Home
News

ஆட்டம் வேற மாதிரி இருக்க போகுது.. OnePlus 12R-க்கு முன் OnePlus Ace 3 அறிமுகம்.. என்ன விலை? என்ன அம்சம்?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம், அதன் ஒன்பிளஸ் 12 (OnePlus 12) சாதனத்தை ஒன்பிளஸ் 12R (OnePlus 12R) சாதனத்துடன் ஜனவரி 23ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கு முன்பாக, இந்த சாதனத்தின் நிறம் மற்றும் முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ளது.

சீன ஸ்மார்ட்போன் சந்தையில் (China smartphone market), ஒன்பிளஸ் நிறுவனம் வரும் ஜனவரி 4ம் தேதி ஒன்பிளஸ் ஏஸ் 3 (OnePlus Ace 3) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது. தெரியாதவர்களுக்கு, ஒன்பிளஸ் 12R (OnePlus 12R) ஸ்மார்ட்போன் சாதனத்தை தான் ஒன்பிளஸ் நிறுவனம் சீன சந்தையில் ஒன்பிளஸ் ஏஸ் 3 (OnePlus Ace 3) என்ற பெயருடன் அறிமுகம் செய்கிறது.

ஆட்டம் வேற மாதிரி இருக்க போகுது.. OnePlus 12R-க்கு முன் OnePlus Ace 3

ஆகையால், உலக சந்தையில் ஒன்பிளஸ் 12R (OnePlus 12R) அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாக அதன் சிறப்பம்சங்களை (OnePlus 12R Specifications) நாம் முன்பே அறிந்துகொள்ள முடியும். இப்போது, சீன சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாக, இது என்ன நிறத்தில் (OnePlus 12R colours) வெளிவரும் என்றும், இதில் என்னென்ன அம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம் என்ற தகவலை டிப்ஸ்ட்டர் லீக் (OnePlus 12R Leak) செய்துள்ளார்.

ஒன்பிளஸ் 12R (OnePlus 12R) or ஒன்பிளஸ் ஏஸ் 3 (OnePlus Ace 3): மேக்ஸ் ஜம்பர் என்ற லீக்கர் மூலம் இந்த தகவல் வெளிவந்துள்ளது. இதன்படி, ஒன்பிளஸ் 12R (OnePlus 12R) சாதனம் 8ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி LPDDR5x ரேம் (8GB / 16GB LPDDR5x RAM) உடன் 128ஜிபி (UFS 3.1) மற்றும் 256ஜிபி (UFS 4.0) ஸ்டோரேஜ் உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சாதனம் ஐயன் க்ரேய் (Iron Grey) மற்றும் கூல் ப்ளூ (Cool Blue) நிறங்களில் வெளிவரும். 6.78" இன்ச் ProXDR LTPO 4.0 OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. 1.5K ரெசொலூஷன் உடன் 1Hz முதல் 120Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate) உடன் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பாதுகாப்புடன் வருகிறது. இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (Snapdragon 8 Gen 2) உடன் வருகிறது.

ஆட்டம் வேற மாதிரி இருக்க போகுது.. OnePlus 12R-க்கு முன் OnePlus Ace 3

இது 5500mAh பேட்டரி அம்சத்துடன் 100W சூப்பர்வூக் (SuperVOOC) சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. ஒன்பிளஸ் 12R (OnePlus 12R) சாதனம் 16MP முன்பக்க கேமராவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 50MP (Sony IMX890, OIS) + 8MP (ultra-wide) + 2MP (macro) ட்ரிபிள் கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 (Android 14) உடன் (ColorOS 14) உடன் சீனா சந்தையில் அறிமுகமாகிறது.

இந்திய மற்றும் உலக சந்தையில் ஒன்பிளஸ் 12R சாதனம் ஆக்சிஜன் 14 (OxygenOS 14) இயங்குதளத்துடன் அறிமுகம் செய்யப்படும். இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 12R என்ன விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று பார்க்கையில், இது ரூ.39,999 விலை முதல் துவங்கி ரூ.48,999 விலைக்குள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விற்பனை வழக்கம் போல் அமேசான் (Amazon) தளம் வழியாக பிரத்தியேகமாக நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் ஏஸ் 3 கோல்டு (OnePlus Ace 3 Gold):

மற்றொரு பிரத்தியேகமான லீக் தகவல், ஒன்பிளஸ் ஏஸ் 3 (OnePlus Ace 3) சாதனம் கோல்டு (Gold) நிறத்திலும் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இது எவ்வளவு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால், இந்த லீக் தகவல் நம்பகமான டிப்ஸ்டர் இடமிருந்து வந்துள்ளதால் இதற்கு வாய்ப்பிருக்கும் என்று நம்பப்படுகிறது. ஜனவரி 4ம் தேதி சீனாவில் நடைபெறும் அறிமுகத்திற்கு பின்பு இது உறுதி செய்யப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12R or OnePlus Ace 3 Confirmed Launching On January 4 In China What Colours To Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X