Redmi அங்குட்டு போ.. Realme இங்குட்டு போ! வெறும் ரூ.14,799 க்கு புது மாடலை இறக்கிவிட்ட OnePlus!

|

ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் பெரும்பாலான ரெட்மி மற்றும் ரியல்மி ஸ்மார்ட்போன்களை அப்படியே ஓரங்கட்டும்படி ஒரு புத்தம் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் (New OnePlus Smartphone) களமிறங்கி உள்ளது!

அதென்ன மாடல்? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

Flipkart வழியாக!

Flipkart வழியாக!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் புத்தம் புதிய ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் நோர்ட் என்20 எஸ்இ (OnePlus Nord N20 SE) மாடல் ஆனது, இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாகவே - அதன் விலை மற்றும் அம்சங்கள் போன்ற விவரங்களுடன் - பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட்டில் (Flipkart) தோன்றியது.

இன்னொரு சுவாரசியமான விடயம் என்னவென்றால், ஒன்பிளஸ் நோர்ட் என்20 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது மற்றொரு இகாமர்ஸ் வலைத்தளமான அமேசானிலும் பட்டியலிடப்பட்டது. ஆனால் வெளியான வேகத்தில் அது அகற்றப்பட்டது.

ஒருவழியாக முடிவுக்கு வந்தது! WhatsApp-ல் Forward செய்யும் போது இருந்த முக்கிய குறை.. இனி இருக்காது!ஒருவழியாக முடிவுக்கு வந்தது! WhatsApp-ல் Forward செய்யும் போது இருந்த முக்கிய குறை.. இனி இருக்காது!

ரூ.14,799 ரெடியா வச்சிக்கோங்க!

ரூ.14,799 ரெடியா வச்சிக்கோங்க!

பிளிப்கார்ட் வழியாக கிடைக்கப்பெற்ற தகவலின்படி, ஒன்பிளஸ் நோர்ட் N20 SE ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ரூ.14,799 ஆகும்.

இதே விலை நிர்ணயம் தான் அமேசான் வலைத்தளத்திலும் காணப்பட்டது. அதாவது இந்த போன் அமேசானிலும் கூட ரூ.14,799 க்கு பட்டியலிடப்பட்டு இருந்தது!

அவங்களே சொல்லுவாங்க.. அமைதியா இருங்க!

அவங்களே சொல்லுவாங்க.. அமைதியா இருங்க!

ஒன்பிளஸ் நோர்ட் என்20 எஸ்இ ஸ்மார்ட்போனின் அறிமுகம் பற்றி கிளம்பும் ஒரு முக்கியமான குழப்பம் என்னவென்றால் - ஒன்பிளஸ் நிறுவனம் இதுவரை எந்தவொரு Nord N சீரிஸ் ஸ்மார்ட்போனையும் இந்தியாவில் அறிமுகம் செய்தது இல்லை.

எனவே OnePlus Nord N20 SE ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் குறித்து ஒன்பிளஸ் நிறுவனமே வாய் திறக்கும் வரையிலாக நாம் அமைதியாக இருப்பது தான் நல்லது!

கல் நெஞ்ச காரங்க.. கருணையே காட்டாத 7 கம்பெனிகள்.. கொத்து கொத்தாக பணி நீக்கம்.. இருப்பதிலேயே யார் மோசம்?கல் நெஞ்ச காரங்க.. கருணையே காட்டாத 7 கம்பெனிகள்.. கொத்து கொத்தாக பணி நீக்கம்.. இருப்பதிலேயே யார் மோசம்?

இது 5ஜி ஸ்மார்ட்போனா?

இது 5ஜி ஸ்மார்ட்போனா?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் நோர்ட் என்20 எஸ்இ மாடல் ஆனது மீடியாடெக் ஹீலியோ G35 ப்ராசஸர் மூலம் இயக்கப்படும் ஒரு மிட் ரேன்ஞ் ஸ்மார்ட்போன் ஆகும்.

அதாவது து OnePlus Nord N20 SE ஆனது ஒரு 5ஜி போன் அல்ல; ஒரு 4ஜி-ஒன்லி ஸ்மார்ட்போன் ஆகும். டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 6.56-இன்ச் அளவிலான HD+ 60Hz டிஸ்பிளேவுடன் வருகிறது.

கேமராக்கள், பேட்டரி எல்லாம் எப்படி?

கேமராக்கள், பேட்டரி எல்லாம் எப்படி?

ஒன்பிளஸ் நோர்ட் என்20 எஸ்இ மாடலில் டூயல் ரியர் கேமராக்கள் இடம்பெறும். அதில் 50எம்பி ப்ரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் இருக்கும். முன்பக்கத்தில், எச்டி வீடியோ ரெக்கார்ட்டிற்கான ஆதரவு கொண்ட ஒரு 8MP செல்பீ கேமரா இருக்கும்.

இது 33W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவை கொண்ட 5,000 mAh பேட்டரியை பேக் செய்யும். இ-காமர்ஸ் வழியாக கிடைத்த பட்டியலின்படி இந்த ஸ்மார்ட்போனின் பாக்ஸில் பாஸ்ட் சார்ஜர் இடம்பெறும்!

இந்த விவரம் தெரிஞ்ச யாருமே 2023 ஆரம்பிக்கிற வரை.. புது Phone வாங்க மாட்டாங்க! என்னது அது?இந்த விவரம் தெரிஞ்ச யாருமே 2023 ஆரம்பிக்கிற வரை.. புது Phone வாங்க மாட்டாங்க! என்னது அது?

வேறு என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது?

வேறு என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது?

- 4ஜிபி வரை ரேம்
- 64ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்
- கூடுதல் ஸ்டோரேஜை வழங்க மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்
- 4G LTE நெட்வொர்க்கிற்கான ஆதரவுடன் டூயல் நானோ சிம் கார்டு ஸ்லாட்ஸ்
- டூயல் பேண்ட் வைஃபை
- ப்ளூடூத் 5 போன்ற முக்கிய அம்சங்களையும் வழங்கும்!

ஒரே ஒரு ஓஎஸ் அப்டேட்!

ஒரே ஒரு ஓஎஸ் அப்டேட்!

OnePlus Nord N20 SE ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 12 OS அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த OxygenOS 12 ஸ்கின்னை கொண்டு வரும்.

இரண்டு முதல் மூன்று முக்கிய ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களை பெறும் OnePlus நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை போல் இல்லாமல், Nord N20SE ஆனது ஒரே ஒரு முக்கியமான ஆண்ட்ராய்டு அப்டேட்டை மட்டுமே பெறலாம்; அது ஆக்சிஜன்ஓஎஸ் 13 ஸ்கின் உடன் வரும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் ஆக இருக்கலாம்!

Best Mobiles in India

English summary
Just Rs 14799 OnePlus New Budget Price Smartphone Nord N20 SE Spoted on Flipkart

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X