பாரபட்சம் பார்க்காத ஆப்பிள்.. இதை செய்தால் iPhone 14 சீரிஸ் உங்கள் கையில்!

|

பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபோன் 14 சீரிஸ் இல் iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro, iPhone 14 Pro Max என நான்கு மாடல்களை ஆப்பிள் அறிமுகப்படுத்தியது. சாட்டிலைட் இணைப்புடன் இந்த ஐபோன் மாடல்கள் வெளியானது பலரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இருந்தது.

ஐபோன் 14 சீரிஸ் புக்கிங்

ஐபோன் 14 சீரிஸ் புக்கிங்

iPhone 14ஐ வாங்குவதற்கு பலரும் காத்திருப்பதை அறிய முடிகிறது. ஐபோன் 14 தொடரை எப்போது முன்பதிவு செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

புதிய ஐபோன்களின் முன்கூட்டிய ஆர்டர்கள் மற்றும் விற்பனை அமெரிக்காவில் தொடங்கும் அதே நேரத்தில் இந்தியாவிலும் தொடங்குகிறது. ஆப்பிள் பாரபட்சம் பார்க்காமல் இந்திய வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

இந்தியாவில் ஐபோன் 14 மாடலை முன்கூட்டியே ஆர்டர் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். புக்கிங் செய்யும் பட்சத்தில் ஐபோன் 14 சீரிஸ் ஷிப்பிங் தொடங்கிய உடனே உங்கள் கையில் கிடைக்கும்.

முன்பதிவு தொடங்கும் தேதி

முன்பதிவு தொடங்கும் தேதி

iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max ஆகியவை apple.com/in/store, க்ரோமா, பிளிப்கார்ட், அமேசான், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் விஜய் உள்ளிட்ட விற்பனை தளங்களில் செப்டம்பர் 9 ஆம் தேதி (இன்று) மாலை 5.30 மணி முதல் முன்கூட்டியே ஆர்டர் செய்யலாம்.

ஆஃப்லைன் விற்பனை

ஆஃப்லைன் விற்பனையை பொறுத்தவரை, ஆப்பிள் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் இருந்து தங்களுக்கு விருப்பமான ஐபோன் 14 மாடல்களை முன்பதிவு செய்யலாம்.

முன்கூட்டியே ஆர்டர் செய்தால் ஷிப்பிங் தொடங்கிய உடன் நீங்கள் புக் செய்த ஐபோன் மாடல் உடனடியாக கிடைக்கும்.

iPhone 14, iPhone 14 Plus முன்பதிவு விவரம்

iPhone 14, iPhone 14 Plus முன்பதிவு விவரம்

iPhone 14 செப்டம்பர் 16 முதலும் iPhone 14 Plus ஆகிய இரண்டு மாடல்களின் முன்பதிவுகளும் செப்டம்பர் 9 முதல் தொடங்கும். அதேபோல் ஷிப்பிங் தேதிகள் என்பது மாறுபட்ட வகையில் இருக்கிறது. iPhone 14 செப்டம்பர் 16 முதலும் iPhone 14 Plus அக்டோபர் 7 முதலும் விற்பனைக்கு கிடைக்கும்.

iPhone 14 Pro மற்றும் 14 Pro Max முன்பதிவு விவரம்

iPhone 14 Pro மற்றும் 14 Pro Max முன்பதிவு விவரம்

iPhone 14 Pro மற்றும் 14 Pro Max ஆகிய இரண்டும் செப்டம்பர் 9 ஆம் தேதி மாலை 5:30 முதல் முன்பதிவுக்கு கிடைக்கும். செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் விற்பனை தொடங்கும்.

புதிய ஐபோன் மாடல்களுக்கான சலுகைகள்

புதிய ஐபோன் மாடல்களுக்கான சலுகைகள்

ஆப்பிள் புதிய ஐபோன் மாடல்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்த எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இருப்பினும் பழைய ஐபோன் மாடல்களை எக்ஸ்சேஞ்ச் செய்யும் பட்சத்தில் பரிமாற்ற சலுகை வழங்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல் குறிப்பிட்ட வங்கிகளின் மூலம் செய்யப்படும் பரித்தனைகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

iPhone 14 Pro, 14 Pro Max விலை விவரங்கள்

iPhone 14 Pro, 14 Pro Max விலை விவரங்கள்

ஐபோன் 14 விலையானது ரூ.79,900 முதல் தொடங்குகிறது. அதேபோல் ஐபோன் 14 பிளஸ் ஆனது ரூ.89,900 முதல் தொடங்குகிறது.

Apple iPhone 14 Pro விலை குறித்து பார்க்கையில், இதன் 128 ஜிபி வேரியண்ட் மாடல் ரூ.1,29,900 எனவும், 256 ஜிபி வேரியண்ட் மாடல் ரூ.1,39,900 எனவும் 512 ஜிபி வேரியண்ட் மாடல் ரூ.1,59,900 எனவும் 1 டிபி வேரியண்ட் மாடல் ரூ.1,79,900 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

iPhone 14 Pro Max விலை குறித்து பார்க்கையில் 128 ஜிபி வேரியண்ட் மாடல் ரூ.1,39,900 எனவும் 256 ஜிபி வேரியண்ட் மாடல் ரூ.1,49,900 எனவும்
512 ஜிபி வேரியண்ட் மாடல் ரூ.1,69,900 எனவும் 1 டிபி வேரியண்ட் மாடல் ரூ.1,89,900 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் 14 சீரிஸ் இப்படிதான் இருக்கும்

ஐபோன் 14 சீரிஸ் இப்படிதான் இருக்கும்

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் உடன் ப்ரீமியம் ரக மாடல்களாக ஐபோன் 14 ப்ரோ மற்றும் 14 ப்ரோ மேக்ஸை அறிமுகம் செய்தது.

ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்கள் முந்தைய மாடலில் இருக்கும் அதே ஏ15 சிப்செட் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

ஆனால் ஐபோன் 14 ப்ரோ மற்றும் 14 ப்ரோ மேக்ஸ் இன் அனைத்து அம்சங்களும் புதியதாகவும் மேம்பட்டதாகவும் இருக்கிறது.

ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ளஸ்ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ளஸ்

ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்

Best Mobiles in India

English summary
How to Pre-Order iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro, iPhone 14 Pro Max in India?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X