10 ஆண்டு காதல்.,பிப்14 திருமணம்:வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்-திருமணத்தை நிறுத்திய மணமகன்:என்ன மெசேஜ்?

|

வாட்ஸ் அப் மூலம் எந்த அளவிற்கு நல் இருக்கிறதோ அதே அளவு பாதிப்பும் இருக்கிறது. அதுவும் பெண் குறித்து தகவல் என்றால் வாட்ஸ் அப் வேகமாக பரவுவதோடு, அவரின் வாழ்க்கையை பாதிப்புக்கும் உள்ளாக்குகிறது. இந்த நிலையில் வாட்ஸ் அப் மெசேஜால் நேர்ந்த நிகழ்வு குறித்து பார்க்கலாம்.

10 ஆண்டு கால காதல்

10 ஆண்டு கால காதல்

சென்னையைச் சேர்ந்த நரேந்திரன் என்பவரும் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கல்லூரி காலத்திலிருந்து 10 ஆண்டுகளாகக் காதலித்து வந்திருக்கின்றனர். இதையடுத்து இவர்களின் காதல் விஷயத்தை இரு வீட்டாருடனும் தெரிவித்து விட்டு சம்மதம் பெற்றுள்ளனர்.

காதலர் தினத்தன்று திருமண நிகழ்ச்சி

காதலர் தினத்தன்று திருமண நிகழ்ச்சி

காதல் கைகூடிய மகிழ்ச்சியில் தங்களது காதல் திருமணத்தை காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி வைத்துள்ளனர். இருவரும் தங்களது சொந்தபந்தம் நண்பர்கள் என அனைவருக்கும் பத்திரிக்கை வைத்துவிட்டு மகிழ்ச்சியில் திகழ்ந்துள்ளனர்.

Honor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!Honor 9X Pro: பிப்ரவரி 24: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

வாடஸ் அப்பில் வந்த அந்த மெசேஜ்

வாடஸ் அப்பில் வந்த அந்த மெசேஜ்

விறுவிறுப்பாக திருமண ஏற்பாடுகள் நடந்துவந்த நேரத்தில் நரேந்திரனுக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் ஒன்று வந்திருக்கிறது. அதில், அவருடைய 10 ஆண்டு கால காதலி வேலை பார்க்கும் இடத்தில் வேறு ஒருவருடன் பழகி வருவதாக கூறப்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையே தகராறு

இருவருக்கும் இடையே தகராறு

மேலும் அதற்கு ஆதாரமாக அவர்களுடைய சேட்டிங் விவரமும் அதில் இணைக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நரேந்திரன் தன் காதலியிடம் இதுபற்றி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு நடந்துள்ளது.

திருமணத்தை நிறுத்திய மணமகன்

திருமணத்தை நிறுத்திய மணமகன்

இதையடுத்து நரேந்திரன் திருமணத்தை நிறுத்த முடிவு செய்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து முன்னெச்சரிக்கையாக திருவொற்றியூர் போலீசாரிடமும்புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர்கள் விசாரித்து வந்த நிலையில், பெண் வீட்டாரும் திருமணத்தை நிறுத்திய நரேந்திரன் மீது தண்டையார்பேட்டை போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயர்கள் மொழியை திணிக்க முயற்சி: கிலிக்கிக்கு தனி இணையதளமே தொடக்கம்!இஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயர்கள் மொழியை திணிக்க முயற்சி: கிலிக்கிக்கு தனி இணையதளமே தொடக்கம்!

போலீஸார் விசாரணை

போலீஸார் விசாரணை

இருவீட்டார்களும் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டி வரும் நிலையில், உண்மை நிகழ்வு குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தினால் 10 ஆண்டு காதல் என்ற பெருமையோடு காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Chennai Groom stops love marriage for the reason of one whatsapp message

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X