இது பட்ஜெட் பீஸ்ட்.. மோட்டோரோலா அறிமுகம் செய்யும் புது 5G Mobile.. தூள் பறக்கும் அம்சங்கள்.. எந்த மாடல்?
மோட்டோரோலா (Motorola) நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் "அன்லீஷிங் தி பீஸ்ட்" (#UnleashTheBeast) என்ற டேக் உடன் ஒரு புதிய பீஸ்ட்டை களமிறக்கப்போவதாக விளம்பரம் செய்துள்ளது. இந்த சாதனம் மலிவு விலையில் 5ஜி (5G) ஆதரவை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் ஒரு புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் மோட்டோ ஜி64 5ஜி (moto g64 5G) ஆக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஜி54 (moto g54) ஸ்மார்ட்போனின் வாரிசாக இந்த போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி64 5ஜி (moto g64 5G):
இந்த மோட்டோ ஜி64 5ஜி (moto g64 5G) ஸ்மார்ட்போன் சாதனத்தை மோட்டோரோலா நிறுவனம் ரூ.10,000 முதல் ரூ.15,000 என்கிற பட்ஜெட் செக்மென்ட் விலை (price) கீழ் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை உறுதிப்படுத்தும் விதமாக மோட்டோரோலா நிறுவனம் புதிய டீஸர் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதில் ''அல்டிமேட் பெர்ஃபார்மென்ஸ் மற்றும் லிமிட்லெஸ் என்டர்டைன்மெண்ட்'' என்ற வாசகத்துடன் விளம்பரம் செய்துள்ளது.
இதற்கு மத்தியில், நம்பகமான டிப்ஸ்டர் இவான் ப்ளாஸ் (@evleaks aka Evan Blass) மோட்டோ ஜி64 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை குறிப்பிட்டு, ஸ்மார்ட்போனை காண்பிக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார். இந்த லீக் தகவலில் மோட்டோ ஜி64 5ஜி ஸ்மார்ட்போன் சாதனம் 50MP ரியர் கேமராவை (50MP rear camera) OIS ஆதரவுடன் பெரும் என்று கூறப்பட்டுள்ளது.
இதில் மற்றொரு செகண்டரி கேமராவுடன் பின்பக்கத்தில் இந்த போன் டூயல் கேமரா அமைப்பை (dual camera setup) கொண்டிருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மோட்டோ ஜி64 5ஜி ஸ்மார்ட்போன் சாதனம் LCD டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் அம்சத்தை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி64 5ஜி கீக்பெஞ்சு ஸ்கோர் (moto g64 5G Geekbench Scores):
இவான் ப்ளாஸ் வெளியிட்ட புகைப்படத்தில் ப்ளூ மற்றும் க்ரீன் நிறத்தவுடன் மேட் பினிஷ் லுக்கை கொண்டுள்ளது. இந்த வரவிருக்கும் ஸ்மார்ட்போன் 256GB ஸ்டோரேஜ் (storage) உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் கீக்பெஞ்ச் (Geekbench) பட்டியலில் சில முக்கிய விபரங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இந்த ஸ்மார்ட்போன் 1026 சிங்கிள் கோர் ஸ்கொர் (Single core score) மதிப்பெண்களை பெற்றுள்ளது.
அதேபோல், 2458 மல்டி கோர் ஸ்கோரிங் (multi core score) மதிப்பெண்ணை பெற்றுள்ளது. இந்த வரவிருக்கும் புதிய மோட்டோ ஜி64 5ஜி ஸ்மார்ட்போன் சாதனம் பட்ஜெட் செக்மென்ட்டில் சக்தி வாய்ந்த சிப்செட் சாதனமாக பார்க்கப்படும் மீடியாடெக் டைமென்சிட்டி 7025 சிப்செட்டை (MediaTek Dimensity 7025 chipset) கொண்டிருக்கும் என்று லீக் டஹ்கவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவொரு 6என்எம் ஆக்டா கோர் பிராசஸர் (6nm Octa Core processor) என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய மோட்டோ ஜி64 5ஜி ஸ்மார்ட்போன் டிவைஸ் 12GB ரேம் (RAM) உடன் பட்டியலில் காணப்பட்டுள்ளது. இதில் 8GB ரேம் வேரியண்ட் மாடலும் கூட இடம்பெற வாய்ப்புள்ளது என்றும் லீக் தகவல் குறிப்பிட்டுள்ளது. இதன் அறிமுகம் இந்த மாத இறுதிக்குள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








