பாதிக்கு பாதி விலையில் பிராண்டட் AC-க்கள்.. முழுசா 52% டிஸ்கவுண்ட்.. பட்டிதொட்டி எங்கும் ஆர்டர் பறக்குது!
ஏசி (AC) இல்லாமல் அடுத்த சில மாதங்களை சமாளிக்கவே முடியாது என்கிற முடிவுக்கு வந்துவிட்டீர்களா? ஆம் என்றால்.. உங்களுக்கு ஏப்ரல் 23 வரை தான் நேரம் இருக்கிறது. ஏனென்றால் அந்த தேதியோடு தான் பிளிப்கார்ட்டின் சூப்பர் கூலிங் டேஸ் விற்பனை முடிவடைகிறது.
ஏப்ரல் 26-க்கு பின்னரும் கூட உங்களால் ஏசி வாங்க முடியும். ஆனால் 52% வரையிலான டிஸ்கவுண்ட்டில் வாங்க முடியுமா என்றால்.. அது கேள்விக்குறி தான். எனவே பிளிப்கார்ட் வலைத்தளத்தில் நடக்கும் சூப்பர் கூலிங் டேஸ் 2024 (Flipkart Super Cooling Days Sale 2024) என்கிற சிறப்பு விற்பனையை சரியான பயன்படுத்திக்கொள்வதே புத்திசாலித்தனம். என்னென்ன ஏசி மாடல்களுக்கு எவ்வளவு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது? இதோ விவரங்கள்:

1. எல்ஜி ஏஐ கன்வெர்ட்டபிள் 6-இன்-1 கூலிங் 2024 மாடல் (LG AI Convertible 6-in-1 Cooling 2024 Model): 1.5 டன் மற்றும் 3 ஸ்டார் ரேட்டிங், ஸ்பிலிட் டூயல் இன்வெர்ட்டர் உடன் வரும் இந்த மாடல், பிளிப்கார்ட் கூலிங் டேஸ் விற்பனையின் போது 52% தள்ளுபடியை பெற்று ரூ.78,990 க்கு பதிலாக ரூ.37,490 க்கு வாங்க கிடைக்கிறது.
2. கோத்ரெஜ் 5-இன்-1 கன்வெர்ட்டபிள் கூலிங் 2023 மாடல் (Godrej 5-In-1 Convertible Cooling 2023 Model): 1.5 டன் மற்றும் 3 ஸ்டார் ரேட்டிங், காப்பர் கன்டென்சர், ஹெவி ட்யூட்டி கூலிங் உடன் வரும் இந்த மாடல், பிளிப்கார்ட் கூலிங் டேஸ் விற்பனையின் போது 31% தள்ளுபடியை பெற்று ரூ.45,400 க்கு பதிலாக ரூ.30,990 க்கு வாங்க கிடைக்கிறது.

3. வோல்டாஸ் மற்றும் ல்யோட் நிறுவனங்களின் ஸ்பிலிட் இன்வெர்ட்டர் ஏசி மாடல்கள் (Voltas and Lloyd Split Inverter AC models): 1.5 டன் கெப்பாசிட்டி மற்றும் 3 ஸ்டார் ரேட்டிங் உடன் வோல்டாஸ் மற்றும் ல்யோட் நிறுவனங்களின் ஸ்பிலிட் இன்வெர்ட்டர் ஏசி மாடல்கள் ஆனது முறையே ரூ.31,990 க்கும் மற்றும் ரூ.32,990 க்கும் வாங்க கிடைக்கிறது.
அதாவது பிளிப்கார்ட் கூலிங் டேஸ் விற்பனையின் போது, வோல்டாஸ் நிறுவனத்தின் ஸ்பிலிட் இன்வெர்ட்டர் ஏசி மாடலானது 49% தள்ளுபடியையும் (அசல் விலை ரூ.62,990) மற்றும் அதாவது ல்யோட் நிறுவனத்தின் ஸ்பிலிட் இன்வெர்ட்டர் ஏசி மாடலானது 44% தள்ளுபடியையும் (அசல் விலை ரூ.58,990) பெற்றுள்ளது.

4. பானாசோனிக் 7-இன்-1 கன்வெர்ட்டபிள் ஏசி (Panasonic 7 in 1 Convertible AC): ட்ரூ ஏஐ மோட், 1.5 டன், 5 ஸ்டார் ரேட்டிங் உடன் வரும் இந்த ஸ்பிலிட் இன்வெர்ட்டர் ஏசி மாடலானது, பிளிப்கார்ட் கூலிங் டேஸ் விற்பனையின் போது 29% தள்ளுபடியை பெற்று ரூ.63,400 க்கு பதிலாக ரூ.44,990 க்கு வாங்க கிடைக்கிறது.
5. எல்ஜி ஏஐ கன்வெர்ட்டபிள் 6-இன்-1 கூலிங் 2024 மாடல்: இது முதலில் நாம் பார்த்த அதே மாடல் தான் ஆனால் இது 5 ஸ்டார் ரேட்டிங் உடன் வருகிறது. மற்றபடி இதுவும் 1.5 டன், ஸ்பிலிட் டூயல் இன்வெர்ட்டர் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இது பிளிப்கார்ட் கூலிங் டேஸ் விற்பனையின் போது 45% தள்ளுபடியை பெற்று ரூ.85,990 க்கு பதிலாக ரூ.46,590 க்கு வாங்க கிடைக்கிறது.
6. ப்ளூ ஸ்டார் ஸ்பிலிட் இன்வெர்ட்டர் ஏசி (Blue Star Split Inverter AC): 1.5 டன் மற்றும் 5 ஸ்டார் ரேட்டிங் உடன் வரும் இந்த ஸ்பிலிட் இன்வெர்ட்டர் ஏசி மாடலானது, பிளிப்கார்ட் கூலிங் டேஸ் விற்பனையின் போது 40% தள்ளுபடியை பெற்று ரூ.74,000 க்கு பதிலாக ரூ.43,990 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








