உங்க போனை சார்ஜ் செய்தால் கூட ஹேக் செய்யப்படுமா? என்னப்பா சொல்றீங்க.! உஷார் மக்களே.!

|

இந்தியாவில் உள்ள ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு புதிய எச்சரிக்கை (Smartphone Users Alert) செய்தியை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

பொதுமக்கள், வெளியூர் அல்லது ஏதேனும் பயணம் செல்லும் போது, அவர்களுடைய ஸ்மார்ட்போன்களை பொது இடங்களில் இருக்கும் பப்ளிக் சார்ஜிங் ஸ்டேஷன்களில் (Public Charging Station) சார்ஜ் செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளனர்.

மீறி செய்யும் போது, உங்கள் போன் ஹேக் செய்யப்படவும், உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் பறிபோகவும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கல் என்ன தெரியுமா?

ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கல் என்ன தெரியுமா?

ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு (Smartphone Users) இருக்கும் மிகப்பெரிய போராட்டம் என்றால், அது அவர்களுடைய டிவைஸில் இருக்கும் சார்ஜ்ஜை சரியாகப் பயன்படுத்துவது தான்.

பொதுவாக நாம் இப்போது, பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் உள்ள பேட்டரிகள், ஏறக்குறைய 1 நாள் நீடிக்கும் ஆயுளை மட்டுமே வழங்குகின்றன. இதனால், பயனர்கள் அடிக்கடி சார்ஜ் செய்ய பிளக் பாயிண்ட்களை (Plug Point) தேட வேண்டியதுள்ளது.

பொது இடங்களில் சார்ஜிங் பாயிண்ட்களை தேடி அலைகிறீர்களா?

பொது இடங்களில் சார்ஜிங் பாயிண்ட்களை தேடி அலைகிறீர்களா?

பயணத்தின் போது நம்முடைய ஸ்மார்ட்போன் சார்ஜ் மிகவும் வேகமாகக் குறைகிறது. போரிங்கான பயணத்தின் போது, பொழுதுபோக்கிற்காக நாம் ஸ்மார்ட்போனை அதிகமாக பயன்படுத்துகிறோம்.

இதனால், சார்ஜ் மிகவும் வேகமாகக் குறைகிறது. மீண்டும் உங்கள் போனின் சார்ஜ்ஜை ஜூஸ் செய்ய, நாம் சார்ஜிங் பாயிண்ட்களை (Charging Points) தேடி அலைகிறோம். பயணத்தின் போது, எப்படியும் ஒரு பொது சார்ஜிங் ஸ்டேஷனை கண்டறிந்து நம்முடைய டிவைஸை சார்ஜ் செய்கிறோம்.

உங்களிடம் இந்த Apple டிவைஸ் இருந்தால் பிளைட்டில் செல்ல தடை.! காரணம் என்ன தெரியுமா?உங்களிடம் இந்த Apple டிவைஸ் இருந்தால் பிளைட்டில் செல்ல தடை.! காரணம் என்ன தெரியுமா?

காவல்துறையினர் வெளியிட்ட எச்சரிக்கை செய்தி என்ன சொல்கிறது?

காவல்துறையினர் வெளியிட்ட எச்சரிக்கை செய்தி என்ன சொல்கிறது?

அவசரக் காலங்களில் இந்த பொது சார்ஜிங் ஸ்டேஷன்கள் நமக்கு உதவுகின்றன என்றாலும் கூட, சில சமயங்களில் இந்த பொது சார்ஜிங் ஸ்டேஷன் மூலம் பொதுமக்களுக்கு ஆபத்துகளும் நிகழ்வதாக ஒடிசா காவல்துறையினர் (Odisha Police) கூறியுள்ளனர்.

பொதுமக்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த வசதிகளை இப்போது ஹேக்கர்கள் (Hackers), அவர்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டுள்ளனர்.

ஆம், பொது இடங்களில் சார்ஜ் செய்யும் போது, உங்கள் போன்களை ஹேக் (Hack) செய்யப் பார்க்கிறார்கள்.

பப்ளிக் சார்ஜிங் ஸ்டேஷனில் USB டைப் போர்ட் இருக்கிறதா? உஷார் மக்களே.!

பப்ளிக் சார்ஜிங் ஸ்டேஷனில் USB டைப் போர்ட் இருக்கிறதா? உஷார் மக்களே.!

