டக்குனு விலை குறைந்த OnePlus Nord CE 3 5G.. முன்பைவிட குறைந்த விலை.. புது விலை என்ன? OnePlus 12 வருகை காரணமா?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனை டிசம்பர் 4ம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதனை தொடர்ந்து OnePlus Nord CE 3 5G போனின் விலையை நிறுவனம் அதிரடியாக குறைத்துள்ளது.
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான OnePlus அதன் ஒன்பிளஸ் நார்ட் சிஇ 3 5ஜி (OnePlus Nord CE 3 5G) ஸ்மார்ட்போனின் விலையை அதிரடியாக குறைத்து ரூ.2,000 தள்ளுபடியை வழங்கியுள்ளது. ஒன்பிளஸ் (OnePlus) பிராண்ட் இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் OnePlus Nord CE 3 5G மாடலை அறிமுகப்படுத்தியது.

ஒன்பிளஸ் நார்ட் சிஇ 3 5ஜி மீது விலை குறைப்பு (OnePlus Nord CE 3 5G Price Cut):
பட்ஜெட் செக்மென்ட்டில் லெமன் எல்லோவ் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த போனிற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. இந்த சாதனம் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வேரியண்ட் (8GB RAM/128GB) மாடலாகவும், 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் (12GB RAM/ 256GB) மாடலாகவும் வருகிறது. இதன் விலை முறையே ரூ. 26,999 மற்றும் ரூ. 28,999 ஆக நேற்று வரை இருந்து வந்தது.
ஒன்பிளஸ் நார்ட் சிஇ 3 5ஜி புது விலை என்ன (OnePlus Nord CE 3 5G New Price):
ஒன்பிளஸ் 12 (OnePlus 12) வருகையை தொடர்ந்து, OnePlus Nord CE 3 5G மாடலின் 8GB RAM வேரியண்ட் மாடல் இப்போது ரூ.1,000 விலை குறைப்பை பெற்று, புதிய விலையாக ரூ.24,999 என்ற விலையில் அமேசான் (Amazon) வழியாக வாங்க கிடைக்கிறது. அதே நேரத்தில், 12GB RAM மாடல் ரூ.2,000 விலைக் குறைப்பை பெற்று அமேசான் (Amazon) இல் ரூ.27,999 என்ற விலையில் வருகிறது.
OnePlus Nord CE 3 5G ஆனது 2 வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இது அக்வா சார்ஜ் (Aqua Surge) மற்றும் க்ரேய் ஷிம்மர் (Grey Shimmer) நிறங்களில் வாங்க கிடைக்கிறது. இது இப்போது அமேசான் (Amazon) மற்றும் OnePlus India இணையதளம் வழியாக வாங்க கிடைக்கிறது.
ஒன்பிளஸ் நார்ட் சிஇ 3 5ஜி சிறப்பம்சம் (OnePlus Nord CE 3 5G):
- 6.7' இன்ச் ஃப்ளூயிட் AMOLED டிஸ்ப்ளே
- 120Hz ரெஃப்ரஷ் ரேட் வீதம்
- 2160Hz PWM டிம்மிங் சப்போர்ட்
- ஸ்னாப்டிராகன் 782G சிப்செட்
- 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை ஸ்டோரேஜ்
- நார்ட் 3 போன்ற கூலிங் சிஸ்டம்
- ஆண்ட்ராய்டு 13 (Android 13 அவுட் ஆஃப் தி பாக்ஸ்)
- ஆக்சிஜன்ஓஎஸ் 13.1 (OxygenOS 13.1)
- 50MP Sony IMX890 சென்சார்.
- ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS)
- 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்
- 2MP மேக்ரோ சென்சார்
- 16MP செல்பி கேமரா
- 5,000mAh பேட்டரி
- 80W SUPERVOOC சார்ஜிங்
- டூயல் 5ஜி நானோ சிம்
- 12 5ஜி பேண்டு சப்போர்ட்
- புளூடூத் 5.3
- Wi-Fi 6 மற்றும் NFC
இது இரண்டு கவர்ச்சிகரமான வண்ண விருப்பங்களில் கிடைக்கும்: கிரே ஷிம்மர் மற்றும் அக்வா சர்ஜ்.


Click it and Unblock the Notifications