போட்டு தாக்கும் BSNL.. 300 ரூபாய்க்கு இப்படியொரு ரீசார்ஜ் திட்டமா? யாருக்கெல்லாம் இது பெஸ்ட் பிளான் தெரியமா?
பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு இப்போது மீண்டும் ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை 75 நாள் வேலிடிட்டி உடன் 300 ரூபாய் விலை பிரிவில் அறிமுகம் செய்துள்ளது. அதிரடியான இந்த திட்டத்தின் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்.
ரூ. 300 செலவில் 2 மாதத்திற்கு மேலான வேலிடிட்டியை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த பிஎஸ்என்எல் திட்டம் மிகவும் சிறந்த தேர்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த ப்ரீபெய்ட் திட்டம் ரூ. 319 என்ற விலையுடன் வருகிறது. இது இப்போது இந்தியாவில் உள்ள பல வட்டங்களில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

ரூ. 319 பிஎஸ்என்எல் எஸ்டிவி (Rs 319 BSNL STV):
இந்த திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம், ரூ. 319 பிஎஸ்என்எல் எஸ்டிவி (Rs 319 BSNL STV) என்ற பெயருடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்துடன் BSNL நிறுவனம் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்று இப்போது பார்க்கலாம். இந்த திட்டம் ரூ. 319 விலையில் மொத்தமாக 10ஜிபி டேட்டா நன்மையை (total 10GB data benefits) வழங்குகிறது.
ஆம், மக்களே இந்த திட்டம் தினசரி டேட்டா நன்மையை வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் வழக்கம் போல எல்லா பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம் போல, அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மையை வழங்குகிறது. இது லோக்கல் மற்றும் STD என இரண்டிற்கும் பொருந்தும். அதாவது உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுக்கு எந்தவொரு நேர வரம்பும், கட்டண வரம்பும் கிடையாது என்பது கவனிக்கத்தக்கது.
இந்த ரூ. 319 பிஎஸ்என்எல் எஸ்டிவி திட்டம் மொத்தமாக 300 எஸ்எம்எஸ் (SMS) நன்மையை வழங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை நிறுவனம் 75 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலை வரம்பில் 75 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை கொண்ட ஒரே திட்டமாக இந்த ரூ. 319 பிஎஸ்என்எல் எஸ்டிவி (Rs 319 BSNL STV) திட்டம் திகழ்கிறது.

யாருக்கெல்லாம் இது பெஸ்ட் பிளான் தெரியமா?
பிஎஸ்என்எல் வடிக்கையாளர்களில், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மை தேவைப்படாத அல்லது பிஎஸ்என்எல் சிம் கார்டை இரண்டாம் சிம் கார்டாக பயன்படுத்துவோருக்கு இந்த திட்டம் ஒரு சிறந்த தேர்வாக அமையும். இந்த ரீசார்ஜ் திட்டத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், இப்போது உங்கள் சிம் கார்டில் செயல்பாட்டில் உள்ள திட்டத்திற்கு மேல் கூட இந்த திட்டத்தை உங்களால் ரீசார்ஜ் செய்ய முடியும்.
அதாவது, இந்த திட்டத்தை நீங்கள் முன்கூட்டியே ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். உங்கள் நடைமுறை திட்டத்தின் வேலிடிட்டி காலம் நிறைவடைந்த பிறகு, இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் ஆக்டிவேட் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. உண்மையில் இது ஒரு நல்ல முயற்சியாகும். குறைந்த விலையில் அதிக வேலிடிட்டியை எதிர்பார்ப்பவர்களுக்கு இது ஒரு பெஸ்டான ரீசார்ஜ் திட்டமாகும்.
இதை விட குறைந்த விலையில் ஒரு அட்டகாச திட்டத்தை தேடுகிறீர்கள் என்றால், உங்கள் தேர்வு பிஎஸ்என்எல் ரூ. 247 திட்டமாக தான் அமைய வேண்டும். இது 50ஜிபி டைட்டா, அன்லிமிடெட் அழைப்பு நன்மை, தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை 36 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








