15 நிமிடங்களில் 100% சார்ஜ் ஆகும் Xiaomi-யின் ஃபேமஸ் ஆன 5G Phone மீது திடீர் விலைக்குறைப்பு!

|

சியோமி (Xiaomi) நிறுவனம் அதன் பிரபலமான 5ஜி ஸ்மார்ட்போன் (5G Phone) ஒன்றின் மீது திடீர் விலைக்குறைப்பை அறிவித்துள்ளது.

இன்னொரு சுவாரசியமான விடயம் என்னவென்றால் விலைக்குறைப்பை பெற்றுள்ள அந்த சியோமி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது - வெறும் 15 நிமிடங்களில் 0 - 100% சார்ஜ் செய்யும் அளவிலான பாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது!

அதென்ன ஸ்மார்ட்போன்? அதன் பழைய விலை நிர்ணயம் என்ன? புதிய விலை நிர்ணயம் என்ன? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

சியோமியின் எந்த ஸ்மார்ட்போன் விலைகுறைப்பை பெற்றுள்ளது?

சியோமியின் எந்த ஸ்மார்ட்போன் விலைகுறைப்பை பெற்றுள்ளது?

நாம் இங்கே பேசுவது - இந்த 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமான சியோமியின் சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் ஸ்மார்ட்போன் ஆன சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 5ஜி மாடலை பற்றி தான்.

இது 120W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் இந்நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது!

Redmi அங்குட்டு போ.. Realme இங்குட்டு போ! வெறும் ரூ.14,799 க்கு புது மாடலை இறக்கிவிட்ட OnePlus!Redmi அங்குட்டு போ.. Realme இங்குட்டு போ! வெறும் ரூ.14,799 க்கு புது மாடலை இறக்கிவிட்ட OnePlus!

எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளது?

எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளது?

சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன் மீது ரூ.1000 என்கிற விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னொரு சுவாரசியமான விடயம் என்னவென்றால், இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் வருகிறது (6ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ரேம்) மற்றும் அந்த இரண்டுமே ரூ.1,000 என்கிற விலைக் குறைப்பை பெற்றுள்ளன.

இந்த புதிய விலை நிர்ணயம் சியோமி நிறுவனத்தின் இணையதளத்தில் பிரதிபலிக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது!

பழைய விலை VS புதிய விலை:

பழைய விலை VS புதிய விலை:

அறிமுகத்தின் போது சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 5ஜி ஸ்மார்ட்போனின் 6GB+128GB ஆப்ஷன் ஆனது ரூ.26,999 க்கும், அதன் 8GB+128GB ஆப்ஷன் ஆனது ரூ.28,999 க்கும் வெளியானது.

தற்போது ரூ.1,000 என்கிற விலை வீழ்ச்சிக்குப் பிறகு, 6ஜிபி ஆப்ஷன் ஆனது ரூ.25,999 க்கும், 8ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.27,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

ஆர்வமுள்ளவர்கள் இந்த ஸ்மார்ட்போனை Camo Green, Pacific Pearl, Purple Mist மற்றும் Stealth Black ஆகிய வண்ண விருப்பங்களின் கீழ் வாங்கலாம்.

இந்த விவரம் தெரிஞ்ச யாருமே 2023 ஆரம்பிக்கிற வரை.. புது Phone வாங்க மாட்டாங்க! என்னது அது?இந்த விவரம் தெரிஞ்ச யாருமே 2023 ஆரம்பிக்கிற வரை.. புது Phone வாங்க மாட்டாங்க! என்னது அது?

விலைக்குறைப்பு மட்டும் தானா? இல்லை!

விலைக்குறைப்பு மட்டும் தானா? இல்லை!

சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 5G ஸ்மார்ட்போனின் மீது விலைக்குறைப்பு மட்டுமல்ல, இன்னும் சில சலுகைகளும் அணுக கிடைக்கிறது.

நீங்கள் HDFC வங்கி கிரெடிட் கார்ட்டை பயன்படுத்தும் பட்சத்தில், உங்களுக்கு ரூ.1500 என்கிற உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

எக்ஸ்சேன்ஜ் மதிப்பை பொறுத்தவரை, உங்கள் பழைய ஸ்மார்ட்போனை கொடுத்து ரூ.16,500 வரையிலான பணத்தையும் உங்களால் சேமிக்க முடியும்!

சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 5G ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:

சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 5G ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:

- 6.67 இன்ச் ஃபுல் எச்டி+ AMOLED டிஸ்ப்ளே
- 1080x2400 பிக்சல் ரெசல்யூஷன்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான MIUI 12.5
- மீடியாடெக் Dimensity 920 ப்ராசஸர்
- 108MP + 8MP அல்ட்ரா-வைட் ஷூட்டர் + 2MP மேக்ரோ ஷூட்டர்
- 16MP செல்பீ கேமரா
- 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4500mAh பேட்டரி
- டால்பி அட்மாஸ் ட்யூன் செய்யப்பட்ட டூயல் ஸ்பீக்கர்ஸ்

Best Mobiles in India

English summary
First smartphone from Xiaomi which supports 120W fast charging gets Rs 1000 Price cut in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X