மாஸ் காட்டிய Portronics.. ரூ.1500 விலை.. யாரும் பார்த்திடாத புது டிசைன்.. புது வகை இயர்போன்ஸ்.. என்ன மாடல்?
போர்ட்ரோனிக்ஸ் (Portronics) நிறுவனம் மிகவும் வித்தியசமான தோற்றத்தில் இருக்கும் போர்ட்ரோனிக்ஸ் ஹார்மோனிக்ஸ் கிளிப் 5 (Portronics Harmonics Klip 5) என்ற ரீட்ராக்ட்டபிள் ப்ளூடூத் இயர்போன்ஸ் (retractable bluetooth earphones) மாடலை அறிமுகம் செய்துள்ளது.
போர்ட்ரோனிக்ஸ் ஹார்மோனிக்ஸ் கிளிப் 5 (Portronics Harmonics Klip 5) இயர்போன்ஸ் மாடல் பார்ப்பதற்கே மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. மல்டி டாஸ்கிங் செய்யும் நபர்களுக்கு இது ஒரு கட்டாய சாதனம் என்று போர்ட்ரோனிக்ஸ் தெரிவித்துள்ளது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வித்தியசமான போர்ட்ரோனிக்ஸ் ஹார்மோனிக்ஸ் கிளிப் 5 ப்ளூடூத் இயர்போன்ஸ் பற்றிய விபரங்கள் இதோ.

போர்ட்ரோனிக்ஸ் ஹார்மோனிக்ஸ் கிளிப் 5 இயர்போன்ஸ் (Portronics Harmonics Klip 5 Earphones):
போர்ட்ரோனிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் 3-இன்-1 ஃபிரீடம் ஃபோல்ட் 3 என்ற சாதனத்தை அறிமுகம் செய்தது. இதனை தொடர்ந்து நிறுவனம் இப்போது ஹார்மோனிக்ஸ் கிளிப் 5 (Portronics Harmonics Klip 5) இயர்போன்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த டிவைஸ் அடிக்கடி பயணிப்பவர்கள் மற்றும் பிஸியான தொழில் வல்லுநர்களுக்கு மிகவும் பொருத்தமானது. இதுவொரு கிளிப் போன்ற அமைப்புடன் வருகிறது.
இந்த புதிய போர்ட்ரோனிக்ஸ் ஹார்மோனிக்ஸ் கிளிப் 5 இயர்போன்ஸ் சாதனம் ரீட்ராக்ட்டபிள் ப்ளூடூத் இயர்போனாக வெளிவந்துள்ளது. அதாவது, இந்த இயர்போன்களில் உள்ள இயர்பட்ஸ் வயர்களை நீங்கள் உங்கள் தேவைக்கு ஏற்ற அளவில் வெளியில் இழுத்து பயன்படுத்தலாம் மற்றும் இயர்போன்ஸில் உள்ள ஒரு பிரத்தியேகமான பட்டனை அழுத்தியவுடன் வயர் மீண்டும் சுருண்டு உள்ளே செல்ல இந்த ரீட்ராக்ட்டபிள் இயர்போன்ஸ் (retractable earphones) அம்சம் அனுமதிக்கிறது.
இந்த Portronics Harmonics Klip 5 சாதனம் ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) ஆகிய இரண்டு தளங்களிலும் அற்புதமாக வேலை செய்கிறது. இந்த இயர்போன்ஸ் மாடலை பயனர்கள் அவர்களுடைய ஆடை அல்லது சட்டை காலரில் கிளிப் செய்துகொள்ளும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் பிளோசிவ் தொழில்நுட்பத்துடன் (Plosive technology) இயங்குகிறது. இது கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் கால் அனுபவத்தை உறுதி செய்கிறது.
இந்தியாவின் முதல் ரீட்ராக்ட்டபிள் ப்ளூடூத் இயர்போன்ஸ் சாதனம் (India's First Retractable Bluetooth Earphones Model):
இந்த இயர்போன்ஸ் சாதனத்தில் வழங்கப்பட்டுள்ள இயர்பட்ஸ் வயர் 13 இன்ச் அளவு நீளம் கொண்டது. இதை பயனர்களுக்கு இழுத்து, அவர்களுக்கு தேவையான அளவில் பயன்படுத்திக்கொள்ளலாம். பிறகு, ரீட்ராக்ட்டபிள் பட்டனை பிரஸ் செய்வதன் மூலம் இந்த வயர்களை தானாக உள்ளிழுக்கும் படி செய்துகொள்ளலாம். இதில் வால்யூம் கண்ட்ரோல் பட்டன் மற்றும் மல்டி ஃபங்க்ஷன் பட்டன் போன்ற மற்ற பட்டன்களும் இடம்பெறுகின்றன.
இந்த போர்ட்ரோனிக்ஸ் ஹார்மோனிக்ஸ் கிளிப் 5 இயர்போன்ஸ் டிவைஸ் வாய்ஸ் அசிஸ்டன்ட் அம்சத்தையும் ஆதரிக்கிறது. இது வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் போர்ட்ரோனிக்ஸ் ஹார்மோனிக்ஸ் கிளிப் 5 இயர்போன்ஸ் சாதனத்தை முழுமையாக கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. உதாரணத்திற்கு, ஸ்டாப் மியூசிக் (stop music) என்று நீங்கள் கட்டளையிட்டால், இயர்போன்ஸ் இல் பிளே செய்யப்படும் பாடல் நிறுத்தப்படும்.
இப்படி, பிளே மியூசிக், நெக்ஸ்ட் சாங், பிரிவியஸ் சாங் என்பது போன்ற பல வாய்ஸ் கட்டளைகளுக்கு இந்த போர்ட்ரோனிக்ஸ் ஹார்மோனிக்ஸ் கிளிப் 5 இயர்போன்ஸ் சாதனம் கட்டுப்படுகிறது. இது 15 மணிநேர பேட்டரி பிளேபேக் டைம் நேரத்தை வழங்குகிறது. இந்த டிவைஸ் எல்இடி டிஸ்பிளே கொண்ட (LED display) அழகான பேட்டரி லெவல் இண்டிகேட்டரையும் கொண்டுள்ளது. இது பேட்டரி அளவை காண்பிக்கிறது.
இதன் விலை பற்றி பேசுகையில், இந்த போர்ட்ரோனிக்ஸ் ஹார்மோனிக்ஸ் கிளிப் 5 இயர்போன்ஸ் சாதனம் ரூ. 1,799 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. அமேசான் இந்தியா (Amazon India) தளத்தில் இது இப்போது ரூ. 1,599 என்ற மிகவும் குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. இது 12 மாத வாரன்டி உடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications