BSNL நெத்தி அடி.. 30 நாட்கள் இலவசம்.. ரூ.699 போதும்.. 5 மாதங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ்.. 500எம்பி டேட்டா!
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போல 4ஜி சேவைகளை கொடுக்கும் வரையில், கஸ்டமர்களை தன்பக்கம் தக்க வைக்க பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது, கூடுதல் வேலிடிட்டி சலுகையை (Extra Validity Offer) கையில் எடுத்திருக்கிறது. இந்த சலுகை கொண்ட திட்டங்களின் விவரங்கள் இதோ.
இந்த கூடுதல் வேலிடிட்டியில் மொத்தம் 3 திட்டங்கள் இருக்கின்றன. இந்த நாட்களில் சர்வீஸ் வேலிடிட்டி மட்டும் கிடையாது. ப்ரீபெய்ட் திட்டத்தின் மொத்த சலுகைகளையும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். திட்டங்களுக்கு ஏற்ப 15 முதல் 30 நாட்கள் வரையில் கூடுதல் வேலிடிட்டி கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 699 திட்ட விவரங்கள் (BSNL Rs 699 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு முன்னதாக 120 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டது. இப்போது, கூடுதலாக 30 நாட்கள் வேலிடிட்டி உடன் 5 மாதங்களுக்கு டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது.
இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால் (Roaming Call) சலுகைகள் கிடைக்கின்றன. நாளொன்றுக்கு 0.5 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இந்த திட்டத்தில் 40 கேபிபிஎஸ் (40 Kbps) ஃபேர் யூசேஜ் பாலிசி டேட்டா கிடைக்கிறது.
அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை வருகிறது. இந்த சலுகைகள் போக வேலிடிட்டியின் முதல் 60 நாட்களுக்கு பிஆர்பிடி (PRBT) சலுகை கொடுக்கப்படுகிறது. வெறும் ரூ.699 மதிப்பில் 5 மாதங்களுக்கு சலுகை கிடைப்பதால், நல்ல திட்டமாகவே இருக்கிறது. இப்போது, 2ஆவது திட்டத்தை பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ 999 திட்ட விவரங்கள் (BSNL Rs 999 Plan Details): இந்த திட்டத்துக்கு 200 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டது. இப்போது, 15 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் திட்டத்தின் சலுகைகள் அனைத்தையும் பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகைகள் கிடைக்கின்றன. அதேபோல 60 நாட்களுக்கு பிஆர்பிடி (PRBT) சலுகை கிடைக்கிறது. ஆனால், டேட்டா சலுகையை இந்த திட்டம் கொண்டிருக்கவில்லை. வாய்ஸ் கால்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் ரூ 2999 திட்ட விவரங்கள் (BSNL Rs 2999 Plan Details): இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைத்து வந்தது. ஆனால், இப்போது 30 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி உடன் 395 நாட்களுக்கு சலுகைகள் கொடுக்கப்படுகிறது. 13 மாதங்களுக்கு வேறெந்த திட்டமும் கஸ்டமர்களுக்கு தேவைப்படாது.
இந்த வருடாந்திர பிஎஸ்என்எல் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு நாள்தோறும் 3 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இதை 395 நாட்களுக்கு கணக்கிட்டால், 1095 ஜிபி டேட்டாவாக இருக்கிறது. இந்த திட்டத்திலும் 40 கேபிபிஎஸ் ஃபேர் யூசேஜ் பாலிசி டேட்டா சலுகை கிடைக்கிறது.
நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்களை பிஎஸ்என்எஸ் கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். 2 மாதங்களுக்கான பிஆர்பிடி சலுகை கிடைக்கிறது. அதேபோல 2 மாதங்களுக்கான லோக்தூன் (Lokdhun) சலுகையும் கொடுக்கப்படுகிறது. மேற்கூறிய திட்டங்களுக்கே கூடுதல் வேலிடிட்டி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications