Smart TV-யை தூக்கி போடுங்க.. 250 இன்ச் டிஸ்பிளே Projector வாங்குங்க.. மீண்டும் 50% தள்ளுபடியுடன் விற்பனை..
ரூ.20,000 அல்லது ரூ.30,000 என்று செலவு செய்து இன்னும் 32" இன்ச், 43" இன்ச் அல்லது 55" இன்ச் என்று சிறிய-சிறிய ஸ்மார்ட் டிவிகளை வாங்கி பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா? இந்த விலையிக்கு ஒரு பங்கு செலவில் 250" இன்ச் டிஸ்பிளேவில் படம் பார்க்கலாம்.
ஆம் மக்களே உண்மையாக தான் சொல்கிறோம். சிறிய டிஸ்பிளேகளில் படம் பார்க்கும் ஸ்மார்ட் டிவிலாம் இனி சுத்த வேஸ்ட். உங்கள் கையில் வெறும் 8000 ரூபாய் இருந்தால் போதும் 250" இன்ச் டிஸ்பிளேவில் படம் பார்க்கலாம். 250" இன்ச் டிஸ்பிளே வெறும் 8000 ரூபாய் விலையிலா? என்று நீங்கள் ஆச்சரியமாக பார்ப்பது எங்களுக்கு தெரிகிறது. இது உண்மை தான் மக்களே.

250" இன்ச் டிஸ்பிளேவுடன் வ்சட்கோ யுவா பிளஸ் ப்ரொஜெக்டர் (250" inched WZATCO Yuva Plus Projector):
வ்சட்கோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள வ்சட்கோ யுவா பிளஸ் (WZATCO Yuva Plus) ப்ரொஜெக்டர் மூலம் இது சாத்தியமாகிறது. இந்த ப்ரொஜெக்டர் சாதனம் ஒரு குட்டி தியேட்டரையே உங்கள் வீட்டிற்குள் கொண்டுவருகிறது. 250" இன்ச் டிஸ்பிளே அளவு வரை 4K தரத்தில் வீடியோக்களை பார்க்க அனுமதிக்கிறது. இதனுடனே, இன்பில்ட் ஆக 5W ஹைபை ஸ்பீக்கர் (HiFi speaker) அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. தனியாக ஹோம் தியேட்டர் சிஸ்டம்களையும் இத்துடன் நீங்கள் இணைத்துக்கொள்ளலாம்.
அதேபோல், இந்த WZATCO Yuva Plus ப்ரொஜெக்டர் சாதனம் ஃபையர்ஸ்டிக் (Firestick) ஆதரவு, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஸ்கிரீன் மிர்ரரிங் (Wireless Android and iPhone Screen Mirroring), போன்ற அம்சங்களை வழங்கும் பெஸ்ட் ப்ரொஜெக்டர் சாதனமாக திகழ்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த WZATCO Yuva Plus ப்ரொஜெக்டர் சாதனத்தின் சிறப்பம்ச விபரங்களை இப்போது பார்க்கலாம்.
இந்த ப்ரொஜெக்டர் தரம் பற்றி பேசுகையில், இது 4500:1 கான்ட்ராஸ்ட் ரேட்ஸியோவுடன் (4500 : 1 Contrast Ratio) வருகிறது. இது 420 ANSI ஆன் ஸ்கிரீன் பிரைட்னஸ், LTPS டிஸ்பிளே டெக்னாலஜி ( LTPS Display Technology) அம்சத்தை கொண்டுள்ளது. இது 6600 லுமென்ஸ் (6600 Lumens), 50000 மணி நேர லேம்ப் லைஃப் (50000 Hours Lamp Life) போன்ற அம்சங்களுடன் வருகிறது.

கேபிள் டிவி சேனல், டிவி சீரியல்களை 250'' இன்ச் மெகா திரையில் பார்க்கலாமா?
இந்த ப்ரொஜெக்டர் சாதனம் 2 HDMI போர்ட்டுடன் செட் டாப் பாக்ஸ் (Set Top Box), ஃபையர் டிவி ஸ்டிக் (Fire TV Stick), கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் (PC |Laptop), டிவிடி (DVD) மற்றும் பிளேஸ்டேஷன் (Play Station) சாதனங்களை கனெக்ட் செய்ய அனுமதிக்கிறது. இது 5W இன்பில்ட் ஹை-ஃபை கேவிட்டி ஸ்பீக்கரை ஆதரிக்கிறது.
இது சவுண்ட்பார், ஹெட்ஃபோன்ஸ் போன்ற எக்ஸ்டர்னல் ஸ்பீக்கர்களுடன் இணைக்க 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் வயர்லெஸ் சவுண்ட் செட் இணைப்பிற்காக புளூடூத் டிரான்ஸ்மிட்டருடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற சவுண்ட் தரத்தை ஆதரிக்கும் ஸ்பீக்கர்களை இத்துடன் இணைத்துக்கொள்ளலாம். ஸ்மார்ட் டிவியில் கேபிள் டிவி சேனல்களை நம்மால் பார்க்க முடியுமா?
இந்த ப்ரொஜெக்டரில் அப்படி நம்மால் கேபிள் டிவி சேனல்கள் மற்றும் அதில் ஒளிபரப்பாகும் சீரியல் வரை எல்லாவற்றையும் உங்களால் 250" இன்ச் டிஸ்பிளேவில் மெகா சைஸ் திரையில் பார்க்க முடியும். இதற்கு உங்கள் செட்டப் பாக்ஸை HDMI கேபிள் மூலம் இந்த பிரொஜெக்டருடன் இணைத்து கேபிள் டிவி உள்ளடக்கங்களையும் நீங்கள் பெரிய திரையில் பார்க்கலாம்.
இந்த WZATCO Yuva Plus Projector சாதனத்தின் மீது 50% தள்ளுபடி மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஒரு முறை இதே சலுகை அமேசான் மூலம் லைவ் செய்யப்பட்டுள்ளது. இந்த ப்ரொஜெக்டரின் அசல் விலை ரூ.17,990 ஆகும். ஆனால், அமேசான் அறிவித்துள்ள தள்ளுபடிக்கு பிறகு, இது இப்போது வெறும் ரூ.8,990 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








