BSNL கொடுத்த பரிசு.. ரூ.300 விலை புள்ளி.. ஒரே ஒரு முறை ரீசார்ஜ்.. 150 நாள் வேலிடிட்டி.. ஆனால் ஒரு டிவிஸ்ட்..
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) என்ற பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள தேவையான முயற்சிகளை நிறுத்தாமல் தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது நிறுவனம் 150 நாள் வேலிடிட்டியுடன் திட்டத்தை வழங்கியுள்ளது.
பிஎன்என்எல் (BSNL) நிறுவனம் இப்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு பட்ஜெட் விலையில் 150 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை வழங்கி உள்ளது. இந்த BSNL திட்டம் PV_397 என்ற பெயருடன் பிஎஸ்என்எல் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த திட்டதின் பெயர் குறிப்பிடுவது போல, இந்த திட்டம் ரூ. 397 விலையில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் PV_397 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (BSNL PV_397 Prepaid Recharge Plan):
பிஎஸ்என்எல் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் இப்போது இந்த திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. தமிழ்நாடு மற்றும் பிற வட்டங்களில் இந்த BSNL PV_397 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (BSNL PV_397 Prepaid Recharge Plan) பயன்படுத்த கிடைக்கிறது. BSNL பட்டியலில் 150 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வரும் ஒரே திட்டமாக இந்த ரூ. 397 திட்டம் மட்டுமே காணப்படுகிறது.
இந்த BSNL PV_397 திட்டம் அதன் பயனர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (Unlimited voice calls) நன்மை, தினசரி டேட்டா (Daily data benefits) நன்மை, தினசரி எஸ்எம்எஸ் (daily SMS) போன்ற நன்மைகளை வழங்குகிறது. ஆனால், இந்த நன்மைகளை பிஎஸ்எஸ்எல் நிறுவனம் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், மக்களே இதுவொரு வித்தியாசமான கொள்கையுடன் செயல்படுகிறது.
இந்த திட்டத்தின் ஒட்டுமொத்த வேலிடிட்டி 150 நாட்கள் தான் என்றாலும், இதனுடன் கிடைக்கும் நன்மைகளை அனுபவிக்க நிறுவனம் குறிப்பிட்ட செல்லுபடி காலத்தை தனியாக வழங்கியுள்ளது. இந்த திட்டத்துடன் கிடைக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை, இந்த திட்டத்தின் பயனர்கள் முதல் 30 நாட்களுக்கு முழுமையாக பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கு பிறகு லோக்கல் அழைப்புகளுக்கு 1 நிமிடத்திற்கு 1 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த திட்டத்துடன் அடுத்த 30 நாட்களுக்கு கிடைக்கும் மற்ற நன்மைகள் என்ன?
STD அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 1.3 ரூபாய்யும், வீடியோ அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 2 ரூபாயும் வசூலிக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல், இந்த திட்டம் முதல் 30 நாட்களுக்கு தினமும் 2GB டேட்டா நன்மையை வழங்குகிறது. தினசரி டேட்டா அளவு முடிந்த பின் 40 Kbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா (Unlimited data) வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், முதல் 30 நாட்களுக்கு தினமும் 100 SMS நன்மையையும் பிஎஸ்என்எல் வழங்குகிறது.
இந்த திட்டத்துடன் கிடைக்கும் இலவச நன்மைகளும் முதல் 30 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், உங்கள் பிஎஸ்என்எல் சிம் கார்டை 150 நாட்களுக்கு ஆக்டிவில் வைக்க இந்த திட்டம் அனுமதிக்கிறது. குறைந்த செலவில் வாய்ஸ் கால் நன்மை, டேட்டா நன்மை மற்றும் எஸ்எம்எஸ் நன்மையோடு உங்கள் பிஎஸ்என்எல் சிம் கார்டை (BSNL SIM Card) ஆக்டிவ் நிலையில் வைக்க இந்த திட்டம் சிறப்பானது.
பிஎஸ்என்எல் 4ஜி என்னாச்சு (What Happened to BSNL 4G):
பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) சேவையை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்திய பிஎஸ்என்எல் பயனர்களின் எதிர்பார்ப்பில் மண்ணை வாரி இறைத்தது போல, இன்னும் காலதாமதமே எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் இந்தியாவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 4ஜி சேவையை வழங்க உள்ளநாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அமைப்பில் எதோ கோரலாறு ஏற்பட்டுள்ள காரணத்தினால், 4ஜி அறிமுகம் இன்னும் தாமதமாகும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications