Home
News

AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..

இப்போது பெரும்பாலானோர் வீட்டில் ஏசி (AC) சாதனம் பயனப்டுத்தப்படுகிறது. ஏசியை பயன்படுத்துவது ஒரு பெரிய விஷயம் இல்லை என்றாலும், அதிகளவு மின்சாரத்தை எடுத்துக்கொள்ளாமல் ஒரு ஏசியை சாமர்த்தியமாக பயன்படுத்துவது தனித்திறமையாக பார்க்கப்படுகிறது.

ஏசி (AC) பயன்படுத்தும் ஒவ்வொரு பயனருக்கும், ஒவ்வொரு விதமான சந்தேகங்கள் கட்டாயம் இருக்க தான் செய்கிறது. அதுவே நிஜமும் கூட. இதை யாராலும் மறுக்க முடியாது. உண்மையை சொல்ல போனால், சில சூட்சமங்களை தெரிந்துகொண்ட பின் உங்கள் ஏசியை நீங்கள் சரியாக இயக்க பழகினால் கட்டாயம் உங்கள் மின்சார கட்டணத்தை (current bill) கொஞ்சமாவது மிச்சம்பிடிக்கலாம்.

AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? தப்பு செய்யாதீங்க

எப்படி ஏசியை ஸ்விட்ச் ஆன் செய்து ஸ்விட்ச் ஆஃப் செய்வது (How to switch ON AC and switch OFF) ?

அத்தகைய சில ஏசி சூட்சமங்களை (AC tips) பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். பெரும்பாலான ஏசி பயனர்களுக்கு இருக்கும் பெரிய சந்தேகம், எப்படி ஏசியை ஸ்விட்ச் ஆன் (How to switch ON AC) செய்து ஸ்விட்ச் ஆஃப் (How to switch OFF AC) செய்ய வேண்டும் என்பது தான். புதிய ஏசி பயனர்களுக்கு இது பெரிய குழப்பமாகவே இருக்கிறது.

சரியான முறையில் ஏசியை ஸ்விட்ச் ஆன் (AC switch ON) செய்து ஆஃப் (OFF) செய்யவில்லை என்றால் மின்சார கட்டணம் அதிகமாகும் என்ற கருத்து ஒன்று பரவலாக கூறப்பட்டு வருகிறது. இது உண்மையா? இல்லை இந்த கருத்து வெறும் வதந்தியா என்று பலருக்கும் இங்கு சந்தேகம் இருக்கிறது. இதற்கான விடையை நீங்கள் முதலில் தெரிந்துகொண்டால், ஒரு மாபெரும் குழப்பத்தில் இருந்து விடுபடுவீர்கள்.

உங்கள் வீட்டில் உள்ள ஏசியை சரியான முறையில் நீங்கள் ஸ்விட்ச் ஆஃப் (AC switch OFF) செய்யவில்லை என்றால் கட்டாயம் கரண்ட் பில் எகுறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த கருத்து ஒரு வதந்தி அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் வீட்டில் உள்ள ஏசியை ஆன் செய்வதில் எந்தவித சிக்கலும் இல்லை என்றாலும், சரியான முறையில் உங்கள் ஏசியை நீங்கள் ஆஃப் செய்யவில்லையே என்றால் கட்டாயம் மின்சார கட்டணம் அதிகரிக்கும்.

AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? தப்பு செய்யாதீங்க

இப்படி தவறாக ஏசியை ஆஃப் செய்தால் கண்டிப்பாக கரண்ட் பில் எகுறுமா?

ஏசியை ஆன் செய்வதற்கு எது சரியான முறை? உங்கள் வீட்டில் உள்ள ஏசியை ஆன் செய்ய முதலில் நீங்கள், ஸ்டெபிலைஸர் (AC stabilizer) ஸ்விட்சை ஆன் செய்ய வேண்டும். பிறகு, பச்சை நிற விளக்கிற்கு ஸ்டெபிலைஸர் மாறியவுடன் நீங்கள் உங்கள் ஏசி ரிமோட் (AC remote) மூலம் உங்கள் ஏசியை ஆன் செய்யலாம். இது தான் சரியான ஏசி ஸ்விட்ச் ஆன் முறையாகும்.

இதில் தவறு ஏற்பட வாய்ப்பே இல்லை என்பதனால் இதில் சிக்கல் இல்லை. ஆனால், உங்கள் ஏசியை நீங்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யும் முறையில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும். சரியான முறையில் எப்படி ஒரு ஏசியை ஸ்விட்ச் ஆஃப் செய்வது என்பதை இப்போது பார்க்கலாம். ஏசி பயன்படுத்தும் பல பயனர்கள் ஏசியை ரிமோட் மூலம் ஆப் செய்கிறார்கள்.

அல்லது ஸ்லீப் மோடில் ஏசியை இயக்க டைமர் செட் (AC sleep mode timer) செய்துவிடுகிறார்கள். அத்தோடு ஏசி ஆஃப் ஆகிவிடும் என்று தவறாக நினைக்கிறார்கள். டைமர் செட் செய்த பிறகு உங்கள் ஏசி ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு தான ஸ்லீப் மோடிற்கு தான் செல்லுமே தவிர முழுமையாக ஆஃப் செய்யப்படுவதில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பின்னணியில், உங்கள் ஏசி மின்சாரத்தை தொடர்ந்து கொஞ்சம்-கொஞ்சமாக எடுத்துக்கொண்டே தான் இருக்கும்.

அதேபோல், ரிமோட் மூலம் ஸ்விட்ச் ஆப் செய்யும் பொழுது இதே நிலை தான் நீடிக்கிறது. முழுமையாக ஒரு ஏசியை ஸ்விட்ச் ஆப் (AC switch off) செய்ய வேண்டும் என்றால், நீங்கள் ரிமோட் மூலம் ஆப் செய்த பிறகு, ஸ்டெபிலைஸர் ஸ்விட்சையும் ஆப் செய்ய வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் மட்டுமே உங்கள் ஏசி பிண்ணனியில் மின்சாரத்தை பயன்படுத்தாது. இதுவே சரியான ஏசி ஸ்விட்ச் ஆப் முறையாகும். இல்லையெனில் உங்கள் மின்சார கட்டணம் கண்டிப்பாக அதிகரிப்பதை தடுக்க முடியாது.

Best Mobiles in India

English summary
Right Way To Switch ON and OFF AC Using Remote and Stabilizer Properly To Avoid Excess EB Current Bill
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X