Home
Gadgets

புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!

நத்திங் நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ்களாக நத்திங் இயர் (Nothing Ear) மற்றும் நத்திங் இயர் ஏ (Nothing Ear a) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவ்விரண்டும் என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளன? என்ன விலைக்கு.. எப்போது முதல் விற்பனைக்கு வரும்? இதோ விவரங்கள்:

பொதுவான அம்சங்களை பொறுத்தவரை.. நத்திங் நிறுவனத்தின் இந்த 2 புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் (True wireless Earbuds) மாடல்களுமே 45dB வரையிலான ஏஎன்சி (ANC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேஷன் (Active noise cancellation) மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டியை (Bluetooth Connectivity) ஆதரிக்கின்றன.

Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!

மேலும் 2 மாடல்களின் சார்ஜிங் கேஸ்களும் (Charging Case) மற்றும் இயர்பட்களும் பிராண்டின் சிக்னேச்சர் டிரான்ஸ்பரென்ட் டிஸைனை (Signature Transparent Design) பெற்றுள்ளன. மேலும் இரண்டுமே இன்-இயர் டிடெக்ஷன் அம்சத்துடன் (In-ear detection feature) வருகின்றன மற்றும் டூயல் கனெக்டிவிட்டியை (Dual Connectivity) ஆதரிக்கின்றன. இரண்டுமே 11மிமீ டைனமிக் டிரைவர்களுடன் வருகின்றன.

நத்திங் இயர் மற்றும் இயர் ஏ ஆகிய இரண்டுமே பிஞ்ச் கண்ட்ரோல்களை (Pinch Controls) வழங்குகின்றன. மேலும் இவ்விரு மாடல்களுமே நத்திங் எக்ஸ் ஆப் (Nothing X App) உடன் இணக்கமாக உள்ளன. இந்த ஆப்பை பயன்படுத்தி இந்த இயர்பட்ஸ்களின் செயல்பாடுகளை கஸ்டமைஸ் செய்யலாம்.

Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!

சுவாரசியமாக இந்த இரண்டுமே சாட்ஜிபிடி (ChatGPT) ஒருங்கிணைப்புடன் வருகின்றன. இதை பிஞ்ச்-டு-ஸ்பீக் ஆக்ஷன் (Pinch to Speak Action) மூலம் அணுகலாம். இந்த அம்சத்தை அணுக பயனர்கள் தங்கள் நத்திங் போன்களில் லேட்டஸ்ட் நத்திங் ஓஎஸ் (Latest Nothing OS) மற்றும் சாட்ஜிபிடி-ஐ இன்ஸ்டால் செய்து இருக்க வேண்டும்.

நத்திங் இயர் மற்றும் இயர் ஏ இயர்பட்கள் ஒவ்வொன்றும் 46எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளன, அதே சமயம் சார்ஜிங் கேஸ்களில் 500எம்ஏஎச் பேட்டரிகள் உள்ளன. முக்கிய வேறுபாடுகளை பொறுத்தவரை.. நத்திங் இயர் மாடலானது 40.5 மணிநேரம் வரை ஒட்டுமொத்த பேட்டரி லைஃப்பை (Total Battery Life) வழங்குகிறது.

Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!

மறுகையில் உள்ள நத்திங் இயர் ஏ மாடலானது 42.5 மணிநேரம் வரை ஒட்டுமொத்த பிளேபேக் நேரத்தை (Total Playback Time) வழங்கும் என்று கூறப்படுகிறது. நத்திங் இயர் ஆனது செராமிக் டயாஃப்ரம்ஸ்-ஐ (Ceramic Diaphragms) கொண்டுள்ளது; மறுகையில் இயர் ஏ ஆனது PMI + TPU-ஐ கொண்டு உள்ளது.

நத்திங் இயர் ஆனது தூசி மற்றும் ஸ்பிளாஷ் (Dust and Splash) எதிர்ப்பிற்க்கான ஐபி54 ரேட்டிங் (IP54 Rating) உடன் வருகின்றன. இதன் சார்ஜிங் கேஸ் ஆனது ஐபி55 ரேட்டிங்கை (IP55 Rating) கொண்டுள்ளது. மறுகையில் உள்ள நத்திங் இயர் ஏ-வின் இயர்பட்கள் ஆனது அதே ஐபி54 ரேட்டிங்கை கொண்டிருந்தாலும் கூட, இதன் கேஸ் ஐபிஎக்ஸ்2 ரேட்டிங்கை (IPX2 Rating) மட்டுமே கொண்டுள்ளது.

நத்திங் இயர், நத்திங் இயர் ஏ-வின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் நத்திங் இயர் மாடல் ரூ.11,999 க்கும், நத்திங் இயர் ஏ மாடல் ரூ.7,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு இயர்பட்ஸ்களுமே வருகிற ஏப்ரல் 22 முதல் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக விற்பனைக்கு வரும் மற்றும் இன்றே (ஏப்ரல்.18) ப்ரீ-ஆர்டர் (Pre-order) செய்ய கிடைக்கும்.

நத்திங் இயர் மற்றும் நத்திங் இயர் ஏ ஆகிய இரண்டும் பிளாக் (Black) மற்றும் ஒயிட் (White) என்கிற வழக்கமான கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. ஸ்பெஷலாக நத்திங் இயர் ஏ மாடலானது (மூன்றாவது நிறமாக) யெல்லோ (Yellow) கலர் ஆப்ஷனிலும் அறிமுகமாகி உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Ear For Rs 11999 and Ear A For Rs 7999 Launched in India Flipkart Sale Starts From April 22
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X