Just In
- 50 min ago
பெற்றோர்களே.! உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பிள்ளைகள் உண்டா? அப்போ இந்த போன் ரூல்ஸ் பின்பற்றனும்.!
- 1 hr ago
செவ்வாய் கிரகத்தில் தெரிந்த கரடி உருவம்.. NASA வெளியிட்டுள்ள புகைப்படத்தால் பரபரப்பு!
- 1 hr ago
மொத்த போனையும் ஓரங்கட்டும் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்23: விலை என்ன தெரியுமா?
- 2 hrs ago
இனி சாம்சங் போனுக்கு வேலை இருக்காது போலயே! அதிநவீன பிளிப் போனை களமிறக்கும் Oppo: எப்போது அறிமுகம் தெரியுமா?
Don't Miss
- News
என்ன கொடுமை இது? அதிக மது விற்பனை செய்தவருக்கு பாராட்டு! தமிழ்நாடு எங்கே போகிறது? -அன்புமணி கேள்வி
- Movies
அப்படியெல்லாம் அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணலனா ஹீரோயினே ஆக முடியாது.. ஷாக் கொடுத்த தேவி பிரியா!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
- Sports
ஹர்திக் பாண்ட்யாவின் பேராசை? கேப்டன்சியை தவறாக பயன்படுத்தியதால் இந்தியா தோல்வியா.. குவியும் புகார்!
- Automobiles
அனல் பறக்கும் ஏலம்... மஹிந்திராவின் 16 லட்ச ரூபா காரை கோடிகளை கொட்டி வாங்க முந்தியடிக்கும் கோடீஸ்வரர்கள்!
- Lifestyle
அடிக்கடி சிறுநீர் கழிச்சிகிட்டே இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்தான நோய் இருக்க வாய்ப்பிருக்காம்!
- Finance
கௌதம் அதானியை இனி காப்பாற்ற முடியாதா..? 10 பில்லியன் டாலர் மாயம்.. 7வது இடம்..!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
WhatsApp பயனர்களே ஜாக்கிரதை.! அசல் போல போலி வாட்ஸ்அப்.! உங்க போன்ல "இது" இருக்கா?
WhatsApp பயனர்களுக்கு மட்டும் ஏன் தான் இத்தனை சோதனைகள் வருமோ.! தெரியலை.! வாட்ஸ்அப் இந்தியாவில் மிகவும் பேமஸ் ஆனா ஆப்ஸாக இருக்கிறது. இல்லை...இல்லை... உலகளவில் WhatsApp பேமஸான ஆப்ஸாக தான் இருக்கிறது.
ஆனாலும் கூட, மெட்டா (Meta) நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த வாட்ஸ்அப்பை இந்தியாவில் கிட்டத்தட்ட 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்துகிறார்கள்.

வாட்ஸ்அப் போன்ற ரூபத்தில் இந்திய மக்களை ஏமாற்றும் போலி ஆப்ஸ்.!
WhatsApp அதிகமாகப் பிரபலமடையத் தொடங்கிய நேரத்தில் இருந்தே, இந்த ஆப்ஸ் மீது மோசடிக்காரர்கள் படையெடுக்கத் துவங்கிவிட்டார்கள்.!
WhatsApp பிரபலமடைந்த பிறகு அதில் உள்ள சிக்கல்களும், ஆபத்துகளும் சில காலமாக அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
குறிப்பாக, இப்போது வாட்ஸ்அப் பயனர்களுக்கான பாதுகாப்பு சிக்கல்கள், வாட்ஸ்அப் போன்ற ரூபத்தில் இந்திய மக்களை ஏமாற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குளோன் செய்யப்பட்ட Fake WhatsApp.! சிக்கி தவிக்கும் மக்கள்.!
ஆம், வாட்ஸ்அப் போன்ற போலியான குளோன் செய்யப்பட்ட Fake WhatsApp மூலம் பெரிய ஆபத்தான வலையில் பொதுமக்கள் சிக்கி ஏமாறுகிறார்கள் என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏமாற்று வலையில் நீங்களும் சிக்கி, உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்கள் திருடப்பட்டுள்ளதா? இல்லை உங்கள் ஸ்மார்ட்போன் பாதிக்கப்பட்டுள்ளதா? என்பதைத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து இந்த பதிவை இறுதி வரை படியுங்கள்.

குளோன் வாட்ஸ்அப் (Clone WhatsApp) என்றால் என்ன?
WhatsApp இலவசமாகக் கிடைக்கும் இன்ஸ்டன்ட் மெசேஜ்ஜிங் ஆப்ஸாக (Free Instant Messaging Apps) இருந்தாலும் கூட, வாட்ஸ்அப் போன்ற பல குளோன் செய்யப்பட்ட வாட்ஸ்அப் பயன்பாடுகள் ஆன்லைனில் பயன்படுத்தக் கிடைக்கின்றன.
இந்த குளோன் வாட்ஸ்அப் (Clone WhatsApp) பயன்பாடுகள் வாட்ஸ்அப்பில் தற்போது கிடைக்கும் அணைத்து அம்சங்களுடன் சேர்த்து, வாட்ஸ்அப்பில் இல்லாத சில அம்சங்களை வழங்குகின்றன.
இந்த காரணத்தினால் தான் பலர் கூடுதல் அம்சங்களைப் பயன்படுத்த ஆசைப்பட்டு, சிக்கலில் சிக்கிக்கொள்கிறார்கள்.

