இந்த விவரம் தெரிஞ்ச யாருமே 2023 ஆரம்பிக்கிற வரை.. புது Phone வாங்க மாட்டாங்க! என்னது அது?

|

2023 புத்தாண்டுக்கு முன், அதாவது இந்த 2022 ஆம் ஆண்டு முடிவடைவதற்குள், ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்கி விடலாம் என்கிற எண்ணம் / திட்டம் உங்களிடம் இருக்கிறதா?

ஆம் என்றால் - இந்த கட்டுரை முழுக்க முழுக்க உங்களுக்கானது தான்!

எந்தவொரு ஸ்மார்ட்போனையும் வாங்க மாட்டீர்கள்!

எந்தவொரு ஸ்மார்ட்போனையும் வாங்க மாட்டீர்கள்!

குறிப்பிட்ட சில விவரங்களை நீங்கள் அறிந்துகொள்ளும் பட்சத்தில், 2023 ஆம் ஆண்டு தொடங்கும் வரை எந்தவொரு நிறுவனத்தின் ஸ்மார்ட்போனையும் நீங்கள் வாங்க மாட்டீர்கள்! அதென்ன விவரங்கள்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

வழக்கமாக புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமானதுமே பழைய ஸ்மார்ட்போன்கள் கண்டுகொள்ளப்படாது தான். ஆனால் இம்முறை.. அதாவது 2022 இல் அறிமுகமான ஸ்மார்ட்போன்கள் மற்றும் 2023 இல் அறிமுகமாக போகும் ஸ்மார்ட்போன்களுக்கு இடையேயான வித்தியாசம் - வேற லெவலில் இருக்க போகிறது!

Zomato-வை கதற விட்ட கேரள சேட்டன்! ஆர்டர் செய்ததோ ரூ.362-க்கு.. வாங்கியதோ ரூ.8,362! என்ன நடந்தது?Zomato-வை கதற விட்ட கேரள சேட்டன்! ஆர்டர் செய்ததோ ரூ.362-க்கு.. வாங்கியதோ ரூ.8,362! என்ன நடந்தது?

ஒன்றல்ல.. இரண்டல்ல.. 8 புதிய விஷயங்கள்!

ஒன்றல்ல.. இரண்டல்ல.. 8 புதிய விஷயங்கள்!

வருகிற 2023 ஆம் ஆண்டில் வெளியாகும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இடம்பெறவுள்ள 8 புதிய அம்சங்களை பற்றி நீங்கள் அறிந்துகொள்ளும் பட்சத்தில் - விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான சில ஸ்மார்ட்போன்களை தவிர்த்து - 2022 ஆம் ஆண்டில் அறிமுகமான மற்ற எல்லா ஸ்மார்ட்போன்களை அப்படியே கைவிட்டு விடலாம் என்றே தோன்றும்!

அதென்ன அம்சங்கள்? அதனால் நமக்கு என்ன நன்மை? இதோ முழு லிஸ்ட்!

01. பிச்சிக்கிட்டு பறக்கப்போகும் சிபியூ பெர்ஃபார்மென்ஸ்!

01. பிச்சிக்கிட்டு பறக்கப்போகும் சிபியூ பெர்ஃபார்மென்ஸ்!

சமீபத்தில் அறிமுகமான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் ஆனது ஒரு ஆக்டா-கோர் சிப் ஆகும். இரத்தின சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் - இது ஒட்டுமொத்த CPU செயல்திறனை மேம்படுத்தும் புத்தம் புதிய ட்ரை-கிளஸ்டர் ஆர்க்கிடெக்சர் (Tri-cluster architecture) உடன் வருகிறது!

விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், நாம் இங்கே பேசும் Tri-cluster architecture ஆனது 1x கார்டெக்ஸ் எக்ஸ்3 ப்ரைம் கோர் (3.2ஜிகாஹெர்ட்ஸ் க்ளாக்ட்டு ஸ்பீட்), 3x கார்டெக்ஸ் ஏ715 பெர்பார்மென்ஸ் கோர்ஸ் (2.8ஜிகாஹெர்ட்ஸ் க்ளாக்ட்டு ஸ்பீட்) மற்றும் 4எக்ஸ் கார்டெக்ஸ் ஏ510 ஏஃபிசியன்சியை (2ஜிகாஹெர்ட்ஸ் க்ளாக்ட்டு ஸ்பீட்) வழங்குகிறது. இதெல்லாம் சேர்ந்து இதுவரை பார்த்திராத சிபியூ செயல்திறனை உறுதி செய்யும்!

இனிமேல் டபுள் கேம் ஆடலாம்.. சைக்கிள் கேப்ல WhatsApp செட்டிங்ஸ்-க்குள் புகுந்த புதிய Mode!இனிமேல் டபுள் கேம் ஆடலாம்.. சைக்கிள் கேப்ல WhatsApp செட்டிங்ஸ்-க்குள் புகுந்த புதிய Mode!

02. மெர்சலாக்கும் கேமிங் பெர்ஃபார்மென்ஸ்!

02. மெர்சலாக்கும் கேமிங் பெர்ஃபார்மென்ஸ்!

புதிய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் ஆனது - ரே ட்ரேசிங்கை (Ray tracing) ஆதரிக்கும் குவால்காமின் முதல் சிப்செட்டும் கூட!

மேலும் இந்த சிப் ஆனது 'ஆல் நியூ' Adreno GPU உடன் வருகிறது, இது 25% வரை சிறந்த கேமிங் செயல்திறனை வழங்குவதாக கூறுகிறது. உடன் வரும் ரே டிரேசிங்கிற்கான ஆதரவானது, சிறந்த கிராபிக்ஸ் தரத்தையும் வழங்கும்!

03. வேற லெவல் கனெக்டிவிட்டியை வழங்கும் டூயல் 5G + 5G மோட்ஸ்!

03. வேற லெவல் கனெக்டிவிட்டியை வழங்கும் டூயல் 5G + 5G மோட்ஸ்!

வரவிருக்கும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ஸ்மார்ட்போன்களில் நாம் காணக்கூடிய மற்றொரு மிக முக்கியமான முன்னேற்றம் - டூயூல் 5ஜி சிம்களுக்கான ஆதரவு ஆகும்.

அதாவது 2023 ஆம் ஆண்டில் அறிமுகமாகும் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களில் இடம்பெறும் இரண்டு சிம் ஸ்லாட்டுகளுமே 5G-ஐ ஆதரிக்கும்!

ஜஸ்ட் மிஸ்.. பூமிக்கு மேலே விழுந்த ஓட்டை.. உள்ளே புகுந்த விசித்திரமான ஒளி.. நவ.3 இரவு நடந்தது என்ன?ஜஸ்ட் மிஸ்.. பூமிக்கு மேலே விழுந்த ஓட்டை.. உள்ளே புகுந்த விசித்திரமான ஒளி.. நவ.3 இரவு நடந்தது என்ன?

04. ஸ்பீட் மற்றும் ரேன்ஞ்சில் அசத்தப்போகும் லேட்டஸ்ட் வைஃபை!

04. ஸ்பீட் மற்றும் ரேன்ஞ்சில் அசத்தப்போகும் லேட்டஸ்ட் வைஃபை!

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் ஆனது வைஃபை 7 ஸ்டாண்டர்ட்களையும் கொண்டுள்ளது. அதாவது 2023 ஆம் ஆண்டில் வரும் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆனது Wi-Fi 7-க்கான ஆதரவையும் வழங்கும்.

அறியாதோர்களுக்கு Wi-Fi 7 என்பது 6GHz ஸ்பெக்ட்ரத்தை அனுமதிக்கும் லேட்டஸ்ட் வைஃபை ஸ்டாண்டர்ட் ஆகும். இது 320MHz சேனல் பேண்ட்வித்தையும் ஆதரிக்கிறது; இது ஒரு பரந்த சேனலாகும். ஆக உங்கள் ஸ்மார்ட்போனில் நல்ல வைஃபை ஸ்பீட் மற்றும் வைஃபை ரேன்ஞ் கிடைக்கும்!

