இதுக்குமேல என்ன வேணும்? ரூ.25,000 விலைக்குள்.. டாப் 5 பெஸ்ட் 5G ஸ்மார்ட்போன் இதான்.. டவுட்டே இல்லை..
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மிகவும் பிரபலமான பட்ஜெட் (budget) செக்மென்ட்டாக திகழ்வது ரூ.25,000 விலைக்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பிரிவு தான். இந்த செக்மென்ட்டில் இப்போது வாங்க கிடைக்கும் பெஸ்ட் டாப் 5 ஸ்மார்ட்போன்களை (5G smartphone) பற்றிய பதிவு தான் இது.
ரூ.25,000 விலைக்குள் வாங்க கிடைக்கும் டாப் 5 பெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் பட்டியலில் (Top 5 Best 5G Smartphone List) ஐந்து முன்னணி பிராண்டுகளின் மொபைல் சாதனங்களை அதன் தரம், சக்தி, பெர்பார்மென்ஸ் மற்றும் ஆயுள் ஆகியவற்றின் அடிப்படையில் பட்டியலிட்டுள்ளோம். புதிதாக பட்ஜெட் விலைக்குள் பெஸ்டான ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டுள்ள பயனர்கள் இந்த பதிவில் உள்ள மாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். சரி வாருங்கள் லிஸ்டிற்கு செல்லலாம்.

1. ஒன்பிளஸ் நார்ட் CE 4 5ஜி (OnePlus Nord CE 4 5G):
இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் நேற்று தான் ரூ.24,999 என்ற விலையுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இது வரும் ஏப்ரல் 4ம் தேதி முதல் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது. இதில் 6.7" இன்ச் கொண்ட 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடைய AMOLED டிஸ்பிளே, Snapdragon 7 Gen 3 சிப்செட், 50MP + 8MP டூயல் கேமரா, 16MP செல்பி கேமரா, 100W பாஸ்ட் சார்ஜிங் உடன் 5000mAh பேட்டரி ஆகியவற்றை கொண்டுள்ளது.
2. நத்திங் போன் 2a - Nothing Phone (2a):
இந்த ஸ்மார்ட்போன் சாதனமும் இந்தியாவில் ரூ.23, 999 விலையில் வாங்க கிடைக்கிறது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடைய 6.7" இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது MediaTek Dimensity 7200 Pro 5G சிப்செட் உடன் 20GB RAM + 128GB மெமரி, 50MP + 50MP AI கேமரா, 45W பாஸ்ட் சார்ஜிங் உடன் 5000mAh பேட்டரி ஆகியவற்றை கொண்டுள்ளது.

3. சாம்சங் கேலக்ஸி F54 5ஜி (Samsung Galaxy F54 5G):
இந்த போன் இப்போது அமேசான் தளத்தில் வெறும் ரூ.23,238 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இது 6.7" இன்ச் super AMOLED டிஸ்பிளேவை 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வழங்குகிறது. இதில் 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ், 2TB மைக்ரோ SD மெமரி, Exynos 1380 சிப்செட், 108MP + 8MP + 2MP ட்ரிபிள் ரியர் கேமரா, 32MP முன்கேமரா, 25W உடன் 6000mAh பேட்டரியை வழங்குகிறது.
4. ஐகியூஓஓ Z7 ப்ரோ 5ஜி (IQOO Z7 Pro 5G):
இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.23,878 என்ற சலுகை விலையில் கிடைக்கிறது. இதில் 120Hz கொண்ட 6.7" இன்ச் AMOLED டிஸ்பிளே, MediaTek Dimensity 7200 5G சிப்செட், 8GB RAM + 8GB விர்ச்சுவல் ரேம், 128GB மெமரி, 64MP அரோரா லைட் OIS டூயல் கேமரா, 66W பாஸ்ட் சார்ஜிங் உடன் 4600mAh பேட்டரி போன்ற அம்சத்தை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
5. ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி (Redmi Note 13 Pro 5G):
இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் சலுகையுடன் ரூ.23,895 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இதில் 120Hz கொண்ட 6.7" இன்ச் Adaptive 1.5K AMOLED டிஸ்பிளே, Snapdragon 7s Gen 2 சிப்செட், 8GB ரேம் + 128GB மெமரி, 200MP (OIS) + 8MP + 2MP ட்ரிபிள் கேமரா, 16MP முன்பக்க கேமரா, 67W டர்போ பாஸ்ட் சார்ஜிங் உடன் 5100mAh பேட்டரி அம்சங்களை பேக் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