இந்த குளோன் வாட்ஸ்அப் உங்கள் போனில் இருந்தால் சிக்கல்.!
அப்படி, இந்தியர்களால் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட குளோன் வாட்ஸ்அப் செயலி தான் இந்த "GB WhatsApp" என்ற ஆப்ஸ் ஆகும்.
இதைப் பொதுமக்கள் பலர், இதை அசல் வாட்ஸ்அப் நிறுவனத்தின் மற்றொரு வெர்ஷன் என்று தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்கள். வாட்ஸ்அப் பிஸ்னஸ் (WhatsApp Business) மட்டுமே வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு சொந்தமானது.
ஆனால், இது மூன்றாம் தரப்பு நபர்களால் நிறுவப்பட்ட WhatsApp குளோன் செயலி என்பதே உண்மையாகும். இது மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமானதல்ல என்பதை முதலில் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.

GB WhatsApp இந்தியப் பயனர்களின் சாட்டை உளவு பார்க்கிறதா?
இந்த GB WhatsApp இப்போது இந்தியப் பயனர்களின் சாட்டை உளவு பார்ப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சி நிறுவனமான ESET வெளியிட்டுள்ளது.
T2 2022 அச்சுறுத்தல் அறிக்கையில் இந்தியா அதிக ஆண்ட்ராய்டு ட்ரோஜன் தாக்குதல்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் GB WhatsApp பதிவிறக்கம் செய்யக் கிடைப்பதில்லை.

உங்கள் போனில் உள்ள அணைத்து தகவலும் நோட்டம் விடப்படுகிறதா?
ஆனால், மக்கள் இந்த GB WhatsApp ஆப்ஸை APOK பைல் வழியாக இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறார்கள். இந்த ஆப்ஸை உங்கள் போனில் நீங்கள் இன்ஸ்டால் செய்திருந்தால் உஷார் மக்களே.
GB WhatsApp இந்தியப் பயனர்களின் அரட்டையை உளவு பார்ப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, உங்கள் சாட்டை குளோன் GB WhatsApp செயலி நோட்டம் விடுகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

GB WhatsApp எதையெல்லாம் கண்காணிக்கிறது தெரியுமா?
சில கூடுதல் நன்மைகளுக்காக ஆசைப்பட்டு இந்த GB WhatsApp செயலியைப் பயன்படுத்தியவர்கள் நிலை இப்போது ஆபத்தில் உள்ளது.
GB WhatsApp பயன்படுத்தும் பயனர்களுக்குத் தெரியாமல் இந்த ஆப்ஸ் ஆடியோ மற்றும் வீடியோவை சாதனத்தில் பதிவிறக்கம் செய்யக்கூடிய மால்வேர் பைல்களை இந்த ஆப்ஸ் கொண்டுள்ளது.
அதேபோல், GB WhatsApp இன்ஸ்டால் செய்யப்பட்ட சாதனத்தில் செய்யப்படும் பிற செயல்பாடுகளையும் இந்த ஆப்ஸ் உளவு பார்க்கிறது.

16.6 லட்சத்திற்கும் அதிகமான WhatsApp பயனர்களுக்கு தடை.!
ஆதரிக்கப்படாத ஆப்ஸ்களில் கணக்குகளைப் பயன்படுத்தும் பயனர்களை வாட்ஸ்அப் தடை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் மாதத்தில், தீங்கு விளைவிக்கும் நடத்தையின் அடிப்படையில் 16.6 லட்சத்திற்கும் அதிகமான பயனர் கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்ததாக நிறுவனம் அறிவித்துள்ளது.
உங்கள் ஸ்மார்ட்போன் தகவலைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள, நீங்கள் எந்தவொரு நம்பிக்கை இல்லாத மூன்றாம் தரப்பு குளோன் ஆப்ஸ்களையும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

உங்கள் போனில் GB WhatsApp இருந்தால் உடனே "இதை" செய்யுங்க.!
Google Play Store இலிருந்து அதிகாரப்பூர்வ பயன்பாடுகளை மட்டுமே வாசகர்கள் நிறுவுமாறு பரிந்துரைக்கிறோம். பயனர்கள் சில கூடுதல் அம்சங்களுக்காக ஆசைப்பட்டு, உங்கள் போனில் உள்ள தரவு மற்றும் தனியுரிமை பாதுகாப்பைத் தவறவிடாதீர்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அதிகாரப்பூர்வமற்ற ஆப்ஸ் உங்களுக்கு பாதிப்புகளைப் ஏற்படுத்தும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். GB WhatsApp உங்கள் போனில் இருந்தால், உடனே அதை டெலீட் செய்யுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470