Home
News

BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் ஒரு அற்புதமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை இப்போது வெளியிட்டுள்ளது. இந்த திட்டம் 50ஜிபி டேட்டா நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை, தினமும் 100 SMS போன்ற நன்மைகளை 36 நாட்களுக்கு வெறும் ரூ.250 விலைக்குள் வழங்குகிறது.

ஆம், சரியாக தான் படித்தீர்கள். வெறும் ரூ. 250 விலைக்குள் அட்டகாசமான நன்மைகளை வழங்கும் பெஸ்ட் பட்ஜெட் பிரெண்ட்லி ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமாக இந்த BSNL திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாம் இங்கு பேசும் பிஎஸ்என்எல் (BSNL) ப்ரீபெய்ட் திட்டமானது ரூ. 247 என்ற விலை உடன் இப்போது இந்தியா முழுக்க ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி..

பிஎஸ்என்எல் ரூ. 247 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 247 Prepaid Plan):
இந்த பிஎஸ்என்எல் ரூ. 247 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 247 Prepaid Plan) இந்த விலையில் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்று விரிவாக இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம். பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பயனர்களுக்கு பல விலை புள்ளியில் பல நன்மைகள் அடங்கிய திட்டங்களை வழங்கி வந்தாலும். இந்த திட்டம் தனி கவனத்தை ஈர்த்துள்ளது.

காரணம், இந்த பிஎஸ்என்எல் ரூ. 247 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் முதலில் மொத்தமாக அரைசதம் அடித்தது போல, 50GB ஹை-ஸ்பீட் டேட்டா நன்மை (high speed data benefits) என்ற பல்கான டேட்டாவை (bulk data) வழங்குகிறது. இந்த டேட்டா நன்மைக்கு தினசரி வரம்பு எதுவும் கிடையாது. ஆகையால், இந்த திட்டத்தின் வேலிடிட்டி முடிவடையும் முன் இதை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இத்துடன் கிடைக்கும் அடுத்த அட்டகாசமான நன்மை என்றால், அது இந்த திட்டத்துடன் கிடைக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் அழைப்பு நன்மையை (Unlimited voice calls benefits) தான். முன்பே சொன்னது போல, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 36 நாட்கள் என்பதனால், 36 நாட்களுக்கு உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை கிடைக்கிறது.

BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி..

பிஎஸ்என்எல் ரூ 247 பிளான் (BSNL Rs 247 Plan):
இந்த பிஎஸ்என்எல் ரூ 247 பிளான் (BSNL Rs 247 Plan) தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் 36 நாட்களுக்கு மொத்தமாக உங்களுக்கு 3600 எஸ்எம்எஸ்-கள் பயன்படுத்த கிடைக்கின்றன. இத்துடன் இலவச நன்மையாக பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes) மற்றும் ஈரோஸ் நவ் (Eros Now) போன்ற இலவச நன்மைகளை வழங்குகிறது.

இந்த ஒட்டுமொத்த நன்மைகளையும் பிஎஸ்என்எல் நிறுவனம் 36 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. வெறும் 250 ரூபாய் விலைக்குள் 36 நாட்களுக்கு டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை வழங்கும் இந்த திட்டம் அதிக வடிக்கையாளர்களால் விரும்பப்பட்ட ஒரு திட்டமாக பார்க்கப்படுகிறது. குறைந்த விலையில் அட்டகாச நன்மையை விரும்புவோருக்கு இந்த திட்டம் பெஸ்ட்டானது.

Best Mobiles in India

English summary
BSNL Rs 247 Plan With 50GB Data Unlimited Voice Calls SMS Benefits For 36 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X