சாட்டிலைட் இணைப்புடன் வெளியான Apple iPhone 14, iPhone 14 Plus: விலை இதோ!
பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆப்பிள் 2022 நிகழ்வு நடைபெற்றது. எதிர்பார்த்தது போல் ஐபோன் 14 சீரிஸ், வாட்ச் சீரிஸ் 8, ஏர்பாட்ஸ் ப்ரோ 2 உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வு ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகார டிக் குக் உரையுடன் தொடங்கியது.
இந்த நிகழ்வில் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களை ஆப்பிள் அறிமுகம் செய்தது. ஆப்பிள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த மாடல்கள் பூர்த்தி செய்ததா என்று பார்க்கலாம்.

ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ்
ஆப்பிள் இந்த நிகழ்வில் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. இந்த ஐபோன் மாடல்கள் பல்வேறு புதிய அம்சங்களுடன் வழக்கமான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது.

ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ளஸ் விலை
ஆப்பிள் இந்த நிகழ்வில் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ளஸ் சாதனங்களை அறிமுகம் செய்தது.
இந்த ஐபோன் மாடல்கள் பல்வேறு புதிய அம்சங்களோடு வழக்கமான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது.
ஐபோன் 14 விலையானது ரூ.79,900 முதல் தொடங்குகிறது. அதேபோல் ஐபோன் 14 பிளஸ் ஆனது ரூ.89,900 முதல் தொடங்குகிறது.
புதிய மாடல் ஐபோன்கள் apple.com/in/store மற்றும் Apple அங்கீகரிக்கப்பட்ட விற்பனை தளங்களில் முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாடல்களின் முன்பதிவுகளும் செப்டம்பர் 9 முதல் தொடங்கும். அதேபோல் iPhone 14 செப்டம்பர் 16 முதலும் iPhone 14 Plus அக்டோபர் 7 முதலும் விற்பனைக்கு கிடைக்கும்.

A15 சிப்செட் ஆதரவு
ஐபோன் 14 சீரிஸ் இல் மினி மாடல் இல்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று. Apple iPhone 14, iPhone 14 Plus ஆகிய இரண்டு மாடல்களிலும் A15 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.
இதே A15 சிப்செட் தான் ஐபோன் 13 தொடரையும் இயக்குகிறது. வடிவமைப்பு அடிப்படையிலும் அப்படியே ஐபோன் 13 போன்றே இந்த புதிய மாடல்கள் இருக்கிறது.

ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ் அம்சங்கள்
ஐபோன் 14 ஆனது 6.1 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. ஐபோன் 14 ப்ளஸ் இல் 6.7 இன்ச் பொருத்தப்பட்டுள்ளது.
ஐபோன் 14 சீரிஸ் இல் இதுவரை கண்டிராத சிறந்த பேட்டரி ஆதரவை ப்ளஸ் மாடல் கொண்டிருக்கிறது.
ப்ளஸ் மாடலில் 26 மணிநேரம் வரை வீடியோவை நீங்கள் பார்க்கலாம், ஐபோன் 14 இல் 19 மணிநேரம் வரை வீடியோ பார்க்கலாம்.
சிறந்த பேட்டரி ஆயுள் வழங்குவதற்கு என இந்த மாடல்களில் ஆப்பிள் கூலிங் சிஸ்டத்தை மேம்படுத்தி இருக்கிறது.

மேம்படுத்தப்பட்ட கேமரா தொகுதி
iPhone 14 மற்றும் iPhone 14 Plus ஆகிய மாடல்களில் பழைய ஏ15 பயோனிக் சிப்செட் பொருத்தப்பட்டிருந்தாலும், கேமரா தொகுதியை மேம்படுத்தி ஆப்பிள் வழங்கி இருக்கிறது.
மேலும் விபத்து கண்டறிதல் போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் புதிய ஐபோன் மாடல்கள் கொண்டிருக்கிறது.
ஐபோன் 14 மற்றும் 14 பிளஸ் இன் அமெரிக்க மாடல்களில் சிம் ட்ரே இருக்காது என கூறப்படுகிறது. இ-சிம்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
எதிர்பார்த்து போல் இந்த புதிய மாடல்களில் செயற்கைக்கோள் இணைப்பு இருக்கிறது. இதன்மூலம் அவசரகால SOS ஐக் ஆப்பிள் கொண்டுவருகிறது.

செயற்கைக்கோள் இணைப்பு ஆதரவு
செயற்கைக்கோள் அம்சத்திற்கு என தனிப்பயன் வன்பொருள் மற்றும் பெஸ்போக் மென்பொருளை ஆப்பிள் வடிவமைத்துள்ளது. இதன்மூலம் பெரிய ஆண்டெனாக்கள் எதுவும் இல்லாமல், செயற்கைக்கோளை அணுக முடியும். இது இருவழி தகவல்தொடர்புகளை ஆதரிக்கிறது. சிக்னல் கிடைக்காத நேரங்களில் இது பேருதவியாக இருக்கும்.

ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ் கேமராக்கள்
கேமரா அம்சங்களை பொறுத்தவரை இரண்டு மாடல்களிலும் f/1.5 துளையுடன் கூடிய புதிய 12MP பிரதான கேமரா மற்றும் அல்ட்ராவைடு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
குறைந்த ஒளி பதிவு மற்றும் ஃபாஸ்ட் நைட்மோட் செயல்திறனில் முந்தைய மாடல்களை விட 49% முன்னேற்றம் இருக்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.
செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என புதிய ஐபோன்களின் முன்புறத்தில் 12 எம்பி ட்ரூடெப்த் சென்சார் பொருத்தப்பட்டிருக்கிறது.

செப்டம்பர் 9 முதல் முன்பதிவு
செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு புதிய முன்பக்க 12 மெகாபிக்சல் TrueDepth கேமராவும் உள்ளது. செப்டம்பர் 9 முதல் iPhone 14 மற்றும் iPhone 14 Plus மாடல்களை முன்பதிவு செய்யலாம்.


Click it and Unblock the Notifications