ரூ.318-திட்டத்தில் டேட்டா சலுகையை அள்ளிவீசிய பிஎஸ்என்எல்.! தினசரி 2ஜிபி டேட்டா.! வேலிடிட்டி?

|

பி.எஸ்.என்.எல் நிறுவனம் மட்டுமே இப்போது இந்தியாவில் மலிவு விலையில் நீண்டகால 'டேட்டா- ஒன்லி' திட்டங்களை வழங்கிவருகிறது. அதாவது, தரவு மட்டும் செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கும் ஒரே தொலைத்தொடர்பு நிறுவனமாக பி.எஸ்.என்.எல் மட்டுமே உள்ளது. டேட்டா மட்டும் தேவைப்படும் பயனர்களுக்காக பி.எஸ்.என்.எல் நிறுவனம் தன்வசம் அதிகப்படியான திட்டங்களை வைத்துள்ளது.

மலிவு விலையில் கூடுதல் டேட்டா வேண்டுமா?

மலிவு விலையில் கூடுதல் டேட்டா வேண்டுமா?

மலிவு விலை டேட்டா பற்றிப் பேசியதும் அனைவருக்கும் ஜியோ நிறுவனம் தான் நினைவிற்கு வந்திருக்கும். ஜியோ தனது கைவசம் ரூ.251 டேட்டா ஒன்லி திட்டத்தை வைத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 2 ஜிபி தினசரி டேட்டாவை 51 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. அதேபோல், பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.318 டேட்டா பேக் திட்டத்தை வைத்துள்ளது. இதன்கீழ் தினமும் 2ஜிபி டேட்டா, 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

பி.எஸ்.என்.எல் டேட்டா ஒன்லி திட்டங்கள்

பி.எஸ்.என்.எல் டேட்டா ஒன்லி திட்டங்கள்

ஆனால், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் இந்த ரூ.318 டேட்டா பேக் தற்போது, சில வட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது. குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் மட்டுமே இப்பொழுது இந்த திட்டம் அனுக கிடைக்கிறது. ரூ.318 டேட்டா ஒன்லி திட்டத்தை போல, பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இன்னும் பல அதிக டேட்டா நன்மையுடன், மலிவான விலையில் கிடைக்கும் திட்டங்களும் உள்ளது.

Google Map-ஐ மிஞ்சிய டால்பின்: புயலில் சிக்கிய படகு.,ஏலே டோன்ட் வொரி பீ ஹேப்பி-கரை சேர்த்த டால்பின்Google Map-ஐ மிஞ்சிய டால்பின்: புயலில் சிக்கிய படகு.,ஏலே டோன்ட் வொரி பீ ஹேப்பி-கரை சேர்த்த டால்பின்

2ஜிபி டேட்டா கிடைக்கும் ரூ.198 மற்றும் ரூ.98 திட்டம்

2ஜிபி டேட்டா கிடைக்கும் ரூ.198 மற்றும் ரூ.98 திட்டம்

பி.எஸ்.என்.எல் நிறுவனம் ரூ.198 போன்ற பிற திட்டங்களையும் தன்னிடம் வைத்துள்ளது, இத்திட்டம் பயனருக்குத் தினமும் 2 ஜிபி டேட்டாவை, 54 நாட்களுக்கு வழங்குகிறது. அதேபோல் பி.எஸ்.என்.எல், ரூ. 98 திட்டம் 24 நாட்களுக்கு அதே டேட்டா நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகப்படியான செல்லுபடி காலத்துடன் பி.எஸ்.என்.எல்

அதிகப்படியான செல்லுபடி காலத்துடன் பி.எஸ்.என்.எல்

தனியார் தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களான பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் ரூ.100-க்கு கீழ் டேட்டா ஒளிதிட்டங்களை வழங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், பி.எஸ்.என்.எல் நிறுவனம் போல் அதிகப்படியான செல்லுபடி காலத்துடன் இவை வருவதில்லை என்பதே உண்மை.

Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்தாத பிஎஸ்என்எல்

ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்தாத பிஎஸ்என்எல்

ஜியோ, வோடபோன் ஐடியா மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய மூன்று முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களும், டிசம்பர் 2019 இல் தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்கான கட்டணங்களை உயர்த்தின, ஆனால் பிஎஸ்என்எல் அதன் பிரபலமான திட்டங்களின் செல்லுபடி காலத்தை மட்டும் கேரள வட்டத்தில் குறைத்தது.

