ஏப்.20 வரை.. Acer லேப்டாப்கள் மீது OFFER மழை! 3 ஆண்டு இலவச WARRANTY.. ரூ.7000 டிஸ்கவுண்ட்.. என்னென்ன மாடல்கள்?
ஏசர் (Acer) நிறுவனமானது ஏப்.20 வரை நடக்கும் சிறப்பு விற்பனை ஒன்றை அறிவித்துள்ளது. தி பிக் அப்ரைசல் சேல் என்கிற பெயரின்கீழ் நடக்கும் இந்த விற்பனையின்ல் பல்வேறு லேப்டாப் மாடல்கள் மற்றும் மானிட்டர்கள் மீது பிரத்யேக தள்ளுபடி மற்றும் சலுகைகள் அணுக கிடைக்கிறது.
ஏசர் ஸ்விஃப்ட் லேப்டாப்கள் (Acer Swift Laptops) மீதான ஆஃபர்கள்: ஏசர் நிறுவனத்தின் ஸ்விஃப்ட் சீரீஸ் லேப்டாப்கள் மீது 3 ஆண்டுகளுக்கான இலவச வாரண்டி (3 Years Free Warranty) மற்றும் இலவச அக்ஸசெரீஸ்கள் (Free Accessories) அல்லது 7% ஸ்டூடெண்ட் டிஸ்கவுண்ட் (Student Discount) கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏசர் ஆஸ்பையர் வேரோ லேப்டாப்கள் (Acer Aspire Vero Laptops) மீதான ஆஃபர்கள்: ஏசர் நிறுவனத்தின் ஆஸ்பையர் வேரோ சீரீஸ் லேப்டாப்கள் மீது ரூ.5000 வரையிலான டிஸ்கவுண்ட் அல்லது 3 ஆண்டுகளுக்கான இலவச வாரண்டி மற்றும் இலவச அக்ஸசெரீஸ்கள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
நிட்ரோ மற்றும் ப்ரடேட்டர் (Acer Nitro and Predator) மீதான ஆஃபர்கள்: ஏசர் நிறுவனத்தின் நிட்ரோ மற்றும் ப்ரடேட்டர் சீரீஸ் லேப்டாப்கள் மீது 3 ஆண்டுகளுக்கான இலவச வாரண்டி மற்றும் இலவச அக்ஸசெரீஸ்கள் அல்லது ரூ.15,000 மதிப்புள்ள கேமிங் சேர் (Gaming Chair) ஆனது இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏசர் ஆஸ்பையர் லைட் லேப்டாப்கள் (Acer Aspire Lite Laptops) மீதான ஆஃபர்கள்: ஏசர் நிறுவனத்தின் ஆஸ்பையர் லைட் சீரீஸ் லேப்டாப்கள் மீது 41% வரையிலான தள்ளுபடி (Up to 41% Discount) அல்லது 3 ஆண்டுகளுக்கான இலவச வாரண்டி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏசர் டிராவல்மேட் லேப்டாப்கள் (Acer Travelmate Laptops) மீதான ஆஃபர்கள்: ஏசர் நிறுவனத்தின் டிராவல்மேட் சீரீஸ் லேப்டாப்கள் மீது ரூ.7000 வரையிலான தள்ளுபடி அல்லது 3 ஆண்டுகளுக்கான இலவச வாரண்டி மற்றும் இலவச அக்ஸசெரீஸ்கள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏசர் மானிட்டர்கள் (Acer Monitors) மீதான ஆஃபர்கள்: ஏசர் நிறுவனத்தின் மானிட்டர்கள் மீது 41% வரையிலான தள்ளுபடி (Up to 60% Discount) மற்றும் கூடுதலாக ரூ.1000 வரையிலான தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேற்கண்ட அனைத்து சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுமே ஏசர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான ஏசர் இந்தியா ஸ்டோரில் (https://store.acer.com/en-in/) அணுக கிடைக்கிறது.
தவற விடக்கூடாத லேப்டாப் சலுகைகளை பொறுத்தவரை.. 12த் ஜென் இன்டெல் கோர் ஐ3 ப்ராசஸர் உடன் வரும் 15.6-இன்ச் ஏசர் ஆஸ்ப்யர் லைட் லேப்டாப் மாடல் ஆனது ரூ.52,990 க்கு பதிலாக ரூ.33,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல 12த் ஜென் இன்டெல் கோர் ஐ5 ப்ராசஸர் உடன் வரும் 14-இன்ச் ஏசர் டிராவல்மேட் லேப்டாப் ஆனது ரூ.85,000 க்கு பதிலாக ரூ.61,500 க்கு வாங்க கிடைக்கிறது.
இன்டெல் கோர் அல்ட்ரா 5 ப்ராசஸர் உடன் வரும் 14-இன்ச் ஏசர் ஸ்விஃப்ட் கோ லேப்டாப் மாடல் ஆனது ரூ.1,29,999 க்கு பதிலாக ரூ.84,990 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல 13த் ஜென் இன்டெல் கோர் ஐ5 ப்ராசஸர் உடன் வரும் 14-இன்ச் ஏசர் ஆஸ்பையர் வேரோ லேப்டாப் மாடல் ஆனது ரூ.71,999 க்கு பதிலாக ரூ.62,999 க்கு வாங்க கிடைக்கிறது.
இன்டெல் கோர் ஐ3 ப்ராசஸர் உடன் வரும் 14-இன்ச் ஏசர் ஆஸ்பையர் 3 லேப்டாப் மாடல் ஆனது ரூ.45,999 க்கு பதிலாக ரூ.32,990 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல இன்டெல் கோர் ஐ7 ப்ராசஸர் உடன் வரும் 15.6-இன்ச் ஏசர் நிட்ரோ வி கேமிங் லேப்டாப் மாடல் ஆனது ரூ.1,15,999 க்கு பதிலாக ரூ.94,999 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications