Home
News

மலிவு விலை.. மல்டிஃபங்க்ஷன் Smartwatch.. இன்பில்ட் நேவிகேஷன், ப்ளூடூத் கால்லிங்.. இன்னும் ஏராளம்.. எந்த மாடல்?

போட் (boAt) நிறுவனம் இந்திய ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch) சந்தையில் புதிதாக போட் ஸ்ட்ரோம் கால் 3 (boAt Storm Call 3) என்ற சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது வெறும் ரூ.1000 விலை புள்ளியில் இன்பில்ட் நேவிகேஷன் அம்சத்துடன் வருகிறது.

கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்ட போட் ஸ்ட்ரோம் கால் 2 (boAt Storm Call 2) என்ற சாதனம் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை போட் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை நிறுவனம் 1.83" இன்ச் டிஸ்பிளே, ப்ளூடூத் காலிங் போன்ற அம்சங்களுடன் மிகவும் மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளது.

மலிவு விலை.. மல்டிஃபங்க்ஷன் Smartwatch.. இன்பில்ட் நேவிகேஷன்..

போட் ஸ்ட்ரோம் கால் 3 ஸ்மார்ட்வாட்ச் (boAt Storm Call 3 Smartwatch):
இருப்பினும், மக்கள் ஈர்க்கும் விதத்தில் இதன் முக்கிய அம்சமான இன்பில்ட் நேவிகேஷன் அம்சம் பார்க்கப்படுகிறது. ரூ.1,000 விலை வரம்பில் இன்பில்ட் நேவிகேஷன் அம்சத்தை வழங்கும் ஒரே ஸ்மார்ட்வாட்ச்சாக இந்த போட் ஸ்ட்ரோம் கால் 3 சாதனம் பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் பற்றிய முழு விபரம், விலை மற்றும் விற்பனை பற்றிய தகவலை இப்போது பார்க்கலாம்.

போட் ஸ்ட்ரோம் கால் 3 சிறப்பம்சம் (boAt Storm Call 3 Specifications):
இந்த போட் ஸ்ட்ரோம் கால் 3 சாதனம் 1.83" இன்ச் அளவு கொண்ட எச்டி எல்சிடி (HD LCD Display) உடன் 550 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. இது வேக் கெஷ்டர் பியூச்சர் (Wake Gesture feature) மற்றும் டிஐஒய் வாட்ச் ஃபேஸ் (DIY watch face) அம்சத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் குவிக் டயல் பேட் (quick dial pad) கொண்ட ப்ளூடூத்-காலிங் அம்சத்தையும் ஆதரிக்கிறது.

இந்த சாதனத்தில் மேப் மை இந்தியா (MapMyIndia) மூலம் சக்தி பெறப்பட்ட இன்பில்ட் நேவிகேஷன் சிஸ்டம் (inbuilt navigation system) போன்ற ஆதரவை கொண்டுள்ளது. இந்த சாதனம் பிரத்தியேகமான கியூஆர் டிரே (QR Tray) அம்சத்தையும் கொண்டுள்ளது. இந்த அம்சம் QR கோட் தகவல் மூலம் தகவல்களை ஸ்மார்ட்வாட்சில் சேகரிக்க அனுமதிக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் கால்லிங் அம்சத்துடன் 2 நாட்கள் நீடிக்கும் பேட்டரி ஆயுளை கொண்டுள்ளது.

அதேபோல், ப்ளூடூத் கால்லிங் அம்சம் இல்லாமல் இது ஒரு வாரம் வரை சிங்கிள் சார்ஜ்ஜில் வேலை செய்கிறது. இந்த டிவைஸ் 700 ஸ்போர்ட்ஸ் மோட் ஆதரவை கொண்டுள்ளது. இது SpO2, ஹார்ட் ரேட் மானிட்டர், மியூசிக் கண்ட்ரோல், கேமரா கண்ட்ரோல், DND போன்ற பல அம்சங்களையும் கொண்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை தகவலை இப்போது பார்க்கலாம்.

விலை:

boAt நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், புதிதாக அறிவிக்கப்பட்ட boAt Storm Call 3 விலை ரூ.1,249 ஆக பட்டியலிடப்பட்டுள்ளது. இதை Blinkit மற்றும் Flipkart வழியாகவும் வாங்கலாம். ஸ்மார்ட்வாட்ச் செர்ரி ப்ளாசம், டார்க் ப்ளூ, ஆக்டிவ் பிளாக், ஆலிவ் கிரீன் மற்றும் சில்வர் மெட்டல் வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
boAt Storm Call 3 Smartwatch with Inbuilt Navigation QR Code Tray BT Calling Price Flipkart Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X