Vodafone யூசர்களே.. ரெடி ஆகிக்கோங்க.. 2025-ல இந்த கம்பெனியே இருக்காது போல.. 25 லட்சம் பயனர்கள் ஓட்டம்!
நீங்களொரு வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டர்மர் என்றால்.. டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (Telecom Regulatory Authority of India) சமீபத்திய அறிக்கையை பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். ஏன்? எதற்காக? இதோ விவரங்கள்:
ஒவ்வொரு மாதமும் இந்திய டெலிகாம் நிறுவனங்கள் ஆனது.. அதாவது ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடாபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவைகள்.. கடந்த மாதங்களில் மொத்தம் எத்தனை வாடிக்கையாளர்களுக்கு சேர்த்துள்ளது, எவ்வளவு வாடிக்கையாளர்களை இழந்துள்ளது என்கிற விவரங்களை உள்ளடக்கிய டிராய் அறிக்கை பொதுவெளியில் பகிரப்படும்.

அப்படியாக சமீபத்தில் வெளியான டிராய் அறிக்கையானது, வோடபோன் ஐடியா நிறுவனத்தின் நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 2024 இல் , இந்நிறுவனம் 1 மில்லியனுக்கும் (அதாவது 10 லட்சத்திற்கும்) அதிகமான வயர்லெஸ் சந்தாதாரர்களை இழந்துள்ளது.
நினைவூட்டும் வண்ணம் கடந்த ஜனவரியில், இந்நிறுவனம் 1.5 மில்லியன் வயர்லெஸ் சந்தாதாரர்களை இழந்து இருந்தது. ஆகமொத்தம் 2024 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே.. அதாவது ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் வோடபோன் ஐடியா நிறுவனமானது சுமார் 2.5 மில்லியன் (25 லட்சம்) சந்தாதாரர்களை இழந்துள்ளது.

நிலைமை இப்படியே சென்றால் 2025 ஆம் ஆண்டு தொடங்குவதற்குள் வோடபோன் ஐடியா நிறுவனமே காணாமல் போய்விடும் என்பது போல் தெரிகிறது. இதற்கெல்லாம் காரணம் வோடபோன் ஐடியாவின் மோசமான நிதி நிலைமையும், அதனால் தள்ளிக்கொன்டே போகும் 5ஜி அறிமுகமும் (5G Launch Delay) தான்!
இதே காரணத்தினால் தான், பிஎஸ்என்எல்-ன் நிலைமையும் கூட மோசமாக உள்ளது. அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த தொலைத்தொடர்பு நிறுவனம் கடந்த பிப்ரவரி 2024 இல் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் பயனர்களை இழந்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஜனவரியுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவு தான். ஜனவரியில் இந்நிறுவனம் 1.18 மில்லியன் வயர்லெஸ் பயனர்களை இழந்து இருந்தது. ஆகமொத்தம் பிஎஸ்என்எல் நிறுவனமானது சுமார் 1.35 மில்லியன் பயனர்களை இழந்துள்ளது.

மறுகையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய இரண்டுமேவயர்லெஸ் பயனர்களின் எண்ணிக்கையில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளன. முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனமானது கடந்த பிப்ரவரியில் 3.5 மில்லியன் வயர்லெஸ் பயனர்களையும், ஜனவரியில் 4.1 மில்லியன் பயனர்களையும் சேர்த்துள்ளது - மொத்தம் 7.6 மில்லியன் சந்தாதாரர்களை சேர்த்துள்ளது.
அடுத்ததாக உள்ள பார்தி ஏர்டெல் நிறுவனமானது பிப்ரவரியில் 1.5 மில்லியனையும், ஜனவரியில் 0.75 மில்லியனையும் சேர்த்து, மொத்தம் 2.25 மில்லியன் சந்தாதாரர்களை சேர்த்துள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி, மேற்கண்ட எல்லா தரவுகளும் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மாதாந்திர செயல்திறன் குறிகாட்டி அறிக்கையில் (Monthly performance indicator report) இருந்து பெறப்பட்ட தரவுகள் ஆகும்!
சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய இரண்டையுமே ஒரே நேரத்தில் வெறுப்பேற்றும் படியான ஒரு வேலையை வோடாபோன் ஐடியா நிறுவனம் பார்த்திருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட நன்மைகளுடன் ரூ.49 திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது.
உங்களிடம் ஏற்கனவே ஆக்டிவ் ஆக இருக்கும் ஒரு பேஸிக் ரீசார்ஜ் இருந்தால் மட்டுமே வோடாபோனின் ரூ.49 திட்டத்தை ரீசார்ஜ் செய்ய முடியும். அதாவது இது ஒரு வழக்கமான ப்ரீபெய்ட் டேட்டா வவுச்சர் ஆகும். 1 நாள் என்கிற குறுகிய கால வேலிடிட்டியுடன் வரும் இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, ரீசார்ஜ் செய்த அதே நாளில் இரவு 11:59 மணிக்கு காலாவதியாகி விடும். இருந்தாலும் கூட இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு மொத்தம் 20ஜிபி டேட்டா (20GB Data) கிடைக்கும்.
இது ஏன் ஜியோ மற்றும் ஏர்டெலுக்கு எதிரான நடவடிக்கை என்றால்.. ரூ.49 திட்டத்தை முதலில் அறிமுகம் செய்தது ஏர்டெல் நிறுவனம் தான். மிகவும் சுவாரசியமான வேலிடிட்டி மற்றும் டேட்டா நன்மையை வழங்குவதால்.. ஜியோ நிறுவனமும் ரூ.49 மதிப்பிலான புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. தற்போது தன் பங்கிற்கு, வோடாபோன் ஐடியாவும் ரூ.49 திட்டத்தை கொண்டு வந்துள்ளது!


Click it and Unblock the Notifications








