Home
News

கழிவறையில் கை வைக்கும் இந்திய ரயில்வே.. Gandhvedh என்கிற மானிட்டர்-ஐ உள்ளே இன்ஸ்டால் செய்ய முடிவு.. ஏன்?

சுத்தமாக இல்லை.. தாங்க முடியாத அளவிற்கு நாற்றம் அடிக்கிறது.. கழிவறை பக்கத்தில் உள்ள இருக்கையில் கூட அமர முடியவில்லை.. என கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் இரயில் பயணிகளும், அதன் விளைவாக இந்திய ரயில்வே துறையும் சந்திக்கும் ஒரு பிரச்சனை என்னவென்று கேட்டால்?

அது இரயில் கழிவறை தொடர்பான புகார்களாகத் தான் இருக்கும். இந்த பிரச்சனைக்கு முடிவுகட்ட இந்திய ரயில்வே துறையானது (Indian Railways) ஒரு அட்டகாசமான புதிய முயற்சியை கையாளவுள்ளது. அதென்னவென்று சொன்னால் ரயில் பயணிகள் ஷாக் ஆகிவிடுவார்கள். அதென்ன முயற்சி? இது எப்படி வேலை செய்யும்? எப்போது முதல் அமலுக்கு வரும்? இதோ விவரங்கள்:

ரயில் கழிவறையில் இன்ஸ்டால் செய்யப்பட உள்ள Gandhvedh மானிட்டர்.. ஏன்?

அதென்ன முயற்சி? ரயில்களில் உள்ள துர்நாற்றம் மிக்க மற்றும் அழுக்கான கழிப்பறைகளை "உடனுக்குடன் சுத்தம் செய்ய" இந்திய ரயில்வே துறையானது ஐஓடி அடிப்படையிலான ஒரு தொழில்நுட்பத்தை (IoT-based technology) பயன்படுத்த உள்ளது. பல்வேறு வகையான நவீனமயமாக்கல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் கூட, அசுத்தமான கழிவறைகள் குறித்த சிக்கலை சரிசெய்யவே முடியாத காரணத்தினால், இந்திய ரயில்வே துறையானது தற்போது தொழில்நுட்பத்தை தன் கையில் எடுத்துள்ளது.

இரயில் கழிப்பறைகளில் துர்நாற்றம் வீசுவதை கண்டறிய உதவும் ஐஓடி அடிப்படையிலான தொழில்நுட்பத்தை பயன்படுத்த ரயில்வே வாரியம் பரிசீலித்து வருகிறது. இந்த புதிய திட்டத்திற்காக மும்பையை தளமாக கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனமான விலிசோ டெக்னாலஜிஸ் (Mumbai-based startup Viliso Technologies) தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

ரயில் கழிவறையில் இன்ஸ்டால் செய்யப்பட உள்ள Gandhvedh மானிட்டர்.. ஏன்?

இது எப்படி வேலை செய்யும்? இரயில் கழிவறைகளில் துர்நாற்றம் வீசுவதை கண்டறியும் திறன்கொண்ட சென்சார்கள் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் சிஸ்டம் (Smart System) உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த சென்சார்கள் காற்றில் உள்ள ஆவியாகும் சேர்மங்கள் மற்றும் மூலக்கூறுகளை (Volatile Compounds and Molecules) அடையாளம் கண்டு, அந்த தரவுகளை குப்பாய்வு செய்வதற்காக ஒரு சென்ட்ரல் ஹப்பிற்கு (Central Hub) அனுப்பும்.

அந்த பகுப்பாய்வின் வழியாக இரயில் கழிவறைகளில் துர்நாற்றம் வீசுவது கண்டறியப்பட்டால், அதை உடனே சுத்தம் செய்யச்சொல்லி துப்புரவு பணியாளர்கள் அலெர்ட் செய்யப்படுவார்கள். தொழில்நுட்பத்தின் உதவியோடு இந்திய ரயில்வே துறை செய்யப்போகும் இந்த நிகழ் நேர கண்காணிப்பானது - விரைவான தலையீடு, உடனடி நடவடிக்கையை தூண்டும் மற்றும் இரயில் கழிவறைகளில் ஏற்படும் சுத்தமின்மையை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கட்டுப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில் கழிவறையில் இன்ஸ்டால் செய்யப்பட உள்ள Gandhvedh மானிட்டர்.. ஏன்?

எப்போது முதல் அமலுக்கு வரும்? இரயில் கழிவறைகளில் உள்ள துர்நாற்றத்தை கண்டறியும் சென்சார்கள் கொண்ட இந்த ஸ்மார்ட் சிஸ்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து..எந்தவொரு சரியான தகவலும் இல்லை. விலிசோ டெக்னாலஜிஸ் நிறுவனத்திடம் கந்த்வேத் (Gandhvedh) என்கிற ஒரு மானிட்டர் ஏற்கனவே உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

கழிப்பறைகளில் இன்ஸ்டால் செய்யப்படும் கந்த்வேத் ஆனது நாற்றம், டோட்டல் வோலடைல் ஆர்கானிக் காம்பவுண்ட் (Total Volatile Organic Compound - TVOC), வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை கண்காணிக்கும் ஒரு மின்னணு சாதனமாகும். கந்த்வேத் வழியாக சேகரிக்கப்படும் தரவுகள் ஆனது சுகாதார பராமரிப்பாளர்கள் அல்லது கண்காணிப்பு அதிகாரிகள் பயன்படுத்தப்படும் மொபைல் மற்றும் இண்டர்நெட் ஆப்களுக்கு அனுப்பி வைக்கப்படும்; பின்னர் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்படியான திறன்களை கொண்ட கந்த்வேத் மானிட்டர் தான்.. ரயில் கழிவறைகளில் உள்ள துர்நாற்றத்தை கண்டறிவதற்கும் பயன்படுத்தப்பட உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதுகுறித்த விவரங்கள் இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள "தேர்தலுக்கு பிறகான 100 நாள் திட்டத்தில்" விவரிக்கப்படவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்கு பிறகான 100 நாள் திட்டத்தின் கீழ் இந்திய ரயில்வே துறையானது புதிய ரீஃபண்ட் திட்டத்தை (Refund Scheme) கொண்டுவரவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், வெறும் 24 மணி நேரத்திற்குள் டிக்கெட் ரீஃபண்ட் தொகை திரும்பி கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 3 நாட்கள் முதல் 1 வாரம் என்கிற காலம் 24 மணிநேரமாக மாறவுள்ளது.

இதுதவிர்த்து இரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்வது, டிக்கெட்டை கேன்சல் செய்வது, ரயில் எங்கே இருக்கிறது என்பதை கண்காணிக்கும் லைவ் ட்ரெயின் ட்ராக்கிங் (Live train tracking) மற்றும் இரயில் பயணத்தின் போதான உணவுகளை புக்கிங் (Food bookings onboard) செய்வது என பல்வேறு வகையான ரயில்வே தொடர்பான சேவைகளை வழங்கும் ஒரு விரிவான "சூப்பர் ஆப்பை" (Super App) இந்திய ரயில்வே துறை வெளியிட உள்ளது.

Photo Courtesy: Viliso Technologies | IndiaMART

More from GizBot

Best Mobiles in India

English summary
Gandhvedh IoT based electronic device How It detect odors in train toilets and help Indian Railways
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X