Home
News

அடிமட்ட ரேட்டிற்கு விலை குறைய போகும் 4G மொபைல்கள்.. பட்ஜெட் போனே இனி ரூ.7000 தானா? என்ன சொல்றீங்க?

சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களான சாம்சங் (Samsung), சியோமி (Xiaomi) போன்ற பிராண்டுகள் பட்ஜெட் விலையில் 5ஜி மொபைல்களை (5G Mobiles) அறிமுகம் செய்து வருகின்றன. இதனால், அடுத்த 2024ம் ஆண்டில் 4ஜி மொபைல்களின் விலை அடிமட்ட ரேட்டிற்கு செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் (Indian Smartphone Market) எதிர்பாராத மிகப் பெரிய மாற்றம் விரைவில் ஏற்படப்போகிறது. தற்போது ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் பட்ஜெட் செக்மென்ட் (Budget Segment Mobiles) மற்றும் குறைந்த விலை பிரிவில் 5ஜி தொழில்நுட்பத்துடன் இயங்கும் ஸ்மார்ட்போன்களை (Low Price 5G Mobiles) அறிமுகம் செய்து, சந்தையை நிரப்பி வருகின்றன. இதனால், 4ஜி சாதனங்களுக்கான வியாபாரம் மந்தமாகி வருகிறது.

அடிமட்ட ரேட்டிற்கு விலை குறைய போகும் 4G மொபைல்கள்.. இனி ரூ.7000 தானா?

இந்தியாவில் மடமடவென விலை குறையும் 4ஜி மொபைல்கள் (4G mobiles getting cheaper in India):

சரியான முறையில் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட வேண்டிய 4ஜி மொபைல் போன்கள் (4G Mobiles) இப்போது ஒரே இடத்தில் விற்பனையாகாமல் முடக்கப்பட்டுள்ளன. அதாவது 5ஜி போன்களுக்கான டிமாண்ட் (5G phone demand) அதிகரித்து, 4ஜி போன்களுக்கான டிமாண்ட் (4G phone demand) முற்றிலுமாக குறைந்து, போதிய வியாபாரம் இல்லாமல் வீணாகும் நிலையில் ஸ்டாக் (Stock) வைக்கப்பட்டு வருகின்றன. இதை உடனே விற்பனை செய்து முடிக்க நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இதனால், உடனே துவங்கி, அடுத்த ஆண்டின் முதல் காலாண்டிற்குள் இவை அனைத்தையும் அடிமட்ட ரேட்டிற்காவது விற்பனை செய்து முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகையால், விரைவில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில், 4ஜி ஸ்மார்ட்போன் சாதனங்கள் மிகவும் மலிவான விலையில் விற்பனைக்கு வரப்போகிறது (4G mobiles getting cheaper in India) என்ற தகவலை சமீபத்திய ரிப்போர்ட் (Report) மூலம் வெளி வந்துள்ளது.

என்னதான் 5ஜி (5G) புதிய தொழில்நுட்பம் என்றாலும், நாட்டின் பல இடங்களில் 4ஜி (4G) நெட்வொர்க் தான் சிறப்பான முறையில் கிடைக்கிறது. 5ஜி போன்கள் இருந்தும், மக்கள் இன்னும் தொடர்ந்து 4ஜி நெட்வொர்க்கில் (4G network) தான் அவர்களின் 5ஜி சாதனங்களையே இயக்கி வருகிறார்கள் என்பது உண்மையாகும். இருந்தாலும் மக்கள் 5ஜி போன்களை (5G mobile) வாங்கவே ஆர்வம் காட்டுகிறார்கள்.

அடிமட்ட ரேட்டிற்கு விலை குறைய போகும் 4G மொபைல்கள்.. இனி ரூ.7000 தானா?

இனி பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் அடிமட்ட விலைக்கு கிடைக்குமா? (budget smartphones going to cheaper price):

சமீபத்திய தகவல் படி, இந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் சும்மர் 60% 5ஜி போன்களை அறிமுகம் செய்து விற்பனைக்காக அவற்றை ஷிப்பிங் (Shipping) செய்துள்ளன. இது 4ஜி போன்கள் விற்பனைக்கு அனுப்பப்பட்ட அளவை விட அதிகம் என்று குறிப்பிடப்படுகிறது. வரவிருக்கும் 2024ம் ஆண்டில் இன்னும் அதிகமான 5ஜி ஸ்மார்ட்போன் சாதனங்களை (More 5G smartphones getting launch in 2024) நாம் எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, ரூ.10,000 முதல் ரூ.15,000 விலை பிரிவின் கீழ் பல புதிய 5ஜி சாதனங்களை நாம் எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விலை பிரிவில் 5ஜி போன்கள் கிடைத்தால், 4ஜி போன்களின் விலை எவ்வளவு அதிகமாக குறையும் என்று யோசித்து பாருங்கள். கவுண்டர்பாயிண்ட் (Counterpoint) வெளியிட்ட கணிப்பின் படி, தரமான அம்சங்களுடன் பட்ஜெட் பிரிவில் இருந்த 4ஜி ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.7000 முதல் ரூ.10,000-திற்குள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பட்ஜெட் செக்மென்ட் 4ஜி போன்களுக்கே இந்த நிலைமை என்றால், மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்ட என்ட்ரி லெவல் 4ஜி ஸ்மார்ட்போன்களின் விலை எவ்வளவு குறைய போகிறது என்பதை பார்க்க நாங்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். சரி, என்னதான் அடிமட்ட விலைக்கு 4ஜி போன்கள் வாங்க கிடைத்தாலும், உங்கள் விருப்பம் என்னவாக இருக்கும் என்று உங்கள் கருத்தை கமெண்டில் பதிவிடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
4G Mobiles Getting Cheaper In India Due To Excess Introduction Of 5G Mobiles By Smartphone Makers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X