Google Map-ஐ மிஞ்சிய டால்பின்: புயலில் சிக்கிய படகு.,ஏலே டோன்ட் வொரி பீ ஹேப்பி-கரை சேர்த்த டால்பின்

|

கடலில் வாழும் பாலூட்டி இனங்களில் ஒன்றாக திகழ்வது டால்பின். மனிதனுக்கு அடுத்த சிந்திக்க கூடிய உயிரினம் என்று பார்த்தால் அது டால்பின் தான் என்று கூறப்படுகிறது. குரங்கை விட அதிகமான புரிதல் கொண்ட உயிரினம் டால்பின் என்றும் கூறப்படுகிறது.

இருபகுதியிலும் நல்ல கண்பார்வை கொண்ட டால்பின்

இருபகுதியிலும் நல்ல கண்பார்வை கொண்ட டால்பின்

பெரும்பாலான டால்பின்கள் நீரின் அடியில் மற்றும் வெளியே என இருபகுதியிலும் நல்ல கண்பார்வை கொண்டவையாக இருக்கும். இவற்றால் மனிதனை விட பத்து மடங்கு அல்லது அதற்கு மேற்பட்ட அதிர்வெண்களை கேட்க முடியும். நீருக்கு அடியில் ஒலியைக் கேட்பதற்காக, பிரத்யேகமாக அமைந்திருக்கிறது கீழ் தாடை எலும்பு. டால்பின் பற்கள் எதிரொலியை உணர்ந்து ஒரு பொருளின் சரியான இடத்தை அறிவதாக கூறப்படுகிறது.

ஆட்டோ ஓட்டுநர் போல் வழிகாட்ட உதவிய டால்பின்

ஆட்டோ ஓட்டுநர் போல் வழிகாட்ட உதவிய டால்பின்

அதேபோல் டால்பின் தான் கடலில் உயிரை காப்பாற்றியது என பலர் கூறி கேள்வி பட்டிருப்போம். ஆனால் இது எப்படி என கேள்வி எழாமல் இல்லை. இருப்பினும் அதை உறுதி படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் அவ்வப்போது கடலில் நிகழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறது. நிலப்பரப்பில் வழி தெரியவில்லை என்றால் கூகுள் மேப் தேவை. அதுவும் நெட் கிடைக்காத நேரத்தில் கஷ்டம். இதே நடுக்கடலில் வழி தெரியாமல் தவித்தால் என்ன செய்வது. தெருவில் நிற்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் உதவுவது போன் கடல்வாழ் உயிரினங்கள் உதவுகிறது என்றே கூறலாம்.

இப்படி சொன்னால்.,Vodafone-ஐ நாளையே இழுத்து மூடுவதுதான் ஒரேவழி-வோடபோன் முக்கிய நபர் பகிரங்க பேச்சுஇப்படி சொன்னால்.,Vodafone-ஐ நாளையே இழுத்து மூடுவதுதான் ஒரேவழி-வோடபோன் முக்கிய நபர் பகிரங்க பேச்சு

டென்னிஸ் புயலில் சிக்கிய கப்பல்

டென்னிஸ் புயலில் சிக்கிய கப்பல்

இங்கிலாந்தில் வீசிய டென்னிஸ் (Dennis) புயல் அங்கு கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் கடல் பகுதிகளும் கொந்தளிப்புடன் காணப்பட்டன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கார்ன்வெல் கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்ற விசைப்படகு ஒன்று புயலில் சிக்கியது.

வழி தெரியாமல் தவித்த கப்பல்

வழி தெரியாமல் தவித்த கப்பல்

கடலில் சிக்கிய கப்பல் நடுக்கடலில் தங்களது பாதையை இழந்து வழித் தெரியாமல் தவித்துள்ளது. இவர்களை கரை சேர்க்க உதவியாக டால்பின் ஒன்று முன்வந்துள்ளது.

நான் வழிகாட்டுறேன் பயப்படாதிங்க

நான் வழிகாட்டுறேன் பயப்படாதிங்க

அந்த டால்பின், படகுக்கு முன்னதாக பாய்ந்து சென்று வழிகாட்டியது. டால்பின்களின் இந்தச் செயல்பாடுகளை குறிப்பிட்ட படகின் முன்பாகச் சென்ற மற்றொரு படகில் சென்றவர்கள் காட்சியாக படம் பிடித்துள்ளனர்.

இஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயர்கள் மொழியை திணிக்க முயற்சி: கிலிக்கிக்கு தனி இணையதளமே தொடக்கம்!இஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயர்கள் மொழியை திணிக்க முயற்சி: கிலிக்கிக்கு தனி இணையதளமே தொடக்கம்!

அறிவுத்திறனில் மேம்பட்ட உயிரினம் டால்பின்

அறிவுத்திறனில் மேம்பட்ட உயிரினம் டால்பின்

பொதுவாக மனிதனுக்கு அடுத்தபடியாக அறிவுத்திறனில் மேம்பட்ட உயிரினம் என்றால் அது டால்பின் தான் என்பதை உறுதிப் படுத்தும் விதமாக இந்த செயல் அமைந்துள்ளது. அதேபோல் இதற்கு முன்னதாகவும் பல பகுதிகளில் கடலில் சிக்கியவர்களுக்கு டால்பின்கள் உதவியிருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

File images

Courtesy: Social media

Best Mobiles in India

English summary
The dolphin who guided the boat that was trapped in Dennis storm

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X