Home
News

Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பபடி இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,999-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.13,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக அமேசான்,மி.காம் போன்ற தளங்களில் இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்க முடியும்.

 அட்டகாசமான டிஸ்பிளே வசதி

அட்டகாசமான டிஸ்பிளே வசதி

இந்த ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலில் 6.53' இன்ச் கொண்ட 3D கர்வுடு கிளாஸ் கொண்ட வாட்டர் நாட்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, மேலும் 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்தசாதனம் வெளிவந்துள்ளது.

அருமையான சிப்செட் வசதி

அருமையான சிப்செட் வசதி

ரெட்மி நோட் 8ப்ரொ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ G90T சிப்செட் பிராசஸர் வசதி உள்ளது, எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 9பை ஆதரவைக் கொண்டு இந்த சாதனம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு வசதி

சேமிப்பு வசதி

இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும்கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புமிகவும் அருமையாக இருக்கும்.

மிரட்டலான கேமரா வசதி

மிரட்டலான கேமரா வசதி

ரெட்மி நோட் 8ப்ரொ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 20எம்பிசெல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள்அடக்கம்.

பேட்டரி வசதி

பேட்டரி வசதி

இந்த ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, குறிப்பாக வீடியோ, வீடியோ கேம் போன்ற வசதிகளுக்கு அருமையாக உதவும். அதன்பின்பு 18வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போனில் வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி 5.0, ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்ள அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

கருப்பு, பசுமை, வெள்ளை

கருப்பு, பசுமை, வெள்ளை, நீலம் போன்ற நிறங்களில் ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் கிடைக்கும். குறிப்பாக விலைகுறைக்கப்பட்ட இந்த சாதனம் அமேசான், மி.காம் போன்ற தளங்களில் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Redmi Note 8 Pro India Price Slashed now Available at Rs. 13,999 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X