Home
News

எந்த போன் வாங்குறதுனு குழப்பமா இருக்கா? ரூ.12,000 விலைக்குள் இது தான் பெஸ்ட்.. சந்தேகமே இல்லை..

புது ஸ்மார்ட்போன் (Smartphone) வாங்க திட்டமிடுபவர்களுக்கு இப்போது ஏராளமான சாய்ஸ் இருப்பதனால் அதிக குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். உங்களுக்கும் எந்த ஸ்மார்ட்போன் மாடலை தேர்வு செய்வதென்று குழப்பமாக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கானது தான்.

இந்தியாவில் இப்போது பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட்போன் சாதனங்களுக்கு தான் அதிக மவுசு மற்றும் அதிக டிமாண்ட். குறிப்பாக, ரூ.10,000 விலை முதல் ரூ.20,000 விலை புள்ளியில் உள்ள ஸ்மார்ட்போன்களுக்கு தான் இந்தியாவில் அதிக மவுசு. மக்கள் இந்த விலை பிரிவில் உள்ள ஸ்மார்ட்போன்களை தான் அதிகமாக வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

எந்த போன் வாங்குறதுனு குழப்பமா இருக்கா? ரூ.12,000 விலைக்குள் பெஸ்ட்..

ரூ.10,000 விலை முதல் 5ஜி மொபைல்: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இதுவொரு முக்கியமான பிரிவாக இருக்கும் காரணத்தினால், இதில் ஏராளமான சாதனங்கள் இப்போது வாங்க கிடைக்கிறது. இதனால், மக்கள் எந்த சரியான ஸ்மார்ட்போன் மாடலை தேர்வு செய்வதென்ற குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். இப்படி சரியான தேர்வை தேர்வு செய்யமுடியாமல் தவிக்கும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இந்த 5 ஸ்மார்ட்போன் மாடல்களை கருத்தில்கொள்ளலாம்.

இப்போது ரூ.10,000 விலை முதல் ரூ.20,000 விலைக்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் மொபைல் சாதனங்களை பற்றி தான் பார்க்கப்போகிறோம். இந்த பட்டியலில் முன்னணி பிராண்டுகளான ரெட்மி (Redmi), போகோ (POCO), ரியல்மி (Realme), விவோ (Vivo) மற்றும் மோட்டோரோலா (Motorola) பிராண்டில் இருந்து வாங்க கிடைக்கும் போன்களை பட்டியலிட்டுள்ளோம்.

1. ரியல்மி 11x 5ஜி (realme 11x 5G)
2. ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G)
3. விவோ T2x 5ஜி (Vivo T2x 5G)
4. மோட்டோ G34 5ஜி (moto G34 5G)
5. போக்கோ M6 ப்ரோ 5ஜி (POCO M6 Pro 5G)

1. ரியல்மி 11x 5ஜி (realme 11x 5G):
இதுவொரு சிறந்த ஆள்-ரவுண்டர் 5ஜி ஸ்மார்ட்போன் சாதனமாகும். இந்த ரியல்மி 11x 5ஜி ஸ்மார்ட்போன் சாதனம் 64MP கேமரா மற்றும் 33W பாஸ்ட் சார்ஜிங் உடன் ரூ.12,499 என்ற சலுகை விலையில் இப்போது விற்பனையாகிறது. இதன் அசல் விலை ரூ.16,999 ஆகும்.

எந்த போன் வாங்குறதுனு குழப்பமா இருக்கா? ரூ.12,000 விலைக்குள் பெஸ்ட்..

2. ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G):
முதல் முறையாக பிளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது. இதுவொரு லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் மாடலாகும். இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் உடன் 50MP கேமராவை கொண்டுள்ளது. இதன் சலுகை விலை ரூ.11,999 மட்டுமே. இதன் அசல் விலை 33,999 ஆகும்.

3. விவோ T2x 5ஜி (Vivo T2x 5G):
அட்டகாசமான கேமரா அம்சத்தை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ஒரு அற்புதமான சாய்ஸ். இது 50MP கொண்ட சூப்பர் நைட் கேமரா அம்சத்துடன் வருகிறது. இது 5ஜி ஆதரவுடன் வெறும் ரூ. 11, 249 என்ற விலையில் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 17,999 ஆகும்.

4. மோட்டோ G34 5ஜி (moto G34 5G):
சூப்பர் ஸ்பீட் பெர்பார்மென்ஸை பட்ஜெட் விலையில் எதிர்பார்ப்பவர்களுக்கான சாதனம் இது. இந்த ஸ்மார்ட்போன் 4GB ரேம் உடன் 128GB ஸ்டோரேஜ் வருகிறது. இது ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் உடன் வருகிறது. இது ரூ.10,999 என்ற சலுகை விலையில் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.13,999 ஆகும்.

5. போக்கோ M6 ப்ரோ 5ஜி (POCO M6 Pro 5G):
பட்ஜெட் செக்மென்ட்டில் ஹேங்கே ஆகாத போன் என்று இந்த சாதனம் விளம்பரம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் இப்போது வெறும் ரூ.10,499 சலுகை விலையில் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 16,999 ஆகும்.

பட்ஜெட்டில் பெஸ்ட் ஸ்மார்ட்போன் சாதனங்களாக இவை திகழ்கின்றன. உங்கள் தேர்வை இந்த மாடல்களில் இருந்து தேர்வு செய்தால் சிறப்பாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Biggest 5G Mobile Deal Under Rs 10000 To Rs 20000 Buy Now Flipkart Sale Offer Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X