திரைப்படமே டைரக்ட் செய்யலாம்: Apple iPhone 14 Pro, 14 Pro Max அறிமுகம்.. எல்லாமே உச்சம்!

|

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் உடன் ப்ரீமியம் ரக மாடல்களாக ஐபோன் 14 ப்ரோ மற்றும் 14 ப்ரோ மேக்ஸை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக கணித்தது போல் ஆப்பிள் ஐபோன் 14 தொடரில் மினி பதிப்பு இடம் பெறவில்லை.

ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்கள் முந்தைய மாடலில் இருக்கும் அதே ஏ15 சிப்செட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஆனால் Apple iPhone 14 Pro, iPhone 14 Pro Max இன் அனைத்து அம்சங்களும் புதியதாகவும் மேம்பட்டதாகவும் இருக்கிறது.

ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்

ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்

ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்கள் ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் இன் வாரிசாக கருதப்பட்டாலும், வடிவமைப்பைத் தவிர பல முக்கிய அம்சங்கள் வேறுபட்டதாக இருக்கிறது.

14 ப்ரோ மாடல்களில் புதிய பயோனிக் சிப்செட், புதிய கேமரா அம்சங்கள், அதிக பேட்டரி ஆயுள் என பல மேம்பாடுகள் உள்ளது.

Apple iPhone 14 Pro விலை

Apple iPhone 14 Pro விலை

Apple iPhone 14 Pro விலை குறித்து பார்க்கையில், இதன் விலை ரூ.1,29,900 முதல் தொடங்குகிறது.

128 ஜிபி வேரியண்ட்- ரூ.1,29,900

256 ஜிபி வேரியண்ட்- ரூ.1,39,900

512 ஜிபி வேரியண்ட்- ரூ.1,59,900

1 டிபி வேரியண்ட்- ரூ.1,79,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்பேஸ் பிளாக், சில்வர், கோல்ட் மற்றும் டீப் பர்பில் என்ற வண்ண விருப்பங்களில் இந்த மாடல் கிடைக்கிறது.

iPhone Pro Max விலை

iPhone Pro Max விலை

iPhone 14 Pro Max விலை குறித்து பார்க்கையில், இதன் அடிப்படை மாறுபாடு விலை ரூ.1,39,900 முதல் தொடங்குகிறது.

128 ஜிபி வேரியண்ட்- ரூ.1,39,900

256 ஜிபி வேரியண்ட்- ரூ.1,49,900

512 ஜிபி வேரியண்ட்- ரூ.1,69,900

1 டிபி வேரியண்ட்- ரூ.1,89,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்பேஸ் பிளாக், சில்வர், கோல்ட் மற்றும் டீப் பர்பில் என்ற வண்ண விருப்பங்களில் இந்த மாடல் வெளியாகி உள்ளது.

iPhone 14 Pro மற்றும் 14 Pro Max கிடைக்கும் தன்மை

iPhone 14 Pro மற்றும் 14 Pro Max கிடைக்கும் தன்மை

iPhone 14 Pro மற்றும் 14 Pro Max ஆகிய இரண்டும் செப்டம்பர் 9 ஆம் தேதி மாலை 5:30 முதல் முன்பதிவுக்கு கிடைக்கும். செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் இந்த மாடல்கள் வாங்குவதற்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apple iPhone 14 Pro சிறப்பம்சங்கள்

Apple iPhone 14 Pro சிறப்பம்சங்கள்

Apple iPhone 14 Pro சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 6.1-இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

இந்த டிஸ்ப்ளேயில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் மற்றும் 2000 நிட்ஸ் உச்ச பிரகாச நிலை ஆதரவு உள்ளது. இதில் உள்ள HDR அம்சமானது பரந்த வண்ண வரம்பு ஆதரவை வழங்குகிறது.

இந்த ஐபோன் மாடலில் புதிய ரக சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. அதாவது ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ ஆனது 4nm-அடிப்படையிலான A16 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது. கேமிங் மற்றும் கிராபிக்ஸ் செயல்திறனை இந்த சிப்செட் மேம்படுத்தி வழங்குகிறது.

Apple iPhone 14 Pro: கேமரா அம்சங்கள்

Apple iPhone 14 Pro: கேமரா அம்சங்கள்

Apple iPhone 14 Pro இன் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், 48MP முதன்மை குவாட்-பிக்சல் சென்சார், 12MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 12MP அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பை உள்ளது.

போர்ட்ரெய்ட், நைட் மோட், நைட் மோட் போர்ட்ரெய்ட், ஸ்டெபிலைசேஷன் டூயல் ஓஐஎஸ், ஸ்மார்ட் எச்டிஆர், மேக்ரோ மோட், ஆப்பிள் ப்ரோரா உள்ளிட்ட பல்வேறு கேமரா ஆதரவுகள் இதில் இருக்கிறது.

செல்பி கேமரா இருப்பதே தெரியாது

செல்பி கேமரா இருப்பதே தெரியாது

வீடியோ ஆதரவைப் பொறுத்தவரை, 4K தரத்தில் வீடியோவை இந்த ஐபோன் மாடல் மூலம் பதிவு செய்யலாம். இதன் அவுட் மிக அருமையாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

செல்பி மற்றும் வீடியோ கால் ஆதரவுக்கு என இந்த ஐபோன் மாடலின் முன்புறத்தில் 12MP ஸ்னாப்பர் பொருத்தப்பட்டுள்ளது.

ஏதேனும் ஒரு நோட்டிபிகேஷன் பெறும் பட்சத்தில் இந்த ஐபோனில் செல்பி கேமரா பொருத்தப்பட்டிருப்பதே தெரியாது. காரணம் செல்பி கேமரா நாட்ச் உடன் கவர் ஆகியே டிஸ்ப்ளா காட்சிகள் இருக்கிறது.

ஐபோன் 14 ப்ரோ: பேட்டரி விவரம்

ஐபோன் 14 ப்ரோ: பேட்டரி விவரம்

வழக்கம் போல் ஆப்பிள் புதிய மாடலின் பேட்டரி திறனை வெளிப்படுத்தவில்லை. ஆனால் ஒரு முறை சார்ஜ் செய்தால் 1 நாள் முழுவதும் பேட்டரி ஆயுள் நீடிக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

வயர் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் மேக்சேஃப் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் இதில் உள்ளது.

புதிய iPhone 14 Pro ஆனது iOS 16 மூலம் இயங்குகிறது. ரேம் மற்றும் பேட்டரி குறித்த விவரங்களை நிறுவனம் வெளியிடவில்லை.

iPhone 14 Pro Max அம்சங்கள்

iPhone 14 Pro Max அம்சங்கள்

iPhone 14 Pro Max அம்சங்கள் குறித்து பார்க்கலாம். ப்ரோ மாடலுடன் ஒப்பிடும் போது காட்சி அடிப்படையில் மட்டுமே ப்ரோ மேக்ஸ் இல் மாற்றம் இருக்கிறது. பிற அனைத்து அம்சங்களும் ஒரே மாதிரி தான்.

6.7 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. 120Hz வரையிலான அடாப்டிவ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் ProMotion ஆதரவு இதில் இருக்கிறது.

ப்ரோ மாடலை விட ப்ரோ மேக்ஸ் எடை சற்று அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களையும் செப்டம்பர் 9 (இன்று) மாலை முதல் முன்பதிவு செய்யலாம்.

Best Mobiles in India

English summary
Apple iPhone 14 Pro, iPhone 14 Pro Max Launched with A16 Bionic, 48MP Camera: Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X