அம்பானிக்கு தண்ணி காட்டிய Airtel.. Jio வைவிட 2 மடங்கு டேட்டா.. ஒரே பிளான் 3.3TB டேட்டா நன்மை..
இந்திய டெலிகாம் துறையில் ஜியோ (Jio) நிறுவனத்திற்கும், ஏர்டெல் (Airtel) நிறுவனத்திற்கும் இடையே கடும் போட்டி நிகழ்ந்து வருகிறது. யார் அதிக நன்மையை வழங்கி மக்களை அவர்களின் நெட்வொர்க்கிற்குள் ஈர்க்கிறார்கள் என்பதே நீண்ட கால போட்டியாக இருக்கிறது.
ஒவ்வொரு சுற்றிலும் ஏர்டெல் மற்றும் ஜியோவுக்கு இடையிலான போட்டியில், ஜியோ பெரும்பாலான நேரங்களில் முன்னிலை வகித்து வந்தாலும், ஜியோவின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு அதிரடி திட்டத்தை ஏர்டெல் இப்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் ஜியோ பயனர்களையே பொறாமைப்பட செய்யும் அளவிற்கான டேட்டா நன்மையை வாரி வழங்கியுள்ளது.

இந்தியாவில், இப்போது ஏர்டெல் அதிக நன்மையை வழங்குகிறதா? அல்லது ஜியோ அதிக நன்மையை வழங்குகிறதா? எந்த நெட்வொர்க்கை தேர்வு செய்தால் நமக்கு லாபம் அதிகம் என்ற கேள்விக்கு உங்களுக்கு விடை தெரிய வேண்டுமென்றால், இந்த பதிவை இறுதி வரை ஸ்கிப் சசெய்யாமல் படியுங்கள். ஜியோவின் ஆட்டத்தை அடக்க ஏர்டெல் கையாண்ட யுக்தி என்னவென்று இப்போது பார்க்கலாமா? வாங்க.
ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் vs ஜியோ ஏர்ஃபைபர் (Airtel Xstream AirFiber vs Jio AirFiber):
இந்தியாவில் பிக்ஸடு வயர்லெஸ் அக்சஸ் (Fixed Wireless Access - FWA ) 5ஜி சேவையை விரிவுபடுத்தும் முயற்சிகளை இரண்டு நிறுவனங்களும் மிகவும் சீரியஸாக வேலை செய்து வருகிறது. ஏர்டெல் நிறுவனம் அதன் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் (Airtel Xstream AirFiber) திட்டங்களையும், ஜியோ நிறுவனம் அதன் ஜியோ ஏர்ஃபைபர் (Jio AirFiber) திட்டங்களையும் மக்களுக்காக அறிமுகம் செய்து வருகின்றன.
என்ன தான் 2 நிறுவனங்களும் மாறிமாறி நன்மைகளை வாரி வழங்கி வந்தாலும், சில உன்னிப்பான நுணுக்கங்களில் மூலம் 2 நிறுவனங்களின் நன்மைகளிலும் குறிப்பிட்ட சில வேறுபாடுகளை நம்மால் உணர முடிகிறது. அடிக்கடி ரீசார்ஜ் (recharge) செய்யும் மக்களாகிய நாம் இந்த விஷயங்களை உன்னிப்பாக கவனிப்பது அவசியமாகிறது. எந்த திட்டத்தை தேர்வு செய்தால் நமக்கு லாபம் (profit) என்பதை கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும் தானே.

தற்போதைய நிலவரப்படி, ஏர்டெல் 100 எம்பிபிஎஸ் வேகத்துடன் (100 Mbps speed), வரம்பற்ற டேட்டா நன்மையை ஒரே ஒரு திட்டத்துடன் மட்டுமே வழங்குகிறது. அதேசமயம், ஜியோ 30 எம்பிபிஎஸ் வேகம் (30 Mbps) முதல் 1 ஜிபிபிஎஸ் வேகம் (1Gbps Speed) வரை பல வேகத்தில் பல வரம்பற்ற டேட்டா திட்டங்களை வழங்குகிறது. இருப்பினும், ஜியோ ஏர்ஃபைபர் சேவை கிடைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அதிக வேகம் கொண்ட திட்டங்கள் பயன்பாட்டிற்கு கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது.
ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் (Airtel Xstream AirFiber):
ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் ஆனது மாதத்திற்கு 3333GB அல்லது 3.3TB என்ற நியாயமான பயன்பாட்டுக் கொள்கையுடன் (FUP) வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. டேட்டா ஒதுக்கீடு தீர்ந்த பிறகு, ஏர்டெல் பயனர்கள் எந்த வரம்பும் இல்லாமல் 2 Mbps வேகத்தை அனுபவிக்க முடியும். இது பெரும்பாலான சர்பிங் (surfing) மற்றும் ஸ்ட்ரீமிங் (streaming) செயல்பாடுகளுக்கு போதுமானது.
ஜியோ ஏர்ஃபைபர் (Jio AirFiber):
இதே நுணுக்கத்தை, ஜியோவிடம் இருந்து பார்த்தால், ஜியோ அதன் பயனர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா நன்மை (unlimited data benefits) என்று வெறும் 1TB அதிவேக டேட்டா நன்மையை மட்டுமே வழங்குகிறது. இந்த 1TB வரம்பைத் தாண்டிய பிறகு, நியாயமான பயன்பாட்டுக் கொள்கையின்படி வேகம் 64 kbps ஆகக் குறையும். கூடுதல் டேட்டா வேண்டும் என்றால் பயனர்கள் ரூ.401 டேட்டா பூஸ்டரை பயன்படுத்தி 1TB டேட்டாவை பெற்றுக்கொள்ளலாம்.
இறுதியில், ஜியோவை விட ஏர்டெல் நிறுவனம் தான் அதிக அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது. இன்னும் சரியாக சொல்ல போனால், ஜியோவை விட 2 மடங்கு டேட்டாவை ஏர்டெல் வழங்குகிறது. அதிலும் குறிப்பாக, FUP வரம்பிற்கு பிறகு பின்பற்றப்படும் டேட்டாவின் வேகமும் கூட ஜியோ வழங்கும் 64Kbps விட ஏர்டெல் வழங்கும் 2Mbps வேகம் அதிகமாகவுள்ளது. இறுதியில் ஏர்டெல் அதிக லாபம் தரக்கூடிய நன்மைகளை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








