ராக்கி மட்டும் கட்டினா தங்கச்சி திட்டும்! இப்படி பண்ணுங்க.. மறக்கவே மாட்டாங்க!

|

பாசமலர் முதல் தொடங்கி சமுத்திரம், சிவகாசி, வேதாளம் வரையிலாக பல வகையான அண்ணன் - தங்கை சென்டிமெண்ட் திரைப்படங்களை (கூட திருவிழா கணக்காக) கொண்டாடிய நம் அண்ணன்களுக்கு ரக்ஷா பந்தன் (Raksha Bandhan) வந்தால் தான் தங்கைகளின் மீது பாச மழை பொழிய வேண்டும் என்கிற அவசியமே இல்லை!

ஆனாலும் கூட, ரக்ஷா பந்தன் கொஞ்சம் ஸ்பெஷலான தினம் அல்லவா? அந்நாளில் உங்கள் தங்கைக்கு நீங்கள் எதாவது பரிசளிக்க வேண்டும் அல்லவா? - உங்களுக்கு இல்லை என்றாலும்... தங்கச்சி ஆசைப்படும்ல!

எப்படிப்பட்ட தங்கைக்கு என்னென்ன பரிசுகள் வாங்கி கொடுக்கலாம்?

எப்படிப்பட்ட தங்கைக்கு என்னென்ன பரிசுகள் வாங்கி கொடுக்கலாம்?

(முன்குறிப்பு: கிஸ்பாட் தமிழ் ஆனது தொழில்நுட்ப செய்திகளை வழங்கும் வலைத்தளமாகும் என்கிற காரணத்தினால் இக்கட்டுரையில் நாம் கேஜெட்களை (Gadgets) பற்றி மட்டுமே பேசப்போகிறோம்)

எல்லோருக்குமே ஒரே மாதிரியான பரிசுகளை வாங்கி கொடுக்க முடியாது. சிலருக்கு 'பிங்க்' கலர் பிடிக்கலாம்; சிலருக்கு 'பிளாக்' பிடிக்கலாம். இப்படி ஒவ்வொருவருமே வேறுபட்ட விருப்பங்களை கொண்டுள்ளனர்.

குழப்பம் ஆரம்பிக்கும் இந்த இடத்தில் தான், சில புரிதல்களும் பிறக்கும். சரி வாருங்கள் எப்படிப்பட்ட தங்கைக்கு என்னென்ன பரிசுகள் வாங்கலாம் என்று பார்ப்போம்.

முதலில் என்னென்ன வாங்கி கொடுக்கலாம் என்று பார்ப்போம். பின்னர் சரியாக எந்த தயாரிப்பை / எந்த பொருளை வாங்கி கொடுக்கலாம் என்று பார்ப்போம்!

அட! ரூ.2000-க்குள் இப்படிலாம் கூட மொபைல் போன் கிடைக்குமா? சொல்லவே இல்ல!அட! ரூ.2000-க்குள் இப்படிலாம் கூட மொபைல் போன் கிடைக்குமா? சொல்லவே இல்ல!

நீண்ட காலமாக சாதாரண கடிகாரத்தை பயன்படுத்துகிறாரா?

நீண்ட காலமாக சாதாரண கடிகாரத்தை பயன்படுத்துகிறாரா?

ஆம் எனில், அவருக்கு ஒரு ஸ்மார்ட் வாட்ச்சை வாங்கி கொடுக்கவும் .இப்போதெல்லாம், ஸ்மார்ட் வாட்ச்கள் ஹார்ட் ரேட், ப்ளட் சுகர் லெவல், ஸ்டெப்ஸ் கவுண்ட் மற்றும் பலவற்றை கண்காணிக்க உதவுகிறது.

ஒட்டுமொத்தமாக ஒருவரின் ஆரோக்கியத்தை கண்காணிப்பதற்கான ஒரு சிறந்த கருவியாகும். உங்கள் உடன்பிறந்தவர்களின் மீதான உங்கள் அக்கறையை வெளிப்படுத்த ஸ்மார்ட்வாட்ச் ஒரு சிறந்தபரிசு ஆகும்.

எப்போது பார்த்தாலும் புத்தகத்தோடு சுற்றுவாரா?

எப்போது பார்த்தாலும் புத்தகத்தோடு சுற்றுவாரா?

ஆம் எனில், அவருக்கு ஒரு அமேசான் கிண்டில் வாங்கி கொடுங்கள்! உங்கள் சகோதரிக்கு வாசிப்பதில் அதிக விருப்பம் இருந்தால், அமேசான் கிண்டில் தான் அவருக்கு நீங்கள் வழங்கக்கூடிய சிறந்த பரிசு ஆகும்.

இது பேக்லிட் சப்போர்ட் உடனான 6-இன்ச் இ-இங்க் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. கிண்டில் ஷாப்பில் இருந்து நீங்கள் பதிவேற்றம் செய்யக்கூடிய அல்லது "வாங்கக்கூடிய" ஆயிரக்கணக்கான புத்தகங்களையும் இதில் சேமிக்க முடியும்.

Google-ல் அசத்தல் அம்சம்; இனி Google-ல் அசத்தல் அம்சம்; இனி "Reached Safely" மெசேஜ் அனுப்ப வேண்டிய அவசியமே இல்ல!

புகைப்படங்கள் எடுப்பதில் அதிக ஆர்வம் உள்ளவரா?

