இதை மட்டும் செய்யுங்க.. உங்க பழைய சீலிங் Fan கூட சூப்பர் ஸ்பீடில் இயங்கும்.. வீட்டில் வெக்கை காற்றே இருக்காது
இந்த வெயில் காலத்தில் எல்லா மக்களுக்கும் பொதுவான நண்பனாக திகழும் சாதனம் தான் சீலிங் ஃபேன் (Ceiling fan). ஏசி (AC) இல்லாமல் இருந்திடலாம். ஆனால், சீலிங் ஃபேன் (fan) இல்லாமல் நம்மால் 2 நிமிடங்கள் கூட நிம்மதியாக இருக்க முடியாது.
என்ன தான் சூரியன் நம்மை வாட்டி எடுத்தாலும், நமக்கு துணையாக நின்று வெயிலின் தாக்கத்தை குறைக்கும் ஒரு முக்கியமான தொழில்நுட்ப சாதனமாக சீலிங் ஃபேன் திகழ்கிறது. நம் செல்லும் எல்லா இடங்களிலும் இந்த சாதனத்தை நம்மால் பார்க்க முடிகிறது. "ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை" என்பது போல குறைந்த விலை முதல் துவங்கி, இப்போது விலை உயர்ந்த ஸ்மார்ட் சீலிங் ஃபேன் (Smart ceiling fan) வரை சந்தையில் வாங்க கிடைக்கின்றது.

சீலிங் ஃபேன் ஹை-ஸ்பீடில் சுற்ற வேண்டுமா? உடனே இதை செய்யுங்க?
எல்லா மக்களின் வீட்டிலும் சீலிங் பேன் பயன்படுத்தப்படுகிறது. பெருமைப்பிலான வீடுகளில் இந்த சீலிங் ஃபேன்களுக்கு ரெஸ்டே கிடைக்காது. அதிலும் கோடைகாலம் துவங்கிவிட்டால் எல்லா வீடுகளிலும் சீலிங் ஃபேன்கள் நிற்காமல் நான்ஸ்டாப்பாக சுழன்றுகொண்டே தான் இருக்கின்றன. இப்படி இடைவெளி இல்லாமல் சுழன்றுகொண்டே இருக்கும் உங்கள் வீட்டு சீலிங் ஃபேனின் வேகம் கட்டாயம் இந்த வெயில் காலத்தில் குறைந்திருக்கும்.
இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. என்ன காரணங்களால் உங்கள் சீலிங் ஃபேனின் வேகம் குறைகிறது? என்ன செய்தால், இந்த வெயில் காலத்தில் உங்கள் சீலிங் ஃபேன் வேகத்தை உடனே அதிகரிக்கலாம்? (How to increase ceiling fan speed) எப்படி உங்கள் வீட்டின் சீலிங் ஃபேன் வேகத்தை வெறும் ரூ.60 செலவில் நீங்களே அதிகரிக்க செய்யலாம் என்பது போன்ற விபரங்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
முதலில் என்ன காரணங்களால் உங்கள் சீலிங் ஃபேனின் வேகம் குறைகிறது என்பதை பார்க்கலாமா?
- முதல் முக்கிய காரணங்களில் ஒன்று, உங்கள் சீலிங் ஃபேனில் அதிக தூசி படிந்திருக்கிறதா என்று செக் செய்யுங்கள்.
- உங்கள் சீலிங் ஃபேன் வாங்கி பல வருடங்களை தாண்டி இருந்தாலும், அதன் வேகம் குறைய வாய்ப்பிருக்கிறது.
- சரியாக, சீலிங் ஃபேனை பராமரிக்க தவறியது மற்றும் ரெஸ்ட் இல்லாமல் நீண்ட காலம் சீலிங் ஃபேன் ஆனில் இருப்பது போன்ற காரணங்களால் உங்கள் ஃபேனின் வேகம் குறைந்திருக்க வாய்ப்புள்ளது.

கையில் 60 ரூபாய் இருந்தால் போதுமா? பழைய பேன் கூட சூப்பர் வேகத்தில் சுழலுமா?
- உங்கள் சீலிங் ஃபேன் றெக்கைகளில் தூசி படிந்திருப்பது அதன் வேகத்தை குறைக்கும்.
- இதை அவ்வப்போது சுத்தம் செய்வது ஃபேனின் வேகத்தை அப்படியே புதுசு போல தக்க வைக்க உதவும்.
- சீலிங் ஃபேன் றெக்கையில் உள்ள தூசியை முதலில் உலர்ந்த துணியால் துடைக்க வேண்டும்.
- இறுதியாக, ஈரத்துணியில் துடைக்க வேண்டும்.
- இது தான் சரியான சீலிங் ஃபேன் சுத்தம் செய்யும் முறையாகும்.
- உங்கள் சீலிங் ஃபேன் வாங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்றால், கட்டாயம் அதில் உள்ள கன்டென்ஸர் (Fan Condenser) கருவியை மாற்ற வேண்டும்.
- உங்கள் ஃபேனில் சிறிய சிலிண்டர் வடிவத்தில் பொருத்தப்பட்டிருக்கும் இந்த கன்டென்ஸர் தான் உங்கள் சீலிங் ஃபேன் வேகத்தை நிர்வகிக்கிறது.
- இவை வெறும் ரூ.60 விலையில் எலெக்ட்ரிக் கடைகள் மற்றும் ஆன்லைன் வழியாக வாங்க கிடைக்கிறது.
- இதை நீங்கள் உங்கள் கைப்பட மாற்றம் செய்யலாம்.
- உங்கள் சீலிங் ஃபேனில் இருக்கும் கன்டென்ஸர் வயர் கனெக்ஷனை ஒரு போட்டோ எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
- அதை பார்த்து, நீங்கள் வாங்கிய புதிய கன்டென்ஸரை ஃபேனில் மாற்றிக்கொள்ளுங்கள்.
- இதை மட்டும் செய்தால் போதும், வழக்கத்தை விட கூடுதல் சூப்பர் ஸ்பீடில் உங்கள் சீலிங் ஃபேன் இயங்கும்.


Click it and Unblock the Notifications