சிறந்த கவர்ச்சிகரமான டேட்டா திட்டங்கள்

சிறந்த கவர்ச்சிகரமான டேட்டா திட்டங்கள்

பிஎஸ்என்எல்லில் 4ஜி சேவைகள் இல்லாததால், மற்ற நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை உயர்த்திய போது,பிஎஸ்என்எல் டெல்கோ மட்டும் தனதுகட்டணங்களை உயர்த்துவதில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பதிலாகப் சில சிறந்த கவர்ச்சிகரமான டேட்டா ஒன்லி திட்டம் மற்றும் காம்போ திட்டங்களை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்தது, அவற்றை பற்றி பார்க்கலாம்.

10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்?10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்?

ரூ.318 செலவில் 168 ஜிபி டேட்டா வேண்டுமா?

ரூ.318 செலவில் 168 ஜிபி டேட்டா வேண்டுமா?

பிஎஸ்என்எல் வழங்கும் ரூ. 318 ப்ரீபெய்ட் திட்டம், ஒரு டேட்டா எஸ்.டி.வி திட்டமாகும். இத்திட்டம் தினமும் 2 ஜிபி டேட்டாவை 84 நாட்களுக்கு வழங்குகிறது. பயனரின் தினசரி டேட்டா வரம்பை மீறியதும், 40 Kbps வேகத்தில் டேட்டா வழங்கப்படும். இந்த குறிப்பிட்ட 40 kbps வேகம், பயனர்கள் வாட்ஸ்அப் டெக்ஸ்ட் மற்றும் மீடியா மெசேஜ்களை அனுப்பவும், பெறவும் போதுமானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல்லில் கிடைக்கும் ரூ,7 முதலான டேட்டா STV திட்டங்கள்

பிஎஸ்என்எல்லில் கிடைக்கும் ரூ,7 முதலான டேட்டா STV திட்டங்கள்

பிஎஸ்என்எல் அதன் கைகளுக்குள் அதிகளவிலான டேட்டா ஒன்லி திட்டங்களை வைத்துள்ளது. எடுத்துக்காட்டாக, பிஎஸ்என்எல்லில் மிக மலிவான டேட்டா ஒன்லி திட்டமாக ரூ.7 திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டாவை ஒரு நாள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. ஒரு நாள் டேட்டா நன்மை மட்டும் வேண்டும் என்ற பயனர்களுக்கு இந்த ரூ.7 திட்டம் கைகொடுக்கும்.

Google எடுத்த அதிரடி முடிவு: இனி அனைத்து ரயில்வே ஸ்டேஷனிலும் அந்த சேவை கிடையாது!Google எடுத்த அதிரடி முடிவு: இனி அனைத்து ரயில்வே ஸ்டேஷனிலும் அந்த சேவை கிடையாது!

பிரபலமான டேட்டா பேக் திட்டங்ள்

பிரபலமான டேட்டா பேக் திட்டங்ள்

அதேபோல், பிஎஸ்என்எல் நிறுவனம், இன்னும் சில பிரபலமான டேட்டா பேக் திட்டங்களை வைத்துள்ளது. தினமும் 2 ஜிபி டேட்டா நன்மையுடன் 24 நாட்களுக்கு ஈரோஸ் நவ் சந்தா வழங்கும் திட்டமாக ரூ.98 திட்டம் உள்ளது. அதைத் தொடர்ந்து ரூ.198 திட்டமும் தனது பயனர்களுக்கு ஒவ்வொரு நாளும் 2 ஜிபி டேட்டாவை 54 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.

தினமும் 5 ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டம் இதுதான்

தினமும் 5 ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டம் இதுதான்

அதிக டேட்டா நன்மை விரும்பும் பயனர்களுக்காக பிஎஸ்என்எல் டெல்கோ நிறுவனம் ரூ.588 டேட்டா பேக் திட்டத்தை வைத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 5 ஜிபி டேட்டா, 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.998 டேட்டா எஸ்.டி.வி திட்டம், பயனருக்குத் தினமும் 2 ஜிபி டேட்டாவை 240 நாட்களுக்கு வழங்குகிறது.

டபுள் நன்மை கிடைக்கும் காம்போ திட்டம்

டபுள் நன்மை கிடைக்கும் காம்போ திட்டம்

தினசரி டேட்டாவுடன் கொஞ்சம் வாய்ஸ் காலிங் நன்மை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கும் பயனர்களுக்கு, பிஎஸ்என்எல் நிறுவனம் காம்போ திட்டங்களையும் வைத்துள்ளது. இதில் பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.187 எஸ்.டி.வி திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 3 ஜிபி டேட்டா மற்றும் 250 நிமிட குரல் அழைப்பு நன்மை என இரண்டு நன்மைகளும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
BSNL Is Providing Long-Term Data-Only Prepaid Plans With Cheap Price : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X