Home
News

யாரு சாமி இவன்.. இப்படி அம்சத்தை இந்த போனில் கொடுத்தது.. தூள் கிளப்பும் Vivo X100 Pro+ ஸ்பெக்ஸ்..

ஜனவரி 4ம் தேதியான நேற்று விவோ (Vivo) நிறுவனம் அதன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான விவோ X100 (Vivo X100) மற்றும் விவோ X100 ப்ரோ (Vivo X100 Pro) சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

விவோ நிறுவனம் இந்த X சீரிஸ் வரிசையின் கீழ் இரண்டு சாதனங்களை மட்டுமே அறிமுகம் செய்கிறது என்று இதுவரை நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, நிறுவனம் விரைவில் கூடுதலாக விவோ X100 ப்ரோ பிளஸ் (Vivo X100 Pro+) என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

யாரு சாமி இவன்.. இப்படி அம்சத்தை இந்த போனில் கொடுத்தது..

விவோ நிறுவனம் இப்போது அதிகாரப்பூர்வமாக விவோ X100 (Vivo X100) மற்றும் விவோ X100 ப்ரோ (Vivo X100 Pro) ஸ்மார்ட்போன் சாதனங்களை மட்டும் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, நிறுவனம் விவோ X100 ப்ரோ பிளஸ் (Vivo X100 Pro+) சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. அறிமுகத்திற்கு முன்பாக இதில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் என்ற தகவல்கள் இப்போது லீக் ஆகியுள்ளது.

விவோ X100 ப்ரோ+ (Vivo X100 Pro+):

விவோ நிறுவனம் இந்த ஆண்டின் இரண்டாம் கால் பாதியில் விவோ X100 ப்ரோ பிளஸ் (Vivo X100 Pro+) சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த சாதனம் சாம்சங் E7 AMOLED ( Samsung E7 AMOLED) டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது ஒரு முழுமையான பிளாக்ஷிப் மாடலாக வெளிவரும். இது பன்ச் ஹோல் கட்டவுட் உடன் வருகிறது.

இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 32MP செல்பி கேமராவுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்பக்கத்தில், இந்த விவோ X100 ப்ரோ பிளஸ் (Vivo X100 Pro+) ஸ்மார்ட்போன் சாதனம் 50MP சோனி LYT-900 பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 200MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ ஷூட்டர் உடன் 4.3X ஆப்டிகல் ஜூம் மற்றும் 20X டிஜிட்டல் ஜூம் உடன் வருகிறது.

யாரு சாமி இவன்.. இப்படி அம்சத்தை இந்த போனில் கொடுத்தது..

விவோ X100 ப்ரோ+ போனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சம் (Vivo X100 Pro+ Expected Specifications):

இத்தகைய தகவல்கள் லீக் செய்யப்பட்டாலும், இன்னும் இந்த வரவிருக்கும் விவோ X100 ப்ரோ பிளஸ் (Vivo X100 Pro+) ஸ்மார்ட்போனில் என்ன பேட்டரி இடம்பெறும் என்பது தெளிவாக தெரியவில்லை. இதுகுறித்த தகவலை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், விவோ X100 ப்ரோ அறிமுகமானதை வைத்து பார்க்கையில், அதில் பயன்படுத்தப்பட்ட 5400mAh பேட்டரி தான் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 100W வயர்டு பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவோ X100 ப்ரோ+ (Vivo X100 Pro+) ஸ்மார்ட்போன் சாதனத்தில் டூ-வே சாட்டிலைட் கம்யூனிகேஷன் அம்சங்கள் கூட இடம்பெறும் என்று லீக் தகவல் குறிப்பிடுகிறது. இதுவரை இந்த விவோ X100 ப்ரோ பிளஸ் (Vivo X100 Pro+) ஸ்மார்ட்போன் நமக்கு தெரிந்த தகவல்கள் இது மட்டுமே.

விரைவில் கூடுதல் தகவலுடன் உங்களை அப்டேட் செய்கிறோம். விவோ X100 (Vivo X100) மற்றும் விவோ X100 ப்ரோ (Vivo X100 Pro) ஸ்மார்ட்போன்கள் இப்போது இந்தியாவில் ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் சாதனங்கள் ஜனவரி 11ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo X100 Pro+ Leaked Info Ahead Of Upcoming Launch Check Expected Specifications and Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X