பொது சார்ஜிங் ஸ்டேஷன் பாயிண்ட்களில், USB டைப் போர்ட் (USB Charging Port) உடன் மொபைல் போன் சார்ஜிங் செய்ய அனுமதிக்கிறது என்றால், நீங்கள் உஷாராக இருக்க வேண்டும் மக்களே.

USB போர்ட் மூலம் பொது இடங்களில் நீங்கள் சார்ஜ் செய்யும் போது, ஹேக்கர்கள் பெரும்பாலும் மால்வேர் (Malware) அல்லது வைரஸ் (Virus) போன்ற தீம்பொருளை உங்கள் போனில் இன்ஸ்டால் செய்கிறார்கள்.

அதேபோல், USB போர்ட் மூலம் இணைக்கப்பட்ட டிவைஸை முழுமையாக அணுகி, அதில் உள்ள உங்கள் தரவுகளைத் திருடிவிடுகிறார்கள் (Data Theft).

WhatsApp பயனர்களே ஜாக்கிரதை.! அசல் போல போலி வாட்ஸ்அப்.! உங்க போன்ல WhatsApp பயனர்களே ஜாக்கிரதை.! அசல் போல போலி வாட்ஸ்அப்.! உங்க போன்ல "இது" இருக்கா?

சார்ஜிங் மூலம் பயனர் தகவல்களை திருட முடியுமா? என்னப்பா சொல்றீங்க.!

சார்ஜிங் மூலம் பயனர் தகவல்களை திருட முடியுமா? என்னப்பா சொல்றீங்க.!

உங்கள் போன் சார்ஜ் ஆவதாக நீங்கள் நினைக்கும் போது, ​​இந்த ஹேக்கர்கள் உங்கள் மொபைலை வைரஸ்கள் அல்லது மால்வேர்களால் பாதிப்படையச் செய்து, பின்னர் உங்கள் மொபைலைக் கண்காணிக்க அல்லது அதில் உள்ள ரகசியத் தரவைத் திருட முயல்கிறார்கள் என்பதே உண்மை.

சார்ஜிங் மூலம் இப்படி பொதுமக்களின் போன்களை ஹேக் செய்யும் இந்த செயல்முறையை ஜூஸ் ஜாக்கிங் (Juice Jacking) என்று காவல்துறையினர் அழைக்கிறார்கள்.

ஜூஸ் ஜாக்கிங் (Juice Jacking) என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது?

ஜூஸ் ஜாக்கிங் (Juice Jacking) என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது?

சரி, இப்போது இந்த ஜூஸ் ஜாக்கிங் (Juice Jacking) எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம். நீங்கள் ஐபோன், ஆண்ட்ராய்டு அல்லது வேறு ஏதேனும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவராக இருந்தால், எல்லா சாதனங்களிலும் பொதுவாகக் காணப்படும் ஒன்று கேபிள் மூலம் செய்யப்படும் சார்ஜிங் போர்ட்களாகும்.

பல்வேறு வகையான போர்ட்கள் இருந்தாலும், சார்ஜிங் கேபிள் (Charging Cable) மூலம், நம்முடைய டிவைஸை சார்ஜ் செய்யும் செயல்முறை ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. இது எல்லா பிராண்டுகளுக்கு ஒரே மாதிரியானது.

MS Dhoni அறிமுகம் செய்த புது ட்ரோனி ட்ரோன்.! இந்த Drone கம்பெனிக்கு சொந்தக்காரர் தோனியா?MS Dhoni அறிமுகம் செய்த புது ட்ரோனி ட்ரோன்.! இந்த Drone கம்பெனிக்கு சொந்தக்காரர் தோனியா?

இந்த சார்ஜிங் போர்ட்களை கண்டால் உடனே உஷாராகிவிடுங்கள்.!

இந்த சார்ஜிங் போர்ட்களை கண்டால் உடனே உஷாராகிவிடுங்கள்.!

பொது இடங்களில் இருக்கும் சார்ஜிங் ஸ்டேஷன்களில் மூன்று புள்ளிகள் கொண்ட பிளக் பாயிண்டிற்கு (3-Point Plug) பதிலாக டைரக்ட் USB சார்ஜிங் போர்ட்களை (Direct USB Charging Port) நீங்கள் கண்டால், எச்சரிக்கையாக இருங்கள்.

