Home
News

BSNL விஸ்வரூபம்.. 4G-தான் இல்ல.. மாதம் ரூ.142 போதும்.. 7 மாதம் வேலிடிட்டி கொடுப்போம்.. வாய்ஸ் கால்கள்!

பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) சேவைகள் ஏப்ரல் மாதம் தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கூடுதல் தொழில்நுட்ப தேவை காரணமாக மீண்டும் தள்ளிப்போய்விட்டது. இந்த நேரத்தில் மாதம் ரூ.142 செலவில் 215 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி தெரிந்துகொள்வோம்.

பிஎஸ்என்எல் ரூ 999 திட்ட விவரங்கள் (BSNL Rs 999 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வாய்ஸ் கால்கள் (Voice Calls) தவிர டேட்டா (Data), எஸ்எம்எஸ் (SMS), ஓடிடி (OTT) போன்ற மற்ற சலுகைகளை எதிர்பார்க்க முடியாது. மிகவும் கம்மியான விலைக்கு கிடைப்பதால், வாய்ஸ் கால்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

4G-தான் இல்ல.. மாதம் ரூ.142 போதும்.. 7 மாதம் வேலிடிட்டி கொடுப்போம்!

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், 2 மாதங்களுக்கான பிஆர்பிடி (PRBT) சலுகையை பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 215 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

அதாவது, கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கும் மேல் வாய்ஸ் கால் சலுகையை பெற்று கொள்ள முடிகிறது. டேட்டா வேண்டாம், வாய்ஸ் கால்கள் போதும், அதுவும் 6 மாதங்களுக்கு மேல் வேலிடிட்டி வேண்டும் என்றால், இந்த திட்டத்தை பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் (BSNL Customers) தேர்ந்தெடுக்கலாம்.

இந்த திட்டத்தில் டேட்டாவை பயன்படுத்தும்பட்சத்தில், 1 எம்பிக்கு 25 பைசா வசூலிக்கப்படும். அதேபோல எஸ்எம்எஸ்களுக்கு 80 பைசா கட்டணம் வசூலிக்கப்படும். இதே வேலிடிட்டியில் டேட்டா சலுகை கொண்ட திட்டம் வேண்டுமானால், ரூ 1999 திட்டத்துக்கு பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் செல்லலாம். இந்த திட்டத்தின் சலுகைகளை இப்போது பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ 1999 திட்ட விவரங்கள் (BSNL Rs 1999 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் முந்தைய திட்டத்தை விட கூடுதல் வேலிடிட்டி கிடைக்கிறது. அதே போல அதிகப்படியான டேட்டா சலுகை மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளையும் கொண்டிருக்கிறது.

இந்த திட்டத்தை பெறும் பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு மொத்தமாக 600 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இதை தினசரி லிமிட் இல்லாமல் பயன்படுத்தலாம். இந்த 600 ஜிபியை முழுவதும் பயன்படுத்திய பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சேவையை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.

முந்தைய திட்டத்தை போலவே பிஆர்பிடி சலுகை 30 நாட்களுக்கு கொடுக்கப்படுகிறது. அதேபோல 30 நாட்களுக்கு லோக்தூன் (Lokdhun) சலுகையை பயன்படுத்தலாம். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

மொத்த டேட்டா வேண்டாம், தினசரி டேட்டா வேண்டும் என்றால், பிஎஸ்என்எல் ரூ 2399 திட்டத்தை (BSNL Rs 2399 Plan) தேர்ந்தெடுக்கலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது.

அதேபோல நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை பயன்படுத்த முடியும். மொத்தம் 790 ஜிபி டேட்டா ஒதுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், 40 கேபிபிஎஸ் வேகத்தில் ஃபேர் யூசேஜ் பாலிசி டேட்டா கொடுக்கப்படுகிறது. முந்தைய திட்டத்தை போல லோக்தூன் மற்றும் பிஆர்பிடி சலுகையை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 395 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
BSNL Rs 999 Plan Offers Unlimited Calls, 215 Days Validity, PRBT For 60 Days Check 7 Months Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X