விடமாட்டீங்க.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. ரூ.300 க்குள் சலுகைகளை அள்ளி வீசும் BSNL..
பிஎஸ்என்எல் நிறுவனம் மலிவு விலையில் அதிக நாள் வேலிடிட்டி மற்றும் அதிக டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. ஆனால் இந்நிறுவனம் 4ஜி சேவையை இந்நிறுவனம் அறிமுகம் செய்யவில்லை.
அதாவது பிஎஸ்என்எல் 4ஜி சேவை வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த பிஎஸ்எனஎல் நிறுவனம் நாடு முழுவதும் தனது 4ஜி சேவை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது குறைந்த விலையில் அதிக நன்மைகள் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் (bsnl rs 187 plan) திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 42ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு, இலவச PRBT சேவை உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 228 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், யுசநயெ மொபைல் கேமிங் சேவை உள்ளிட்ட பல நன்மைகள் வழங்கப்படுகிறது அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40kbps ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 247 plan) ஆனது மொத்தமாக 50ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.
பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 298 plan) தினமும் 1ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40kbps ஆக குறையும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 299 plan) 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கிறது. எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 90ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40kbps ஆக குறையும்.
குறிப்பாக ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை விட மலிவு விலையில் அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் 4ஜி சேவை தற்போது இல்லை என்பது தான் குறை. மற்றபடி இந்நிறுவனத்தின் திட்டங்கள் மற்றும் சலுகைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications