75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
இந்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், மீண்டும் ஒரு அற்புதமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அதன் வடிக்கையாளர்களுக்காக 75 நாள் வேலிடிட்டியுடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினசரி SMS போன்ற நன்மைகளை வழங்குகிறது.
நாம் இங்கு பேசும் திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 499 விலைக்குள் அட்டகாசமான நன்மைகளை வழங்கும் பெஸ்ட் பட்ஜெட் பிரெண்ட்லி ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமாக இந்த BSNL திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பிஎஸ்என்எல் (BSNL) ப்ரீபெய்ட் திட்டமானது ரூ. 499 என்ற விலை உடன் இப்போது இந்தியா முழுக்க ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ. 499 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 499 Prepaid Plan):
இந்த ரூ. 499 இதன் விலை என்றாலும், இது மொத்தமாக 75 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை கொண்டுள்ளது. இந்த விலையில் இந்த திட்டம் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்று விரிவாக இந்த பதிவின் மூலம் பார்க்கலாம். பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பயனர்களுக்கு பல விலை புள்ளியில் பல நன்மைகள் அடங்கிய திட்டங்களை வழங்கி வந்தாலும்.
இந்த திட்டம் மக்களால் அதிகம் ஈர்க்கப்பட்ட திட்டமாக பார்க்கப்படுகிறது. இதற்கான காரணம், இந்த பிஎஸ்என்எல் ரூ. 499 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் முதலில் தினமும் 1ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா நன்மை (high speed data benefits) வழங்குகிறது. இந்த டேட்டா நன்மைக்கு தினசரி வரம்புக்கு உட்பட்டது. ஆகையால், இந்த திட்டத்தின் வேலிடிட்டி முடிவடையும் முன் தினசரி டேட்டாவை எந்த தடையுமின்றி நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இத்துடன் கிடைக்கும் அடுத்த அட்டகாசமான நன்மை என்றால், இந்த திட்டத்துடன் கிடைக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் அழைப்பு நன்மையை (Unlimited voice calls benefits) ஆகும். முன்பே சொன்னது போல, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 75 நாட்கள் என்பதனால், 2 மாதங்களுக்கு மேலாக தினமும் டேட்டா நன்மை மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 499 பிளான் நன்மைகள் (BSNL Rs 499 Plan Benefits):
இந்த பிஎஸ்என்எல் ரூ 499 பிளான் (BSNL Rs 499 Plan) தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் 75 நாட்களுக்கு மொத்தமாக உங்களுக்கு ஒரு பெரும் தொகுதி எஸ்எம்எஸ் நன்மை பயன்படுத்த கிடைக்கின்றன. இத்துடன் இலவச நன்மையாக பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes) மற்றும் ஈரோஸ் நவ் (Eros Now) போன்ற இலவச நன்மைகளை வழங்குகிறது.
இந்த ஒட்டுமொத்த நன்மைகளையும் பிஎஸ்என்எல் நிறுவனம் 75 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் எஸ்டிடி, நேஷனல் ரோமிங் மற்றும் கிரிக்கெட் PRBT மற்றும் கிரிக்கெட் SMS நன்மைகளையும் வழங்குகிறது. வெறும் 499 ரூபாய் விலைக்குள் 75 நாட்களுக்கு தினசரி 1ஜிபி டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை வழங்கும் இந்த திட்டம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications