போச்சு.. BSNL யூசர்கள் பாவம்! பேசாம வேற SIM வாங்கிடுங்க.. உலை வச்ச உள்நாட்டு தொழில்நுட்பம்.. 4G-ஐ மறந்துடுங்க!
பான்-இந்தியா அடிப்படையிலான 4ஜி அறிமுகத்திற்காக காத்திருக்கும்.. பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்களின் பொறுமைக்கு ஒரு விருதே கொடுக்கலாம். ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனங்கள் "கிட்டத்தட்ட" இந்தியா முழுவதும் தத்தம் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்துவிட்டன.
இருந்தாலும் கூட.. கூடிய விரைவில் 4ஜி சேவையும் (4G Network).. அதை தொடர்ந்து 5ஜி சேவையும் (5G Service), இந்தியா முழுவதும் அறிமுகமாகும் என்று பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் நம்பிக்கையோடு காத்துகொண்டு இருக்கின்றனர். தற்போது அந்த நம்பிக்கைக்கு வேட்டு வைக்கும்படியான ஒரு பகீர் தகவல் வெளியாகி உள்ளது!

அதென்ன தகவல்? இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த டெலிகாம் நிறுவனம், தனது 4ஜி நெட்வொர்க்கை வெளியிடுவது தொடர்பாக ஒரு புதிய பிரச்சனையில் சிக்கி உள்ளது. பிஎஸ்என்எல் 4ஜி சேவைக்காக உருவாக்கப்பட்ட உள்நாட்டு தொழில்நுட்பம் (Homegrown Technology) ஆனது சரியாக வேலை செய்யவில்லையாம்.
சி-டாட் (C-DoT) என்று சுருக்கமாக அழைக்கப்படும் டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையம் (Centre for Development of Telematics) உருவாக்கிய நெட்வொர்க் கோரில் (Network Core) ஒரு சிக்கல் கண்டறியப்பட்டு உள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலின்படி, வெளிப்புற சூழலில் பல சந்தாதாரர்கள் ஒரே நேரத்தில் அழைப்புகளை (Concurrent calls) செய்ய முடியவில்லையாம்!

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (Tata Consultancy Services - TCS) தலைமையிலான கூட்டமைப்பின் ஒரு பகுதியான சி-டாட் ஆனது, அம்பாலா மற்றும் சண்டிகரில் உள்ள பிஎஸ்என்எல்-ன் வணிக நெட்வொர்க்குகளில் எவால்வ்டு பாக்கெட் கோரை (Evolved Packet Core - EPC) உள்நாட்டிலேயே உருவாக்கி வெற்றிகரமாக சோதனை செய்ததாக கூறி இருந்தது.
அதை தொடர்ந்தே டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்-க்கு உபகரணங்களை வழங்கவும், 4ஜி வெளியீட்டின் போது சிஸ்டம்ஸ் ஒருங்கிணைப்பாளராக (Systems integrator - SI) செயல்படவும் சி-டாட்-க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் உண்மை நிலவரமானது "வெற்றிகரமான சோதனை" என்கிற கூற்றுக்கு முற்றிலும் வேறுபட்டதாக தெரிகிறது.

இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் 4ஜி சேவையை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தி, டெலிகாம் சந்தையில் ஒரு பெரிய பங்கை பெற மாட்டோமா என்று பிஎஸ்என்எல் நிறுவனமும், அதன் ஊழியர்களும் ஏங்கிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மேட் இன் இந்தியா தொழில்நுட்பமானது அந்த ஏக்கத்தில் மண்ணை அள்ளி போட்டுள்ளது போல் தெரிகிறது!
தற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கீழ் சுமார் 90 மில்லியன் பயனர்கள் உள்ளனர் மற்றும் ஆக்டிவ் ஆக உள்ள யூஸர் பேஸ் ஆனது 50 மில்லியனுக்கும் குறைவாகவே உள்ளது. பான்-இந்தியா அடிப்படையிலான 4ஜி சேவையை அறிமுகம் செய்யாதவரை இந்த எண்ணிக்கை நிசசயம் அதிகரிக்க போவதில்லை.
சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனமானது அதன் அதிகாரப்பூர்வ செயலியான மை பிஎஸ்என்எல் ஆப்பின் (My BSNL App) அம்சங்களை பிஎஸ்என்எல் செல்ப்கேர் ஆப் (BSNL Selfcare App) உடன் இணைத்ததும் இங்கே குறிப்பிடததக்கது. இந்த திடீர் மாற்றத்தை தொடர்ந்து பிஎஸ்என்எல் பயனர்கள், அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் அணுக பிஎஸ்என்எல் செல்ப்கேர் ஆப்பை கட்டாயம் பதிவிறக்கம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
பிஎஸ்என்எல் செல்ப்கேர் ஆப் ஆனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய 2 வெர்ஷன்களிலும் முறையே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் (Apple App Store) வழியாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது. இந்த ஆப்பை டவுன்லோட் செய்வதன் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் ஒருங்கிணைந்த மற்றும் தடையற்ற அனுபவம் கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் கூறுகிறது.
அறியாதோர்களுக்கு பிஎஸ்என்எல் செல்ப்கேர் ஆப்பில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கீழ் அணுக கிடைக்கும் அனைத்து வகையான சேவைகளையும் (ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட், லேண்ட்லைன் மற்றும் ஃபைபர்-டு-தி-ஹோம்) நிர்வகிக்க முடியும். மேலும் இந்த ஆப் வழியாக டேட்டா பயன்பாட்டை (Data usage) கண்காணிக்க உதவும் புள்ளிவிவரங்களை காட்சிப்படுத்தும் டாஷ்போர்டுகளையும் (Dashboards) அணுக முடியும்!


Click it and Unblock the Notifications