புகைப்படங்கள் எடுப்பதில் அதிக ஆர்வம் உள்ளவரா?

ஆம் எனில், சில கேமரா ஆக்சஸெரீஸ்களை வாங்கி கொடுக்கலாம். உங்கள் சகோதரிக்கு போட்டோ எடுப்பது அல்லது செல்பீ எடுப்பதில் அதிக ப்ரியம் என்றால், அவருக்கு நீங்கள் ஏதாவது ஒரு கேமரா கியர்-ஐ பரிசாக கொடுக்கலாம்.

அதாவது செல்பீ எடுக்க்க உதவும், ஒளிநிலைமைகளை சரிசெய்யும், கேமராவை சிறந்த கோணத்தில் நிலைநிறுத்தும், மொபைல் போனை சுழல அனுமதிக்கும் பல கேமரா ஆக்சஸெரீஸ்கள் சந்தையில் உள்ளன. அவற்றில் ஒன்றை வாங்கி கொடுக்கலாம்.

சரி வாருங்கள், சரியாக எந்த தயாரிப்பை வாங்கி கொடுக்கலாம் என்று பார்க்கலாம்!

Amazon Echo Show 5-ஐ வாங்கி கொடுக்கலாம்!

Amazon Echo Show 5-ஐ வாங்கி கொடுக்கலாம்!

அமேசானின் எக்கோ ஷோ 5 - ஒரு ஸ்மார்ட் ஸ்பீக்கர் ஆகும். இதில் 5.5 இன்ச் அளவிலான டிஸ்பிளே உள்ளது. ஆக இதை கொண்டு நீங்கள் வீடியோக்களையும் பார்க்க முடியும்.

மேலும் இந்த ஸ்பீக்கரில் வீடியோ கால்களுக்கான 2 மெகாபிக்சல் செல்பீ கேமராவும் உள்ளது. அமேசான் எக்கோ ஷோ 5 ஆனது ரூ.4,499 என்கிற ஆரம்ப விலையில் வாங்க கிடைக்கிறது.

JBL Flip 4-ஐ வாங்கி கொடுக்கலாம்!

JBL Flip 4-ஐ வாங்கி கொடுக்கலாம்!

உங்கள் தங்கை ஒரு ம்யூசிக் லவ்வர் என்றால், அவருக்கு JBL Flip 4-ஐ பரிசளிக்கலாம். இது ஒரு பார்ட்டி ஸ்பீக்கர் ஆகும். இது ஸ்மார்ட் ஸ்பீக்கர் அல்ல என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்.

அமேசானில் இது ரூ.5,998 க்கு வாங்க கிடைக்கிறது. கடினமான வடிவமைப்பை கொண்டுள்ள இந்த ஸ்பீக்கர் ஐபிஎக்ஸ் 7 மதிப்பீட்டுடன் வருகிறது; அதாவது இது "நீர்ப்புகா" தன்மையுடன் வருகிறது.

OnePlus Bullets Wireless Z2-வை வாங்கி கொடுக்கலாம்!

OnePlus Bullets Wireless Z2-வை வாங்கி கொடுக்கலாம்!

யாரையும் தொந்தரவு செய்யாமல் இசையை அனுபவிக்க வேண்டும் என்று எண்ணும் தங்கைக்கு, நெக்பேண்ட் ஸ்டைல் இயர்போன்களையும் பரிசளிக்கலாம்.

உங்கள் பட்ஜெட் ரூ.2,000 க்கு குறைவாக இருந்தால், OnePlus Bullets வயர்லெஸ் Z2-ஐ வாங்கி கொடுக்கலாம். இதன் விலை ரூ.1,799 ஆகும்.

இது மிகவும் வசதியான மற்றும் நாள் முழுவதும் அணியக்கூடிய இயர்போன்கள் ஆகும். விலைக்கு ஏற்ற நல்ல ஒலி அனுபவத்தையும் வழங்குகிறது. சுவாரசியமாக இது ஸ்பிளாஷ் மற்றும் ஸ்வெட்-ரெசிஸ்டன்ட் வடிவமைப்பையும் கொண்டுள்ளது.

வெறும் ரூ.999 & ரூ.844-க்கு இப்படியும் கூட Smart Watch கிடைக்குமா? நம்பவே முடியல!வெறும் ரூ.999 & ரூ.844-க்கு இப்படியும் கூட Smart Watch கிடைக்குமா? நம்பவே முடியல!

Amazfit Bip U Pro-வை வாங்கி கொடுக்கலாம்!

Amazfit Bip U Pro-வை வாங்கி கொடுக்கலாம்!

இது ரூ.4000 க்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட் வாட்ச் ஆகும். Amazfit Bip U Pro மாடலில் இன்-பில்ட் Amazon Alexa ஸ்மார்ட்ஸ், காம்பஸ் மற்றும் ஜிபிஎஸ் போன்ற மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் உள்ளன.

நீண்ட காலமாக உங்கள் தங்கை ஒரு அனலாக் வாட்சையே பயன்படுத்துகிறார் என்றால் அவருக்கு நீங்கள் ஒரு ஸ்மார்ட் வாட்சை வாங்கி கொடுக்க விரும்பினால்... கண்களை மூடிக்கொண்டு Amazfit Bip U Pro-வை பரிசளிக்கலாம்!

Photo Courtesy: Amazon

Best Mobiles in India

English summary
Raksha Bandhan 2022 Best Tech Gifts and Gadgets For Your Sister

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X