Home
News

இனி Xiaomi பாடு திண்டாட்டம்.. ரூ.11,000 விலையில் புது 5G போன்.. தரமான அம்சத்துடன் Coolpad Grand View Y60..

கூல்பேட் (Coolpad) நிறுவனம், மலிவு விலையில் சிறந்த அம்சங்களை பேக் செய்து தொடர்ந்து பல புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் நிறுவனம் இப்போது விற்பனைக்கு கொண்டுவந்துள்ள சாதனம் தான் Coolpad Grand View Y60 ஸ்மார்ட்போன்.

உண்மையை சொல்ல போனால், குறைந்த விலையில் டீசெண்டான அம்சங்களை வழங்கும் சியோமி (Xiaomi) பிரண்டை விட, கூல்பேட் (Coolpad) நிறுவனம் கூடுதல் அம்சங்களை வழங்குகிறது. மலிவு விலையில் அற்புதமான அம்சங்களை பேக் செய்து, பட்ஜெட் செக்மென்ட் (Budget segment mobiles) கீழ் மிரட்டலான ஸ்மார்ட்போன்களை நிறுவனம் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.

இனி Xiaomi பாடு திண்டாட்டம்.. ரூ.11,000 விலையில் புது 5G போன்..

அந்த வரிசையில், மக்களை சட்டென ஈர்த்த புது மாடல் தான், இந்த கூல்பேட் கிராண்ட் வியூ Y60 ஸ்மார்ட்போன் (Coolpad Grand View Y60 smartphone) மாடலாகும். இந்த புதிய கூல்பேட் கிராண்ட் வியூ Y60 ஸ்மார்ட்போன் சாதனம் யுனிஸாக் T760 சிப்செட் (Unisoc T760 SoC) உடன் வருகிறது. இது 5000 mAh பேட்டரி உடன் வருகிறது.

கூல்பேட் கிராண்ட் வியூ Y60 ஸ்மார்ட்போன் (Coolpad Grand View Y60):

இந்த கூல்பேட் கிராண்ட் வியூ Y60 (Coolpad Grand View Y60) ஸ்மார்ட்போன் சாதனத்தின் ஸ்டாண்டர்ட் பதிப்பு 4GB ரேம் உடன் 128GB ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இது 6.74" இன்ச் அளவு கொண்ட 1600 x 720 பிக்சல் (Pixel) தரம் உடைய எச்டி பிளஸ் (HD+) டிஸ்பிளேவை (Display) கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே 60Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh rate) உடன் வருகிறது.

இது 400 நீட்ஸ் மேக்சிமம் பிரைட்னஸ் (400 nits maximum brightness) ஆதரவை கொண்டுள்ளது. இது 18W பாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது. இதன் கேமரா அம்சத்தை பற்றி பேசுகையில், இந்த கூல்பேட் கிராண்ட் வியூ Y60 (Coolpad Grand View Y60) ஸ்மார்ட்போன் 13MP ரியர் சென்சார் மற்றும் 0.08MP ஆகுலூஷன் பிரொம்ப்ட் (occlusion prompt) சென்சார் உடன் கூடிய டூயல் கேமரா (Dual camera) அம்சத்துடன் வருகிறது.

இனி Xiaomi பாடு திண்டாட்டம்.. ரூ.11,000 விலையில் புது 5G போன்..

முன்பக்கத்தில், இந்த ஸ்மார்ட்போன் 5MP கொண்ட செல்பி கேமராவை கொண்டுள்ளது. இது EIS ஆதரவுடன் 21 விதமான AI திறன் கொண்ட கேமரா அம்சத்தை கொண்டுள்ளது. இது கேமரா தரத்தை அடுத்த நிலைக்கு அடுத்து செல்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் கூல்ஓஸ் 3.0 (COOLOS 3.0) உடன் இயங்குகிறது. இதுவொரு 5ஜி மொபைல் (5G Mobile) சாதனம் என்பது கவனிக்கத்தக்கது.

கூல்பேட் கிராண்ட் வியூ Y60 விலை (Coolpad Grand View Y60 Price):

இதன் விலை பற்றி பேசுகியில், இந்த கூல்பேட் கிராண்ட் வியூ Y60 (Coolpad Grand View Y60) ஸ்மார்ட்போன் சாதனம் மூன்று வேரியண்ட் மாடல்களாக விற்பனைக்கு வந்துள்ளது. இவை, 4GB ரேம் +128GB ஸ்டோரேஜ், 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் மற்றும் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் போன்ற விருப்பத்துடன் வருகிறது. இது அரோரா ப்ளூ (Aurora Blue) மற்றும் கார்பன் பிளாக் (Carbon Black) நிறங்களில் வருகிறது.

கூல்பேட் கிராண்ட் வியூ Y60 (Coolpad Grand View Y60) ஸ்மார்ட்போன் மாடலின் 4ஜிபி ரேம் வேரியண்ட் விலை இந்திய மதிப்பில் ரூ.11,499 ஆகும். அதே சமயம், இதன் 6ஜிபி மாடலின் விலை ரூ.12,800 ஆகும். இதன் ஹை-வேரியண்ட் மாடலான 8 ஜிபி ரேம் விலை ரூ.15,000 விலைக்குள் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் இப்போது சீன சந்தையில் விற்பனையில் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Coolpad Grand View Y60 Budget 5G Mobile Goes On Sale At Rs 11000 In China Market
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X