05. ப்ளூடூத்-தும் கூட டூயல் ஆகும்!

05. ப்ளூடூத்-தும் கூட டூயல் ஆகும்!

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் ஆனது டூயல் ப்ளூடூத் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.

குவால்காம் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த தொழில்நுட்பம் சிறந்த மற்றும் நம்பகமான ப்ளூடூத் கனெக்டிவிட்டியை வழங்கும், மேலும் ப்ளூடூத் டிவைஸ்களுக்கான ரேன்ஞ்சும் சிறப்பாகும்!

உடனே தூக்கி போட்ருங்க! உங்கள் வீட்டில் வைத்து இருக்கவே கூடாத 8 பழைய பொருட்கள்! ஏன்? என்ன காரணம்?உடனே தூக்கி போட்ருங்க! உங்கள் வீட்டில் வைத்து இருக்கவே கூடாத 8 பழைய பொருட்கள்! ஏன்? என்ன காரணம்?

06. மிரட்டப்போகும் கேமராக்கள்!

06. மிரட்டப்போகும் கேமராக்கள்!

ஒவ்வொரு ஆண்டும் அறிமுகமாகும் ஃபிளாக்ஷிப் போன்களில் நாம் காணக்கூடிய கேமராக்கள் தொடர்பான மேம்பாடானது இம்முறை புதிய உச்சத்தை கூட எட்டலாம்!

ஏனென்றால், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் ஆனது, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை - நிகழ்நேரத்தில், தானாகவே மேம்படுத்தும் Cognitive ISP உடன் வருகிறது.

கூடுதலாக, சாம்சங் நிறுவனத்தின் 200MP ISOCELL HP3 சென்சார் போன்ற புதிய கேமரா ஹார்ட்வேர்களுக்கான ஆதரவையும் இந்த சிப்செட் கொண்டுள்ளது.

07. அசத்தப்போகும் ஆடியோ பெர்ஃபார்மென்ஸ்!

07. அசத்தப்போகும் ஆடியோ பெர்ஃபார்மென்ஸ்!

2023 ஆம் ஆண்டில் அறிமுகமாகும் ஹை-எண்ட் ஸ்மார்ட்போன்களில் நாம் காணக்கூடிய மற்றொரு பெரிய முன்னேற்றம் - ஆடியோ பிரிவில் உள்ளது.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்டில் ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் ஹெட் டிராக்கிங்கிற்கான ஆதரவு உள்ளது. இந்த இரண்டுமே பயனர்களின் ஆடியோ கேட்கும் அனுபவத்தை முற்றிலுமாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

அலெர்ட்! மொபைல் போன்களுக்கான புதிய சட்டத்தை அறிவித்த இந்திய அரசு! இப்போ நீங்க என்ன செய்ய வேண்டும்?அலெர்ட்! மொபைல் போன்களுக்கான புதிய சட்டத்தை அறிவித்த இந்திய அரசு! இப்போ நீங்க என்ன செய்ய வேண்டும்?

08. மேம்படுத்தப்பட்ட AI பெர்ஃபார்மென்ஸ்!

08. மேம்படுத்தப்பட்ட AI பெர்ஃபார்மென்ஸ்!

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்டை கொண்ட ஸ்மார்ட்போன்கள் மேம்படுத்தப்பட்ட AI ப்ராசஸிங்-ஐ கொண்டு வரும். ஏனெனில் இந்த சிப், குவால்காமின் நிறுவனத்தின் அதிநவீன AI இன்ஜினை கொண்டுள்ளது.

எனவே AI அடிப்படையிலான மொழிபெயர்ப்பு, AI அடிப்படையிலான கேமரா அம்சங்கள் என எல்லாமே மிகவும் வேகமாக இருக்கும், அதே சமயம் மிகவும் மேம்படுத்தப்பட்டதாகவும் இருக்கும்!

Best Mobiles in India

English summary
After knowing this 8 new android features you would not buy any premium phone until 2023

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X