இப்படியான டைரக்ட் USB சார்ஜிங் போர்ட்கள் மூலம் தான் ஹேக்கர்களால் உங்கள் போன் வேறு சாதனத்துடன் இணைக்கப்பட்டு, அதிலிருக்கும் தரவுகள் திருடப்படுகிறது.

அத்துடன், உங்கள் போனில் மால்வேர், ஸ்பைவேர், வைரஸ் போன்றவற்றையும் அவர்கள் இன்ஸ்டால் செய்ய அனுமதிக்கிறது.

எந்த போன்களில் ஜூஸ் ஜாக்கிங் நடப்பது வெளியே தெரியாது?

எந்த போன்களில் ஜூஸ் ஜாக்கிங் நடப்பது வெளியே தெரியாது?

உங்கள் போன் லேட்டஸ்ட் அல்லது சமீபத்திய மாடல் என்றால், கட்டாயமாக உங்கள் போனில் டேட்டா எக்ஸ்சேஞ் அம்சம் இயல்புநிலையாக முடக்கப்பட்டிருக்கும் (data transfer is disabled by default).

ஆனால், பழைய ஆண்ட்ராய்டு வெர்ஷன்களில் இயங்கும் சாதனங்களில் இத்தகைய அம்சம் இல்லை என்பதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

உங்கள் கணினியில் உங்கள் மொபைலை இணைக்கும் போது, ​​நீங்கள் பைல்களைப் பகிர விரும்புகிறீர்களா என்று, உங்களிடம் நோட்டிபிகேஷன் காண்பிக்கப்படும்.

இந்த லிஸ்ட்ல உங்க போன் இருந்தா நீங்க லக்கி.! இல்லனா 5G யூஸ் பண்ண வாய்ப்பே இல்லை.!இந்த லிஸ்ட்ல உங்க போன் இருந்தா நீங்க லக்கி.! இல்லனா 5G யூஸ் பண்ண வாய்ப்பே இல்லை.!

ஜூஸ் ஜாக்கிங்கிற்கான அறிகுறிகளை உன்னிப்பாக கவனியுங்கள் மக்களே.!

ஜூஸ் ஜாக்கிங்கிற்கான அறிகுறிகளை உன்னிப்பாக கவனியுங்கள் மக்களே.!

இதேபோல், விமான நிலையங்கள், மெட்ரோ, ரயில் நிலையங்கள் அல்லது பிற இடங்களில் பொது சார்ஜிங் போர்ட்களைப் பயன்படுத்தும் போது, ​​டேட்டா எக்ஸ்சேஞ் செய்ய அனுமதி கேட்கப்பட்டால், அதை யோசிக்காமல் உடனடியாக நிராகரிக்கவும்.

இது ஜூஸ் ஜாக்கிங்கிற்கான அறிகுறியாகும் (Symptoms Of Juice Jacking).

ஜூஸ் ஜாக்கிங் ஒரு பரவலான அச்சுறுத்தல் இல்லை என்றாலும், அபாயங்களைத் தவிர்ப்பது மற்றும் புரிந்துகொள்வது நமக்கு நல்லது.

எப்படி உங்கள் போனை பாதுகாப்பாக சார்ஜ் செய்வது?

எப்படி உங்கள் போனை பாதுகாப்பாக சார்ஜ் செய்வது?

உங்கள் ஸ்மார்ட்போன் டிவைஸை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள நீங்கள் விரும்பினால், எப்பொழுதும் உங்களுடன் ஒரு பவர் பேங்க் (Power Bank) சாதனத்தை எடுத்து செல்லுங்கள்.

அப்படி, உங்களிடம் பவர் பேங்க் இல்லை என்றால், உங்கள் சார்ஜிங் அடாப்டரை பவர் பிளக் சாக்கெட்டிலிருந்து (Power Plug Socket) நேரடியாக சார்ஜ் செய்யும் பாதுகாப்பான பழக்கத்தைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

USB போர்ட்களில் நேரடியாக கேபிளை மட்டும் சொருகி சார்ஜ் செய்யும் பழக்கத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Beware Of Juice Jacking In India Smartphone User Don't Charge Your Device In Public Charging Station

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X