவில் தங்கியிருப்பதைக் கண்டறிந்துள்ளார். இதுகுறித்து மேலும் சந்திரா துங்கதுர்த்தி கூறுகையில், பிரதான் போர்ட்டலை (PRADAN portal) நான் தவறாமல் பார்வையிடுகிறேன், அங்கு இஸ்ரோ (ISRO) ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் சந்திரயான் தரவை வெளியிடுகிறது.

எதிர்ச்சியாக சந்திராயன்-2 ஆர்பிட்டர் தகவலில் சிக்கிய ஜப்பான் SLIM:
தரவு வெளியீடுகளின் கால இடைவெளியைக் கருத்தில் கொண்டு, நான் அடிக்கடி புதுப்பிப்புகளை சரிபார்க்கிறேன். சமீபத்தில், போர்ட்டலை மறுபரிசீலனை செய்தபோது, ஒரு புதிய தரவு கோப்பை கவனித்தேன். சந்திரனின் நிலப்பரப்பு முழுவதும் நீண்ட, வியத்தகு நிழல்களை கொண்டிருந்தது. இது சூரியனின் உயரம் குறைவாக இருந்த காலகட்டத்தில் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்பதை விளக்குகிறது.
சந்திராயன்-2 ஆர்பிட்டர் படம் பிடித்த நேரம் இங்கு மிகவும் முக்கியமானது. சூரியன் உயரம் குறைவாக இருந்த நேரத்தில் இந்த படம் எடுக்கப்பட்டதனால், ஜப்பான் ஸ்லிம் லேண்டர் இருந்த இடத்தில் பெரிய நிழல் உருவாகியுள்ளதை நம்மால் புகைப்படத்தில் தெளிவாக பார்க்க முடிகிறது என்று சந்திரா தெரிவித்திருக்கிறார். ஜப்பானின் முதல் வெற்றிகரமான மூன் லேண்டரான SLIM சந்திராயன்-2 ஆர்பிட்டர் பார்வையில் சிக்கி இருப்பது வியப்படைய செய்கிறதென்று அவர் கூறியுள்ளார்.
ஜப்பானின் முதல் வெற்றிகரமான மூன் லேண்டரான SLIM, ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் ஏஜென்சி (JAXA) ஆல் உருவாக்கப்பட்டது. இது அதன் வலுவான வடிவமைப்பு மற்றும் பொறியியலுக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது. இந்த லேண்டரின் துல்லியமான தரையிறங்கும் திறன் காரணமாக இது "மூன் ஸ்னைப்பர்" (Moon Sniper) என்று அழைக்கப்படுகிறது. சந்திரயான்-2 இன் படங்கள் SLIM இன் நிலை மற்றும் சரியான இருப்பிடம் பற்றிய மதிப்புமிக்க தரவை வழங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications